23.8 C
Chennai
Wednesday, Dec 25, 2024
ld3943
நகங்கள்

நக அழகு சாதனங்கள்

ஒருவரின் நகங்களை வைத்தே அவரது ஆரோக்கியத்தை அளவிடலாம். நகங்கள் இளம் சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும். வெளிறியோ, மஞ்சள் நிறத்திலோ இருப்பதும், வெண் புள்ளிகளுடன் காணப்படுவதும் அவற்றின் ஆரோக்கியமின்மைக்கான அறிகுறிகள். சருமம் மற்றும் கூந்தல் அழகைப் பராமரிப்பதில் காட்டப்படுகிற அக்கறை, நகப் பராமரிப்புக்கும் அவசியம் என்கிற அழகுக் கலை நிபுணர் ஷீபாதேவி, நக அழகுக்கான பொருட்களைப் பற்றியும் அவற்றைத் தேர்வு செய்யும் போது கவனிக்க வேண்டியவற்றையும் விளக்குகிறார்.

இன்றைக்கு உலகத்தில் மிக அதிகமாக விற்பனையாகிற அழகு சாதனப்பொருட்களில் நெயில் பாலீஷும் ஒன்று. பெண்கள் எப்போதுமே தங்கள் நகங்களை அழகாகவும், நீளமாகவும், ஸ்ட்ராங்காகவும் வைத்துக் கொள்ள நெயில்பாலிஷை நாடுகிறார்கள். நெயில் பாலீஷ் பல வண்ணங்களில் பல வடிவங்களில் வருகின்றது. இவை 20 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகின்றன. ஆரம்ப காலங்களில் ரெட், மெரூன், சில்வர் என சில கலர்களை மட்டும் உபயோகித்தார்கள். ஆனால், இன்றைக்கு மஞ்சள், பச்சை, கருப்பு என பல வண்ணங்களும் ஃபேஷனில் உள்ளன.நெயில் பாலீஷில் பல வகைகள் உள்ளன.

Quick drying Nail polish

இந்த வகை நெயில்பாலீஷ் இரண்டே நிமிடங்களில் உலர்ந்து விடும். மற்ற வகை நெயில் பாலீஷ் உலர்வதற்கு சற்று நேரம் ஆகும்.

Strengthening Nail polish

ஃபைபர் மற்றும் புரதச்சத்துகளை அதிக சக்தி உள்ளதாக மாற்றும். அதன் மூலம் நகம் உடைவதையும், நகம் விரிசலடைவதையும் தடுக்கும். குறிப்பாக டைப்பிஸ்ட், கம்ப்யூட்டர் கீபோர்ட் உபயோகிப்பவர்கள் அடிக்கடி நகங்கள் உடையாமலிருக்க இதை உபயோகிக்கலாம். நெயில் பாலீஷ் Toluene, Formaldehyde, Dibutyl phthalate என 3 முக்கிய ரசாயனங்களின் கலவையால் தயாரிக்கப்படுகிறது.

இந்த வகையான ரசாயனங்களால் புற்று நோய், கருவுறுதல் பிரச்னை, ஹார்மோன் கோளாறுகள், நரம்பு மண்டலப் பிரச்னைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த வகையான நச்சுப் பொருட்கள் பெட்ரோலில் சேர்க்கப்படும் ஒருவகை கலவை. இதனால் சரும எரிச்சல், கண் எரிச்சல், ஒவ்வாமை, சுவாச பிரச்னை என பலதும் வரும். கர்ப்பிணி பெண்கள் இந்த வகையான ரசாயனப் பொருட்கள் சேர்த்த நெயில் பாலீஷை உபயோகித்தால், தலைவலி வர வாய்ப்புள்ளது.

