24.9 C
Chennai
Tuesday, Jan 21, 2025
34536
Other News

நீங்கள் 2ம் எண்ணில் பிறந்தவரா? தெரிந்துகொள்ளுங்கள் !

எண் 2 என்பது மனோகாரகனான சந்திரனுக்கு உரியதாகும். இந்த எண் பெண் தன்மை கொண்டது. எனவே, இந்த எண் ஆதிக்கத்தில் பிறப்பவர்களுக்கு மனோ பலமும், கற்பனைத் திறனும் இயற்கையிலேயே உண்டு. எண்ணின் பலம் குறைந்தால் தன்னம்பிக்கைக் குறையும், மனதில் பல வீண் ஐயங்களும் ஏற்படும். உலகத்தின் கவிஞர்கள் இவர்களே. தங்களின் காரியங்களை பல கோணங்களில் சிந்தித்த பின்பே தொடங்குவார்கள். இதனால் காரிய தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இவர்களது மனத்தின் வேகத்திற்கு ஏற்றவாறு இவரது செயல்களில் வேகம் இருக்காது. எனவே, இவர்களைக் கற்பனைவாதிகள் என்று உலகம் சொல்கிறது. பேசிக் கொண்டிருப்பதில் இன்பம் காண்பவர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பல கோணங்களில், உணர்ச்சிபூர்வமாகப் பேசுவார்கள். சிலர் மிகவும் கஞ்சத்தனமாகப் பணம் சேர்ப்பார்கள்.

வேறு சிலரோ பெரும் செலவாளிகளாக இருப்பார்கள். மனச்சோர்வு வராமல் இவர்கள் பார்த்துக் கொண்டால் செயல்களில் வெற்றி கிடைக்கும். எதிர்காலம் பற்றிய அழகிய கற்பனைகள் இவர்களுக்கு உண்டு. புதிய புதிய கற்பனைகள் இவர்களுக்கு உண்டு. புதிய புதிய எண்ணங்களும், திட்டங்களும் இவர்களுக்குத் தோன்றம். இவர்கள் தண்ணீரால் (பஞ்சபூதம்) குறிக்கப்படுகிறார்கள். எனவே, பெரும் பிடிவாதம் கொண்ட மனிதாராகவோ, அல்லது பயந்து நடுங்கும் கோழைகளாகவோ இருப்பார்கள். எனவே, இவர்கள் தங்களது குறைகளை அறிந்து, அதை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். பெரும் ஓவியர்கள், கலைஞர்கள், பாடகர்கள், இலக்கியவாதிகள் எல்லாம் இந்த எண்ணில் பிறந்தவர்கள்தான். அடுத்தவர்களைக் குற்றம் சொல்லும் குணத்தையும், வீண் டம்பப் பேச்சையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இவர்களுக்குத் துன்பங்கள் தொடர்ந்து வரும்போது தற்கொலை எண்ணம்கூடத் தோன்றும். தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதில் மிகவும் பிரியமுள்ளவர்கள். தண்ணீரில் சிலருக்குக் கண்டங்கள் ஏற்படலாம். எப்படியும் வெளியூர்த் தொடர்பு, வெளிநாட்டுத் தொடர்புகள் ஏற்பட்டு அவற்றின் மூலம் பல நன்மைகள் அடைவார்கள்.

அடுதவர்களுக்குப் பெரிதாக யோசனை சொல்வார்கள். ஆனால் தங்கள் அளவில் குறைவாகவே பயன்படுத்திக் கொள்வார்கள். தெய்வ பக்தியும் உண்டு. தங்களின் செயல்கள் மீதே இவர்களுக்கு பல ஐயங்கள் தோன்றும். சரியாகத் தான் செய்தோமா? இல்லையா? என்று பல தடவை குழம்புவார்கள். இவர் உணர்ச்சி மயமானவ்ரகள். கோபம், பிடிவாம், ஆத்திரம் போன்ற குணங்கள் உண்டு. இக்குணங்களைத் தவிர்த்துக் கொண்டால்தான் மக்களின் மத்தியில் செல்வாக்கு அடையலாம். இந்த எண்காரர்களுக்கு குழந்தை பாக்கியம் நிறைய உண்டு. குறிப்பாக பெண் குழந்தைகள் அதிகம் இருக்கும்.

