12112704107031
சிற்றுண்டி வகைகள்

பட்டர் கேக்

என்னென்ன தேவை?

மைதாமாவு – 500 கிராம்
சர்க்கரை – 450 கிராம்
முட்டை – 8
பிளம்ஸ் – சிறிதளவு
பட்டர் – 500 கிராம் (உருகியது)
வெண்ணிலா – 4 டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் -4 டீஸ்பூன்
முந்திரிக்கொட்டை – சிறிதளவு
எப்படி செய்வது?

முதலில் மிக்ஸ்சியில் சர்க்கரை, முட்டை ஆகியவற்றை போட்டு கரையும் வரை நன்றாக அடிக்கவேண்டும். ஒரு வாணலியில் உருக்கிய பட்டர் அடித்த சர்க்கரை முட்டை கலவை ஆகியவற்றை போட்டு நன்றாக கேக் அடிக்கும் பீட்டரினால் இருபது நிமிடங்கள் அடிக்கவும்.

தயாரித்த கலவையுடன் மைதாமவு, பேக்கிங் பவுடர் ஆகியவற்றை போட்டு கேக் பீட்டரினால் அடித்து கலக்கவும். அதனுடன் வனிலா பிளம்ஸ் முந்திரி கொட்டை ஆகியவற்றை போட்டு கலக்கவும். அளவான கேக்தட்டில் பட்டர் தடவி அதில் கேக் கலவையை தட்டின் அரை பங்கு உயரத்திற்கு ஊற்றி நன்றாக பரப்பி 250 டிகிரியில் இருபது நிமிடங்கள் அதன் பின்பு 200 டிகிரியில் 25 நிமிடங்கள் பேக் செய்யவும். தயாராகிய கேக்கை விரும்பிய வடிவில் வெட்டி அதனை ஒரு தட்டில் அடுக்கி பரிமாறவும்

1211270410703

Related posts

முட்டை பணியாரம்!

nathan

ஹெல்த்தி மிக்ஸர்! ஈஸி குக்!

nathan

சத்து நிறைந்த சாமை மிளகுப் பொங்கல்

nathan

பாசிப்பருப்பு கடையல்

nathan

மணத்தக்காளித் துவையல் செய்ய…..

nathan

மாலை நேர ஸ்நாக்ஸ் காளான் பக்கோடா

nathan

சுவையான… அரிசி சாத கட்லெட்

nathan

சப்பாத்திக்கு சூப்பரான சைடு டிஷ் பட்டாணி கோப்தா

nathan

கோதுமை மாவு சப்பாத்தி

nathan