மற்றும் நகங்களைச் சுற்றி இருக்கும் சருமம் தடித்தும், வறண்டு, சொரசொரப்பாகவும் மஞ்சள் நிறமாகவும் மாறி விடும். சில வகை நெயில் பாலீஷ்களில் non-toxic எனக் குறிப்பிடப்பட்டாலும், அவற்றிலும் ரசாயனக் கலப்பு கட்டாயம் இருக்கும். இதில் film-foaming agent, nitro cellulose போன்ற கெமிக்கல்கள் சேர்க்கப்படுகிறது. இந்த வகையான ரசாயனம் பெயின்டுகளில் சேர்க்கப்படுவது.

Water-based Nail polishல் கெமிக்கல் இல்லை என்று சொன்னாலும் அதிலும் nitrocellulose-auto painting கலவை சேர்க்கப்படுகிறது. மேலும் இதில் நிறமி உங்கள் நகங்களில் இருக்கும் இயற்கை நிறத்தை எடுத்து விடுவதால் நகங்கள் உடைந்தும் மஞ்சள் நிறத்திற்கு மாறி விடுகிறது.

நெயில் பாலீஷ் ரிமூவர்

நெயில் பாலீஷ் உபயோகிப்பதைப் போலவே பழைய நெயில் பாலீஷை அகற்ற நெயில் பாலீஷ் ரிமூவர் உபயோகிப்பதும் அதிகமாகவே இருக்கிறது. நெயில் பாலீஷ் தயாரிக்கப்படும் அதே கலவையை இன்னும் அதிகமாக சேர்த்து நெயில் பாலீஷ் ரிமூவர் தயாரிக்கப்படுகிறது. இதில் Acetone, Non acetone என இரண்டு வகை உள்ளது. Acetone மிகவும் ஸ்ட்ராங்காக இருக்கும். எளிதில் நெயில் பாலீஷை எடுத்து விடும். ஆனால், இது மிகவும் கெடுதலானது. நகங்களிலும் நகத்தை சுற்றியும் இருக்கும் சருமத்திலும் இயற்கையான ஈரப்பதத்தைக் கெடுத்து விடும். சில நேரங்களில் நகத்தைச் சுற்றி வெள்ளையாக தெரியும். அது Acetone வகை ரிமூவரை அதிகமாக உபயோகித்ததன் அறிகுறியே.ஃபார்மால்டிஹைடு நிறைந்த ரிமூவர்களை தவிர்க்கவும். Acetone கலந்த ரிமூவரை தொடர்ந்து உபயோகித்தால் நகங்கள் பாதிக்கப்படும். நகங்கள் சொரசொரப்பாகும். உடையும். நகங்களின் இயற்கை நிறம் மாறி விடும்.

நெயில் பாலீஷ் ரிமூவர் இல்லாத போது…

வினிகர் மற்றும் எலுமிச்சைச்சாறு இரண்டையும் சம அளவு எடுத்து ஒன்றாகக் கலக்கவும். அதற்கு முன் வெறும் தண்ணீரில் நகங்களை 7 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு காட்டனில் வினிகர்-எலுமிச்சை கலவையை நனைத்து நகத்தைச் சுற்றி மூடவும். இதை 20 நிமிடங்கள் அப்படியே வைத்துத் துடைக்கவும். தொடர்ச்சியாக நெயில் பாலீஷ் உபயோகிப்பதால் ஏற்படும் பாதிப்பினை இதன் மூலம் குறைக்கலாம்.

டியோடரன்டை ஸ்பிரே செய்து காட்டன் வைத்துத் துடைத்தால் நெயில் பாலீஷ் நீங்கிவிடும்.பாடி ஸ்பிரேயை கைக்குட்டை அல்லது நாப்கின் வைத்து துடைத்தாலும் நீங்கிவிடும்.

ஹேர் ஸ்பிரேயை காட்டனில் ஸ்பிரே செய்து துடைக்கலாம். நெயில் பாலீஷை அகற்றியதும் வேப்பிலையை வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு கையை ஊற வைத்துக் கழுவவும் அல்லது சிறு துளி நல்லெண்ணெயை நகத்தைச் சுற்றி தடவிக் கொள்ளுங்கள்.