 

பொதுவாக இவர்களுக்கு தாமதமாகத்தான் திருமணம் நடக்கும். ஒரு சிலருக்கு மிக இளவயதிலேயே திருமணம் நடக்கலாம். பெரும்பாலும் பெண்களால் உதவிகள் கிடைக்கும். சில பெண்களால் இவர்கள் வாழ்க்கையில் பாதிப்பும் உண்டு. காதல் செய்வதில் மிகவும் விருப்பம் உண்டு. வரிவரியாகக் கற்பனைகளை எழுதுவார்கள். ஆனால் சந்தேகக் குணம் நிறைந்துள்ளதால் திருமண வாழ்வு பாதிக்கப்படும். இவர்கள் தியானம், யோகாசனம் போன்ற இயற்கையான பயிற்சிகளை மேற்கொண்டால் வலுவான மனமும், அலை பாயாத எண்ணங்களும் ஏற்படும். விளையாட்டுக்களில் நாட்டம் செல்லும். உள் அரங்க விளையாட்டுக்களை மிகவும் விரும்புவார்கள். எண் பலம் அதிகமானால் இராமனாக இருப்பார்கள்.

 

குறைந்தால் இராவணனாக இருப்பார்கள். தன்னம்பிக்கை பொதுவாகக் குறைவாகவே இருக்கும். பல பொருள்களில் ஒரே நேரத்தில் மனம் செலுத்துவதால் எதையும் அழமாகச் செய்யத் தெரியாது. எந்த நேரத்திலும் வாழ்க்கையில் இடறி விழுந்து விடுவோம் என்ற ஐயம் இருக்கும். எனவே, எச்சரிக்கை உணர்வும் அதிகம் உண்டு. வாழக்கையில் ஆபத்தான முடிவை (ரிஸ்க்) எடுக்கத் தயங்குவார்கள். அலுவலகத்திலும், வீட்டிலும் எந்தப் பணியையும் முழுமையாக மற்றவர்களை நம்பி ஒப்படைக்க மாட்டார்கள். சஞ்சல சுபாவமம், சபல சித்தமும் இவர்களுடன் கூடப் பிறந்தவைகள். வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும், காரணமற்ற கவலைகளினால் தங்களை வருந்திக் கொள்வார்கள்.

 

நடக்கக்கூடாது, நடக்க முடியாத நிகழ்ச்சிகளையெல்லாம் கற்பனை செய்து கொண்டு, இவை நடந்துவிடுமோ என்று எண்ணி எண்ணிக் குழம்புவார்கள். எந்த அளவுக்குத் துணிச்சலாகப் பேசுகிறார்களோ, அந்த அளவுக்கு மனதில் பயம் இருந்துகொண்டே இருக்கும். இவர்களுக்கெனத் தனித்த பண்போ, பழக்கவழக்கமோ இருக்காது. எப்போதும் மற்றவர்களை பார்த்து, அவர்களிடன் நடை உடைகளைப் பின்பற்றுவார்கள். இதனால் இவர்களுடைய இயல்பும், பழக்கவழக்கங்களும் அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கும். தாங்கள் எடுக்கும் முடிவினையும் கூட அடிக்கடி மாற்றிக் கொள்வார்கள். எதைப் பற்றியும் விவாதம் செய்வதில் மட்டும் மிகவும் ஈடுபாடு உண்டு.

 

முக்கிய ஆலோசனை

2ம் எண் சந்திரனுக்கு உரியது. சந்திரன் நன்றாகப் பிரகாசிக்கச் சூரியனின் உதவி தேவை. சூரியன் இல்லையென்றால் சந்திரனுக்குப் பிரகாசமில்லை. மதிப்புமில்லை. அதைப் போன்றே 2ம் எண் வருகிற அன்பர்கள் (பிறவி எண் அல்லது விதி எண்) ஒரு அதாவது ஆலோசகர் ஒருவரை தேர்வு செய்து கொள்ள வேண்டும். அவர் அடுத்த மதம் அல்லது இனத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். இல்லையெனில் இவர்களை அவர் தமது சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வார். சரியான ஆலோசகர் ஒருவரைத் தேர்ந்தெடுத்த பின்பு, அவரின் ஆலோசனைப்படியே தங்களின் காரியங்களைச் செய்து வரவேண்டும்.

 

இதனால் மனதில் தன்னம்பிக்கையும், திட்டமிட்டபடி செயல்களும் உருவாகும். வெற்றிகள் தொடரும். ஆலோசகர் கிடைக்காவிட்டால் அவரவர்களின் இஷ்டப்பட்ட இறைவனின் சன்னிதானம் சென்று (தட்சிணாமூர்த்தி முன்பு சிறப்பானது) உங்களது பிரச்சினைகளைச் சொல்லி இறைவனிடம் பிரார்த்தியுங்கள். உங்களுக்கு இறைவனின் கருணை இயற்கையிலேயே மிக உண்டு. இதன் மூலம் நல்ல வழித் தூண்டுதலும், செயல் முன்னேற்றமும் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

 

திரவ உணவுகளே இவர்களுக்கு மிகவும் பிடித்தமானது. டீ, காபி, பானங்கள் ஆகியவற்றை விரும்பி அருந்துவார்கள். மதுப் பழக்கத்திற்கு அடிமையாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் இவர்களது வாழ்க்கை மதுவாலேயே அழிந்துவிடும்.

