30.4 C
Chennai
Sunday, Nov 17, 2024
sl3947
சைவம்

பொடி பொடிச்ச புளிங்கறி

என்னென்ன தேவை?

துண்டுகளாக நறுக்கிய வெள்ளை பூசணி – 1 1/2 கப்,
கீறிய பச்சை மிளகாய் – 1,
புளி – எலுமிச்சைப்பழ அளவு,
பொடித்த வெல்லம் – 1 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – 1 டீஸ்பூன்.

வறுத்து அரைக்க…

பச்சரிசி – 2 டேபிள்ஸ்பூன்,
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை.

தாளிக்க…

தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்,
கடுகு – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிது.
எப்படிச் செய்வது?

புளியை 10 நிமிடம் ஊற வைத்து 1 கப் அளவுக்கு எடுத்து கொள்ளவும். அரிசி களைந்து வடிகட்டி வைக்கவும். கடாயை சூடாக்கி அரிசியையும் வெந்தயத்தையும் வாசனை வரும் வரை வறுக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாயை வறுத்து சூடு ஆறியதும் நைஸாக அரைத்துக் கொள்ளவும். பூசணிக்காயுடன் புளிக்கரைசல் மற்றும் 1 கப் தண்ணீர் ஊற்றி, மஞ்சள்தூள், உப்பு, பச்சை மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு வேக வைக்கவும். பின் வெல்லம் சேர்த்து 3 முதல் 4 நிமிடம் வரை வேக வைக்கவும். வறுத்த பொடியை 1 கப் தண்ணீரில் கலந்து அதையும் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்த கலவையை 3-4 நிமிடம் மிதமான தீயில் வைத்து கொதித்தபின் இறக்கி, சிறிது எண்ணெயை சூடாக்கி கடுகு சேர்த்து வெடித்ததும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அதை கலவையுடன் சேர்க்கவும்.

sl3947

Related posts

சத்துக்கள் நிறைந்த கீரை சாதம் செய்வது எப்படி

nathan

சுவையான பச்சை பயறு மசாலா

nathan

ஆந்திரா ஸ்டைல் கீரை மசியல்

nathan

வெண்டைக்காய் – ஓமம் மோர்க் குழம்பு

nathan

முருங்கைக்காய் அவியல் செய்வது எப்படி

nathan

வெந்தயக்கீரை சாம்பார்

nathan

புளியோதரை

nathan

கத்தரிக்காய் குழம்பு

nathan

அரிசி ரவை கீரை கொழுக்கட்டை

nathan