23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
ld3949
ஃபேஷன்

லெஹங்கா!

5 வண்ணங்களில் இந்த சீசனுக்கான மிகச் சிறந்த திருமண லெஹங்காவை அறிமுகப்படுத்துகிறார் ஃபேஷன் ஸ்டைலிஸ்ட்

சிவப்பு

சரி சரி ‘போரிங்க்’என்று நீங்கள் அலுப்புடன் கூச்சல் போடுவதற்கு முன்பாகவே உங்கள் அனைவருக்கும் சொல்லி விடுகிறோம். சிவப்பு ஈடு இணையற்ற வண்ணமாக இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முதலாவது இந்த வண்ணம் பாரம்பரியமாக இந்தியாவில் ராசியாகக் கருதப்படுகிறது. இரண்டாவது இந்தியர்களின் சருமத்திற்கு சிவப்பு பளிச்செனத் தெரியும். அதோடு, பல வகை நகைகளுக்கு சிவப்பு வண்ணமே சரியாகப் பொருந்தும் என்பதால் இந்தப் பண்டிகை சீசனுக்கு சிவப்பை நினைவில் கொள்ளுங்கள்!

ஆரஞ்சு

திருமணத்திற்கான லெஹங்காக்கள் தேர்வு செய்யும் போது ஆரஞ்சுதான் இப்போதைய ஃபேஷன். ஒளிரும் இந்த ஷேட் நாட்டின் திருமணச் சந்தைகளில் சக்கைப்போடு போடுகிறது. இதற்குக் காரணம் மணமகளை இன்னும் கூடுதல் அழகுடனும் நேர்த்தியுடனும் தோன்ற வைக்கும் இதன் வித்தியாசமான குணம்தான். ஆரஞ்சு லெஹங்காவுடன் தங்க நகைகளை அணிந்து கொண்டு பாருங்கள். திருமணம் முடிந்த பிறகும், பல ஆண்டுகளுக்கு உங்களைப் பற்றியே வந்திருந்தவர்கள் பேசிக் கொண்டிருப்பார்கள்!

பாவ்யா சாவ்லா

வோனிக் இணை நிறுவனரும், முதன்மை ஸ்டைலிஸ்டுமான பாவ்யா சாவ்லா, இமேஜ் ஆலோசகர் மற்றும் ஃபேஷன் ஸ்டைலிஸ்ட்டும் கூட! பெர்ஃபெக்ட் 10 இமேஜ் கன்சல்டன்சி நிறுவனரும் இவரே. இவருடைய ஆளுமை மற்றும் ஆற்றல் காரணமாக, அசத்தலான தோற்றத்தைப் பெற எண்ணுவோருக்கு உதவுவதன் மூலம் அவர்களுடைய வாழ்க்கையில் சுயமரியாதையையும் தன்னம்பிக்கையையும் விதைக்கிறார். இமேஜ் டிசைனிங், வார்ட்ரோப் அப்லிட்மென்ட், பெர்சனல் ஷாப்பிங் ஆகியவை இவர் தனி நபர்களுக்கும், நிறுவனங்களுக்கும் வழங்கும் சேவைகள்.

