31.9 C
Chennai
Wednesday, May 28, 2025
medicure 0021
கை பராமரிப்பு

கைகள் மென்மையாக இருக்க மெடிக்யூர்

கை விரல்கள் அழகாக இருக்க வேண்டும் என்றால் அவற்றுக்கு நகப்பூச்சு மட்டும் அடித்தால் போதாது.

கை விரல்களுக்கு நல்ல மசாஜ் கெடுத்து, அவற்றை முறையாகப் பராமரித்து வந்தால்தான் நகங்களும் அழகாகத் தேன்றும்.

அவ்வாறு கைகளை அழகுபடுத்தும் ஒன்றுதான் மெடிக்யூர், இந்த மெடிக்யூர் செய்வதன் மூலம் கைகள் மற்றும் கைவிரல்கள் மென்மையாக இருக்கும்.

குளிர்காலத்திலோ, அல்லது மழைபெய்தாலோ சிலருக்கு விரல் இணைப்புகளில் வலி ஏற்படும்.

இதனை குணப்படுத்துவதற்காகவும் மெடிக்யூர் செய்யலாம்.

என்ன செய்யலாம்?

நெயில் புஷ்ஷர், நெயில் ஃபைலர், நெயில் கிளீனர், ஃபிங்கர் பிரஷ் என மெடிக்யூருக்கு தேவையான சில அடிப்படையான கருவிகள் உள்ளன.

நகங்களை சுத்தப்படுத்த, நகங்களின் இடுக்குகளில் உள்ள அழுக்கை வெளியேற்ற, கியூட்டிகிள் எனப்படுகிற தேவையற்ற சதை வளர்ச்சியை அகற்றவெல்லாம் மேற்சொன்ன கருவிகள் அவசியம்.

முதலில் கைகளை ஊற வைப்பதற்கு முன் கைகளுக்கு பேக் போடுவோம். அதற்கு முன் கைகளில் உள்ள இறந்த செல்களை அகற்ற வேண்டும்.

இறந்த செல்களை அகற்ற டெட் செல் எக்ஸ்போலியேட்டர் எனப்படுவதை, அதாவது, இறந்த செல்களை அகற்றக்கூடிய க்ரீம் இருந்தால் உபயோகிக்கலாம்.

அது இல்லை என்பவர்கள் சீனியை தூளாக்கி கொள்ளவும், பாதாம் எண்ணெய் என ஏதேனும் ஒன்றை எடுத்துக் கைகளில் தடவிக் கொள்ளவும்.

கைகளில் எண்ணெய்ப் பசை இருக்கும் போதே, தூள் செய்த சர்க்கரையை அதன் மேல் வைத்து நன்கு தேய்க்கவும்.

வட்ட வடிவமான மசாஜ் செய்து கைகளில் தேய்த்து குளிர்ந்த தண்ணீரில் கழுவும் போது கைகளில் உள்ள இறந்த செல்கள் வெளியேறி விடும்.

இறந்த செல்கள் வெளியேறினாலே கைகளுக்கு உடனடியாக ஒரு பொலிவு உண்டாகும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். கைகள் மென்மையாகும்.

ஆலிவ் எண்ணெயை மிதமாக சூடுபடுத்தி அதை விரல்களில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் நகங்கள் நன்றாக வளரும்.

மிதமான சூடுள்ள பாலில் பஞ்சை நனைத்து அதை வைத்து நகங்களை தேய்த்து சுத்தப்படுத்தினால், நகங்களில், காணப்படும் அழுக்குகள் நீங்கி நகங்கள் பளபளப்பாகும்.

நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.

தினசரி இரவு படுக்கும் முன், குறைந்தது ஐந்து நிமிடங்களுக்காவது கைகளை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.

அப்படிச் செய்தால், மாய்ஸ்சுரைசர் கைகளில் நன்றாக ஊடுருவி, கைகளை வறட்சியின்றி வைக்கும். மிகவும் சொரசொரப்பாக இருக்கும் கைகளுக்கு மாய்ஸ்சுரைசருடன் சிறிது வேஸ்லினை சேர்த்து தடவினால், இரவு முழுவதும் கைகள் பாதுகாப்பாக இருக்கும்.
medicure 002

Related posts

கைகள் பராமரிப்பு

nathan

அக்குளில் கருமை விடுபட 10 பயனுள்ள குறிப்புகள்!

nathan

அக்குள் கருமையை போக்க இந்த ஒரு பொருள் மட்டும் இருந்தாலே போதுமே!அப்ப இத படிங்க!

nathan

உள்ளங்கைகள் மிருதுவாக இருக்க இந்த டிப்ஸ் எல்லாம் ஃபாலோ பண்ணுங்க

nathan

எப்படி கைகளை சுத்தம் செய்வது?….

sangika

கைகளில் உள்ள சுருக்கங்களை போக்கும் இயற்கை வழிகள்

nathan

கைகளுக்கும் கால்களுக்குமான அழகு சாதனங்கள்!

nathan

கருப்பா இருக்கும் முழங்கையை வெள்ளையாக்க ,beauty tips tamil,beauty tips skin tamil

nathan

கைகளுக்கு இனி மெனிக்யூர் ஸ்பாவை நீங்கள் வீட்டிலேயே செய்யலாம். எப்படி தெரியுமா?

nathan