27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
7b4251c7 8074 4a3a a4f7 336f3aeaf0e7 S secvpf
சைவம்

தக்காளி குழம்பு

தேவையான பொருட்கள் :

தக்காளி – 2
பெரிய வெங்காயம் – 1
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் – இரண்டு தேக்கரண்டி

தாளிக்க :
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – தேவையான அளவு
கறிவேப்பிலை, உப்பு- கொஞ்சம்

செய்முறை :

* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.

* வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

* வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைவாக வந்ததும் மஞ்சள் தூள் சேர்த்து மிளகாய் தூள் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

* மிளகாய் வாசம் போனதும் அடுப்பை நிறுத்தவும்,,(தேங்காய் சோம்பு சேர்த்து அரைத்தும் சேர்க்கலாம்)

* மிகவும் ஈசியாக செய்யகூடிய தோசை மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட தக்காளி குழம்பு ரெடி.

7b4251c7 8074 4a3a a4f7 336f3aeaf0e7 S secvpf

Related posts

வெண்டைக்காய் மோர் குழம்பு

nathan

பேச்சுலர்களுக்கான சிம்பிளான தவா மஸ்ரூம்

nathan

சுவையான மணத்தக்காளி வத்தக் குழம்பு

nathan

உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பு மோர்க்கூழ்

nathan

பனீர் பிரியாணி

nathan

சுவையான காளான் டிக்கா

nathan

கதம்ப சாதம்

nathan

சாமை அரிசி தேங்காய் சாதம்

nathan

சப்ஜி பிரியாணி

nathan