ஆட்கள் மீதுள்ள விருப்பமே அவரை ஃபேஷன் டிசைனிங் கற்றுக் கொள்ளத் தூண்டியது. இதன் காரணமாகவே புது டெல்லி பேர்ல்
அகாடமியில் தேவையான தொழில்நுட்பப் பயிற்சிகளை மேற்கொண்டார். ஃபேஷன் மற்றும் உடைகள் துறையில் பத்து ஆண்டுகள் அனுபவத்தைத் தொடர்ந்து இமேஜ் கன்சல்டிங் நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கினார். இமேஜ் கன்சல்டன்ட் நிபுணர்கள் சங்கத்தின் தர மதிப்பீடு சான்றிதழையும் பெற்றுள்ளார்.”உங்கள் பணி, சமூக, தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருப்பினும், நீங்கள்தான் உங்களுக்கான பிசினஸ் கார்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நீங்கள் எப்படி உங்களைக் காட்சிப்படுத்திக் கொள்கிறீர்களோ, அதுதான் உங்களைப் பற்றிய மதிப்பீடாகும். இது உங்களின் கௌரவத்திலும் வெற்றி நிலைகளிலும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், ஒவ்வொருவரும் தன்னிடம் உள்ள தனித்துவமான ஆதாரங்களை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே” பாவ்யாவின் கருத்தாகும். தங்களது தோற்றத்தை மேம்படுத்துவதுடன், தொடர்புத் திறனையும் நம்பிக்கையுடன் விரிவுபடுத்தி, சிறப்பான முறையில் கவனத்தை ஈர்க்க வேண்டுமென்று எண்ணுவோருக்கு வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் செயல்பட்டு போதிய ஊக்கத்தையும் ஆற்றலையும் வழங்க வேண்டும் என்பதே இவரது நோக்கம்.

தங்கம்

சொத்துகளைப் பற்றி எண்ணும் போது உடனே தங்கத்தின் வண்ணம்தான் நினைவிற்கு வரும். மணப்பெண்ணாக ஜொலிக்க வேண்டுமென உண்மையிலேயே விரும்பினால் இந்த ஆடம்பர வண்ணத்துக்கு மாறுங்கள். ஏனைய அணிகலன்களைச் சற்று எளிமையாக அணிந்து கொள்ளுங்கள். அப்போதுதான் தங்கத்தின் நிறம் பளிச்சிடும்!

பிங்க்

பல ஆண்டுகளாக பிங்க் வண்ணம் இந்திய மணப்பெண்களிடையே பிரபலமாகி வருவதற்குப் பல காரணங்கள் உண்டு. பிங்கின் மென்மையான ஷேட்கள் மிருதுவாக, பட்டுப்போல ஒளிரும். இன்னும் அசத்தலாகத் தோற்றமளிக்க வேண்டுமெனில் ஃபூஷியா போன்ற அழுத்தமான ஷேட்கள் உங்களுக்கு இன்னும் பொருத்தமாக இருக்கும்.

நீலம்

நிச்சயமாக இந்த வண்ணம் உங்கள் நிச்சயதார்த்தத்திற்கோ, வரவேற்பிற்கோ அல்ல. உங்கள் திருமணத்திற்கான லெஹங்காவிற்குத்தான். இன்றைய ஃபேஷன் விரும்பிகளுக்குக் குறிப்பாக மணமகளின் தேர்வு நீலம்தான். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் இது பாரம்பரியமாக இல்லையென நீங்கள் எண்ணினால், நீல லெஹனா ஸ்கர்ட்டுடன் சிவப்புச் சோளி அல்லது சிவப்பு பிரைடல் துப்பட்டா அணிந்து கொள்ளுங்கள். இந்தத் திருமண சீசனின் அசத்தலான மணப்பெண் நீங்கள் மட்டும்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ld3949

Related posts

எப்போதும் மவுசு குறையாத காட்டன் சர்ட்டுகள்

nathan

இளநங்கையர் விரும்பும் எடை குறைந்த வைர நகைகள்

nathan

பெண்கள் விரும்பி அணியும் வளையல்கள்

nathan

நீங்கள் எந்த கலரில் சுடிதார் போட்டால் அசத்தலாக தெரியும்

nathan

பெண் குழந்தைகளுக்கு புதிய பெஸன்!

sangika

ஆடைகளின் அரசி சேலை

nathan

நவீன மங்கையர் விரும்பும் டியூனிக் குர்தாக்கள்

nathan

நீளமான ஃப்ராக் – மீண்டும் வந்ததுள்ள இன்றைய ஃபேஷன்

nathan

முதுமையை தள்ளிப்போட முடியுமா?

nathan