இந்த வார இறுதியில் வீட்டில் இறால் செய்ய திட்டமிட்டுள்ளீர்களா? குழம்பு, பொரியல் மற்றும் இறால் 65 செய்து களைப்பாக இருக்கிறீர்களா? எனவே இந்த வாரம் இறால் கொஞ்சம் வித்தியாசமாக செய்து பாருங்கள்.
தேவையான பொருட்கள்:
ஊற வைப்பதற்கு…
* இறால் – 3/4 கிலோ
* இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
* சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
* எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
* கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை
* உப்பு – சுவைக்கேற்ப
வதக்குவதற்கு…
* நறுக்கிய குடைமிளகாய் – 1 கப்
* கறிவேப்பிலை – சிறிது
* நறுக்கிய வெங்காயம் – 1/2 கப்
* சில்லி சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
* சோயா சாஸ் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு பாத்திரத்தில் இறாலைப் போட்டு, அத்துடன் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து பிரட்டி தனியாக ஒரு மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலை சேர்த்து வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயம், குடைமிளகா சேர்த்து நன்கு வதக்கி, பின் சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* அடுத்து, அதில் ஊற வைத்துள்ள இறாலை சேர்த்து நன்கு கிளறி, ஒரு மூடியால் மூடி குறைவான தீயில் இறாலை வேக வைக்க வேண்டும்.
* இரண்டு நிமிடம் கழித்து மூடியைத் திறந்து, இறாலைக் கிளறி விட்டு, மீண்டும் 2 நிமிடம் இறாலை வேக வைக்க வேண்டும்.
* இறால் நன்கு வெந்ததும், அதன் மேல் கறிவேப்பிலையைத் தூவி இறக்கினால், சுவையான சில்லி இறால் தயார்.