நகங்களின் ஆரோக்கியத்துக்கு…

நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளை நகங்கள் காட்டிக் கொடுத்து விடும். நகத்தை பாதுகாப்பது அழகுக்காக மட்டுமல்ல…ஆரோக்கியத்துக்கும் நல்லது.

1. நகங்களை வெட்டுவது தனி கலை. ஈரமாக இருக்கும் போது நகங்களை ஷேப் செய்தால் நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. அதனால், நகங்கள் ஈரமாக இருக்கும் போது வெட்டாதீர்கள்.

2. ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடு செய்து அதை நகங்களில் தடவி மசாஜ் செய்து கழுவவும். தினமும் செய்தால் நகங்கள் வளரும்.

3. 3 அல்லது 6 மாதங்களுக்கு ஒரு முறை மருதாணி வைப்பது நல்லது.

4. தினமும் நெயில் பாலீஷ் போடுவதை தவிர்க்கவும்.

5. கிளிசரின் மற்றும் எலுமிச்சைச்சாறு கலந்து அதை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவவும்.

6. பாதாம் எண்ணெயை சூடு செய்து நகங்களில் மசாஜ் செய்து கடலை மாவை பேக் மாதிரி போட்டு சிறிது நேரம் கழித்து கழுவி வரவும். நகங்கள் பளப்பளப்பாக வளரும்.

7. நகத்தை பற்களால் கடிக்காதீர்கள்.

8. துணி துவைக்க தரமான சோப் உபயோகிக்கவும். வேலை முடிந்தவுடன் கைகளை கழுவி, மாய்ச்சரைசர் தடவவும்.

9. நகங்கள் வளராமல் இருப்பவர்கள் மாதம் ஒரு முறை பெடிக்யூர், மெனிக்யூர் செய்யுங்கள். கை, கால்களை நன்றாக மசாஜ் செய்வதால் நகங்கள் நன்றாக வளரும்.

10. ஒரு சிலருக்கு நகங்கள் மிகவும் மெலிதாகவும் வளராமலும் உடைந்து போகும். அவர்கள் ஆலிவ் எண்ணெயில் வைட்டமின் ஈ கேப்ஸ்யூலை உடைத்துச் சேர்த்து கலந்து தடவி வரலாம்.

11. நகங்கள் அழகாகவும், உறுதியாகவும் இருக்க புரோட்டீன் மற்றும் சத்துள்ள உணவை சாப்பிடவும். நகத்தின் வளர்ச்சிக்கு கரோட்டீன் என்ற புரதச்சத்துதான் காரணம். புரதம், வைட்டமின் ஏ, கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடவும். பழம், காய்கறிகளை சாப்பிடுவது பளபளப்பு தரும். துத்தநாகம், வைட்டமின் ‘பி’ உணவில் சேர்த்துக்கொள்ளவும். இரும்புச்சத்து குறைவதால் நகங்கள் உடையும். பட்ைட
பட்டையாக பிரியும். தினமும் 10 டம்ளர் தண்ணீர் குடிக்கவும். பழச்சாறு குடிப்பதும் நகத்திற்கு வலிமை தரும்.

ld3943

Related posts

உங்களுக்கு தெரியுமா நகம் உடைவதைத் தடுக்க உதவும் நம்பகமான 7 வழிகள்!!!

nathan

நெயில் பாலிஷ் போடும் போது கவனிக்க வேண்டியவை

nathan

நகம் பராமரிப்பு

nathan

சருமம் எப்போதும் இளமையாக இருக்க தேங்காய்!….

sangika

நகங்கள் விரைவாகவும் நீளமாகவும் வளர சில எளிய வழிமுறைகள் !…

sangika

உடையாத நீளமான நகம் வேண்டுமா?

nathan

நகங்கள் உடையாமல் நீளமாக வளர டிப்ஸ்

nathan

நகங்கள் உடைந்து போகுதா கவலையை விடுங்க

nathan

நகங்களும் சுவாசிக்கும் உங்கலுக்கு தெரியுமா?

nathan