mens beauty 003
ஆண்களுக்கு

ஆண்களுக்கான அழகு குறிப்புகள்

1. வேலை நிமித்தமாக வெளியில் சுற்றும் ஆண்களின் முகம் எளிதில் கருத்துவிடும். அவர்கள் ஐஸ் கட்டியை துணியில் கட்டி முகத்திற்கு ஒத்தடம் தர முகம் பொலிவடையும்.

2. வெளியில் அலைவதனால் தலைமுடி உதிர்வதை தடுக்க நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து தலைக்கு தேய்த்து வர முடி உதிர்வது தடுக்கப்படும்.

3 .சிகரெட் குடித்து உதடு கருமையாக இருப்பவர்கள் மாதுளைச் சாறு, புதினா இலையை உதட்டில் தடவி வர உதடு செந்நிறமாகும்.

4. சுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி, இந்த கலவை காய்ந்ததும் முகத்தை கழுவலாம் .

5. தக்காளியை நன்றாக பிசைந்து அதனோடு 4 – 5 துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிக்கொள்ளலாம்.

6.முகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 – 3 வாரங்கள் வரை செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவடைந்திருப்பது கண்கூடாக தெரியும்.

7.சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும்.

8.சீரகம் மற்றும் முள்ளங்கியை ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பிரகாசமாக தோன்றும்.

9.புதினா மற்றும் எலுமிச்சை சாறுகளை கலந்து முகத்தில் தடவலாம்.

10.முட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும்.

11.அன்னாசி பழத்தின் சாறு, தர்பூசிணி மற்றும் பப்பாளி பழ சாறுகளும் சரும நிறத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
mens beauty 003

Related posts

ஆண்கள் அழகை பேணுவதில் கவனம் வேண்டும்!…

sangika

தாடி வளர்கின்ற ஆண்களா நீங்கள்? அப்போ கட்டாயம் இத படிங்க!..

sangika

அழகாக இருக்க நினைக்கும் ஆண்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்!

nathan

கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பாதிப்பு வயிற்றில் உள்ள சிசுவை பாதிக்குமா? : தெரிந்துக் கொள்ளுங்கள்…! ஆ…

nathan

ஆண்களின் ஆளுமையை கூட்டும் பிளாட்டின நகைகள்

nathan

ஆண்களின் தோற்றத்தை மேன்மேலும் அதிகரித்து வெளிக்காட்டும் அன்றாட பழக்கவழக்கங்கள்!தெரிந்துகொள்வோமா?

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க… ‘தாடி’ அழகிற்கு எந்த எண்ணெயை பயன்படுத்தலாம்

nathan

ஆண்களே! இளமையுடன் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமா? அப்ப இத கொஞ்ச

nathan

இது ஆண்களுக்கு மட்டும்: கண்டிப்பாக படிக்கவும்

nathan