32.8 C
Chennai
Thursday, Jul 3, 2025
weak hair 1
தலைமுடி சிகிச்சை

உங்களுக்கு முடி அதிகம் கொட்டுதா?

முடி உதிர்தல் என்பது மிகவும் பொதுவாகக் காணப்படும் ஒரு வாழ்க்கை முறைப் பிரச்சனையாகும். இது மழைகாலம், கோடைகாலம், நோயுற்ற நிலைமைகள் மற்றும் குளிர்காலத்தில் பொடுகுத் தொல்லைக்கு வழிவகுக்கும். இந்த காரணிகளுக்கு மேலதிகமாக, கோவிட்-19 தொற்றுநோய் தற்போதைய காலங்களில் அனைத்து வயதினருக்கும் முடி உதிர்தலின் அளவை அதிகரிக்க வழிவகுத்தது. பிந்தைய கோவிட் விளைவுகளில் அதிகப்படியான முடி உதிர்தல் மற்றும் முடியின் தரம் குறைதல் பிரச்சனைகள் உள்ளன. வைட்டமின் ஏ, புரதம், துத்தநாகம், இரும்பு மற்றும் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உள்ளடக்கிய ஒரு நல்ல உணவு ஆரோக்கியமான முடிக்கான முதல் படியாகும்.

Try These Asanas To Get Strong Hair in tamil
இது தவிர, சில வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்வதன் மூலம், ஆரோக்கியமான முடியையும் சருமத்தையும் பெறலாம். யோகா ஒரு சக்திவாய்ந்த செயலாகும். இது முடி ஆரோக்கியம் உட்பட பல நன்மைகளைக் கொண்டுள்ளது மற்றும் தினசரி அடிப்படையில் பயிற்சி செய்வது முடி மற்றும் தோலுக்கு அதிசயங்களைச் செய்யும். முடி உதிர்வைக் குறைத்து ஆரோக்கியமான முடியைப் பெற உதவும் ஐந்து யோகா ஆசனங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வஜ்ராசனம்
வஜ்ராசனம்
செரிமானம் தொடர்பான பிரச்சனைகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு, வஜ்ராசனம் பரிந்துரைக்கப்படுகிறது. இரைப்பை பிரச்சினைகள் மற்றும் பிற செரிமான கோளாறுகள் இந்த ஆசனத்தை பயிற்சி செய்வதன் மூலம் தீர்க்கப்படுகின்றன. இது முடி வளர்ச்சியை பெரிதும் ஊக்குவிக்க உதவுகிறது மற்றும் உணவுக்குப் பிறகு ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை இந்த ஆசனம் செய்வது செரிமானத்தை கணிசமாக மேம்படுத்த உதவுகிறது. அப்படியே இது படிப்படியாக முடி ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது.

அதோ முக ஸ்வனாசனா
அதோ முக ஸ்வனாசனா
பன்னிரண்டு போஸ் கொண்ட சூரிய நமஸ்காரம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கான சிறந்த யோகா ஆசனங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அதோ முக ஸ்வனாசனா இரத்த ஓட்டம் மற்றும் உச்சந்தலையில் ஆக்ஸிஜன் சுழற்சியை மேம்படுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது முடி வளர்ச்சியை நன்கு ஊக்குவிக்க உதவுகிறது. இந்த ஆசனத்தை தினமும் சிறிது நேரம் செய்து வந்தால் முடி உதிர்வை வெகுவாக குறைக்கலாம்.

சிரசாசனம்
சிரசாசனம்
சிரசாசனம் அல்லது ஹெட்ஸ்டாண்ட் ஆசனம் ஒரு தந்திரமான போஸ். இந்த நிலைப்பாடு தலைக்கு இரத்த ஓட்டத்தை அனுமதிக்கிறது. இது உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், வழுக்கையை குறைக்கவும் உதவுகிறது. சிரசாசனம் செய்வதால் முடி உதிர்வதும் குறைகிறது மற்றும் முடியின் தரத்தை மேம்படுத்துகிறது. ஆரம்பத்தில், இந்த ஆசனத்தைச் செய்ய உங்களுக்கு வேறொருவரின் ஆதரவு தேவைப்படலாம்.

மத்ஸ்யாசனம்
மத்ஸ்யாசனம்
மீன் போஸ் என்றும் அழைக்கப்படும் இந்த ஆசனம் நீண்ட, வலுவான மற்றும் பளபளப்பான மேனியுடன் இருக்க விரும்புபவர்கள் தராளமாக முயற்சி செய்யலாம். மீன் போஸ் தலையை பின்னோக்கி இழுப்பதை உள்ளடக்கியது. இது மீண்டும் உச்சந்தலையில் இரத்த ஓட்டம் மற்றும் ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்கிறது. இந்த ஆசன பயிற்சி தினமும் செய்வதன் மூலம், முடி உதிர்தல் மட்டுமின்றி, பெரும்பாலான முடி பிரச்சனைகளிலிருந்தும் நீங்கள் விடுபடலாம்.

பலாசனா
பலாசனா
இந்த ஆசனம் மன அழுத்தம் மற்றும் செரிமான பிரச்சனைகளை சமாளிக்க உதவுகிறது. இந்த பிரச்சனை இரண்டும் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும். பலாசனத்தில் உட்கார்ந்துகொள்வதன் மூலம், தலை மற்றும் முழு உடலிலும் சிறந்த இரத்த ஓட்டம் காரணமாக வயிற்றை சுருக்கி, மன அழுத்தத்தைக் குறைக்கிறது. இதன் காரணமாக முடி உதிர்வைக் கட்டுப்படுத்தலாம். ஒவ்வொரு நாளும் ஏழு முதல் பத்து முறை பலாசனாவை குறைந்தது எட்டு வினாடிகள் பயிற்சி செய்வது முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

Related posts

அழகான கூந்தலுக்கு…

nathan

பெண்களே தலைமுடி உதிர்விற்கு ‘குட்-பை’ சொல்லணுமா? அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

முடி உதிர்வதை தடுக்க குறிப்பு | Tamil Beauty Tips

nathan

முடி கொட்டுவதை நிறுத்த இயற்கை எண்ணெய்

nathan

கூந்தலுக்கு எண்ணெய் அவசியமா?

nathan

முயன்று பாருங்கள்.. வீட்டிலேயே தயாரிக்கலாம்! தலை முடி வளர்ச்சியை தூண்டும் மூலிகை தைலம்.

nathan

ஆண்களே தெரிஞ்சிக்கங்க…இந்த புதிய வழிகள் முடி உதிர்ந்த இடத்திலும் முடி வளர்ச்சியைத் தூண்டும் தெரியுமா?

nathan

கூந்தல் பிரச்சனைகளை போக்கும் தேக்கு விதை எண்ணெய்

nathan

இரவு உறங்கச் செல்வதற்கு முன் தலை முழுவதும் எண்ணெய் மசாஜ் செய்து கொள்வது சிறந்த பலன்களை தரும்

nathan