தொழில்கள்

இவர்கள் கலை மற்றும் தண்ணீர் தொடர்புள்ள தொழில்களைச் செய்பவர்களாக இருப்பார்கள். திரைப்படம் தயாரிப்பது, பத்திரிகை நடத்துதல் மற்றும் எழுதுதல் ஆகியவையும் ஒத்து வரும். பேச்சாளர்கள், கலைஞர்கள், ஓவியர்கள், பாடல் எழுதுபவர்கள் போன்றவர்களாகவும் இருப்பார்கள். விவசாயம், ஜவுளி வியாபாரம், நகை, வெள்ளி ஆபரணங்கள் விற்பனை, புகைப்படத் தொழில் ஆகிய தொழில்களும் நன்கு அமையும். துணி தைத்தல், துணி வெளுத்தல், மர வியாபாரம், வாசனைத் திரவியங்கள், காய்கறிகள் விற்பனையும் இவர்களுக்கான தொழில்கள். கற்பனை சக்தி அதிகம் உள்ளதால், மனோ வேகம் அதிகமாக இருக்கும். இவர்கள் பேச்சில் வல்லவர்களாக இருப்பதால் வக்கீல் தொழில், வாக்குவாதம் செய்தல் போன்றவையும் ஒத்து வரும்.

 

மனத்தில் சந்தேகமும், அதைரியமும் எப்போதும் இவர்களை வாட்டி வரும். அவற்றை தகுந்த குருவின் மூலம் ஆலோசனைகள் பெற்று நீக்கிக் கொள்ள வேண்டும். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவர்களுக்கும் அரசாங்க உத்தியோகம் யோகம் உண்டு. நீர் சம்பந்தமான மீன் பிடித்தல், படகோட்டுதல் மற்றும் நர்ஸ்கள், ஆயாக்கள் போன்ற வேலைகளும், அடிக்கடி பிரயாணம் செய்யும் தொழில்கள் இவர்களுக்கு ஒத்து வரும். இவர்கள் ஆசை மற்றும் எதிர்பார்ப்புடன் செயலாற்றுவார்கள். அடுத்த தொழில் இலாபம் என்று தொழிலை அடிக்கடி உறுதியுடன் தொடர்ந்து ஒரே தொழிலை வியாபாரத்தை நம்பிக்கையுடன் செய்து வந்தால் வெற்றிகள் நிச்சியம்.

 

கடல் வணிகம் போன்ற தொழில்களிலும் ஈடுபடுவார்கள். இரசாயனம், மருத்துவம், சட்டம், தர்க்கம், தாவர இயல், சரித்திரம், தத்துவம் இவர்களுக்கு பொருத்தமான துறைகள். ஆசிரியர் தொழிலும் நன்கு அமையும். விதி எண்ணும் பெயர் எண்ணும் இவர்களது தொழிலை மாற்றி விடும் வல்லமை பெற்றது.

Related posts

உங்க வீட்டில் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்க வீட்டில் எதிர்மறை சக்திகள் நிறைய இருக்குனு அர்த்தமாம்…

nathan

சூப்பர் சிங்கர் புகழ் அஜய் கிருஷ்ணா தனது மனைவி மற்றும் பிறந்த குழந்தையுடன்

nathan

சுண்டி இழுக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நாயகி மீனா

nathan

நான் அவளோ கஷ்டப் பட்டு இருக்கேன்.! கொந்தளித்த ஜோவிகா.!

nathan

நீங்களே பாருங்க.! வயதுக்குமீறிய ஆடையில் மோசமான போஸ்.! கேவளமாக மெசேஜ் செய்யும் ரசிகர்கள்..

nathan

மகன் தனுஷின் 25வது பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடிய நடிகர் நெப்போலியன்

nathan

7 முறை கட்டாய கருக்கலைப்பு! சீமான் விவகாரத்தில் நடிகை விஜயலட்சுமி

nathan

சற்றுமுன் பிரபல நடிகர் விஜயகாந்த் காலமானார்

nathan

லியோ சக்ஸஸா? இல்லையா?

nathan