28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
22 6308ce4c59a09
Other News

உங்கள் சருமத்தை பளபளக்க கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்துவது எப்படி..?

முகப்பருக்கள், கரும்புள்ளிகள், முக சுருக்கங்கள், முக அழற்சி போன்ற அனைத்து வகையான சரும பிரச்சனைகளையும் தீர்க்கும் ஒரே ஒரு அற்புத சக்தி வாய்ந்த பொருள் இந்த கஸ்தூரி மஞ்சள் ஆகத்தான் இருக்க முடியும். இந்த கஸ்தூரி மஞ்சள் உடலுக்கு உள்ளேயும், வெளியேயும் செயல்பட்டு நமக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கக் கூடிய சக்தியாக பணிபுரிகிறது.

சூரிய ஒளியினால் ஒரு சிலருக்கு முகம் இயற்கை பொலிவினை இழந்து கருத்து காணப்படும். இப்படி கருமையான சருமத்தை கொண்டவர்கள் கஸ்தூரி மஞ்சளை பூசி வர நாளடைவில் உங்களுடைய இயற்கை நிறம் மீண்டு வெள்ளையாக மாறி விடுவீர்கள்.

கஸ்தூரி மஞ்சளை நேரடியாக பயன்படுத்தக்கூடாது, கஸ்தூரி மஞ்சள் பொடியாக அரைக்க நீங்கள் எப்பொழுதும் மஞ்சள் கிழங்கை வாங்கி காய வைத்து மெஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்வது தான் நல்லது. நாட்டு மருந்து கடைகளில் சுலபமாக கிடைக்கும் இந்த கஸ்தூரி மஞ்சள் விலையும் குறைவுதான்.

50 கிராம் கஸ்தூரி மஞ்சள் பொடி 25 ரூபாய் முதல் கிடைக்கிறது. கஸ்தூரி மஞ்சள் நீங்கள் எந்த அளவிற்கு எடுத்துக் கொள்கிறீர்களோ, அதே அளவிற்கு தகுந்த படி பயத்தம் மாவை சேர்க்க வேண்டும். கஸ்தூரி மஞ்சள் மற்றும் பயத்தம் மாவு சேர்த்து குழைத்து முகத்திற்கு பேக் போல போட்டு நன்கு உலர விட்டு விடுங்கள். பத்து நிமிடம் கழித்து முகத்தை நன்கு அலசினால் ரொம்பவே பளிச்சென மிருதுவான சருமம் நமக்கு கிடைக்கும்.

எல்லா விதமான சரும பிரச்சனைகளையும் சரி செய்யக்கூடிய இந்த அற்புதமான குறிப்பை வாரம் ஒருமுறை நீங்கள் பயன்படுத்தி வரலாம். முகப் பருக்கள் அதிகமாக இருப்பவர்கள் இதை பயன்படுத்துவதால் எளிதாக அதிலிருந்து விடுபட முடியும். மேலும் கருத்த தேகம் உடையவர்கள் வெள்ளையாக மாற தினமும் குளிக்கும் பொழுது கஸ்தூரி மஞ்சளை முகத்திற்கு பயன்படுத்தலாம். அலர்ஜி எதிர்ப்பு தன்மை அதிகம் நிறைந்துள்ள இந்த கஸ்தூரி மஞ்சளுடன் பால் சேர்த்து கலந்தும் பயன்படுத்தலாம்.-News & image Credit: maalaimalar

Related posts

பிக்பாஸ் துவங்க முன்னர் அதிரடியாக இடைநீக்கப்பட்ட நடிகர்!

nathan

மற்றவர்களை முட்டாளாக்கக் கூடிய ராசிக்காரர்கள்

nathan

விவாகரத்து செய்கிறாரா நடிகை அசின்-கணவர் கள்ளக்காதல் –

nathan

தமிழக வெற்றி கழகம் என்ற கட்சி பெயருக்கு பின்னால் இருக்கும் ரகசியம்

nathan

தெரிஞ்சா வாயை பிளந்துடுவீங்க..!பிரசாந்த் ஏறாத குதிரையே இல்ல..”

nathan

என் கையை முதன் முதலில் பியானோவில் எடுத்து வைத்தது என் அக்கா தான்…

nathan

உங்கள் உடலின் இந்த 3 பாகங்கள் வலித்தால்… உங்களுக்கு ஆபத்தான கொலஸ்ட்ரால்…

nathan

பணத்தை மூட்டைக்கட்டி அள்ளப்போகும் 3 ராசிகள்

nathan

சந்திரயான்-3 சாதனை திட்டத்தின் பின்னணியில் தமிழர்கள் மிக முக்கிய பங்கு

nathan