29.8 C
Chennai
Sunday, Nov 17, 2024
skin care tips
முகப் பராமரிப்பு

சூப்பர் சாஃப்ட் சருமம் வேணுமா! இதோ ஒரு சிம்பில் டிரிட்மென்ட்

இளமை ஆரம்பிக்கும் போதே கல்லூரி, ப்ராஜெக்ட், வேலை என்று சுற்றி திரிந்து சருமம், வரண்டு சுருகங்களோடு கலை இழந்து காணப்படுவதை ஒவ்வொருவரும் அனுபவத்திருக்க கூடும். இதிலிருந்து உங்கள் சருமத்தை மீட்டு, பாதுகாத்து கொள்ள இதோ சில எளிய டிப்ஸ்..

முதலில் ஸ்க்ரப்:

சுத்தமான சமையல் உப்பை, இரண்டு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யுடன் கலந்து கொள்ளவும். உங்கள் கையை நன்கு கழுவிய பின்னர், நெற்றியிலிருந்து மேலிருந்து கீழாக கலவையை உங்கள் விரல் நுனிகளால் மசாஜ் செய்யவும். கொரகொரப்பான இந்த கலவை சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதோடு மட்டுமல்லாமல். கிருமிகளையும் அழித்து உங்கள் சருமத்தை மிருதுவாகவும், சுத்தமாகவும் மாற்றும்.

அடுத்து ஒரு ஐஸ் கட்டியை எடுத்து முகத்தில் மெதுவாக தேய்த்து விடவும், வேண்டுமென்றால் ஒரு மெல்லிய துணியில் ஐஸை சுற்றி மெல்ல ஒத்தி எடுக்கவும். இதனால் முகத்தில் ஸ்க்ரப் செய்யும் போது, அழுக்கு நீங்கிய துவாரங்கள் மூடிகொள்ளும். இவ்வாறு செய்யாவிட்டால் நீங்கள் வெளியில் சென்றாலே அல்லது வேலைகளில் ஈடுபட்டாலோ அழுக்குகள் திரு‌ம்பவும் சிறு துவாரங்களில் சென்றடைந்து மாறா கரும்புள்ளிகளை உண்டு செய்யும்.

கடைசியாக பேஸ் பேக் தயார் செய்யுங்கள்;

பழுத்த தக்காளி ஒன்றை கைகளால் நன்கு பிசைந்து, அதனுடன் ஒரு ஸ்பூன் சுத்தமான சந்தனம் மற்றும் ‌சிறு துளி எலுமிச்சம் சாறு சேர்க்கவும். இந்த கலவையை மாஸ்க் போல நெற்றியிலிருந்து கழுத்துவரை போடவும். ஈரம் காய்ந்து, முகத்தில் உள்ள மாஸ்க் சுருக்கம் அடைவதற்கு முன்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.

இந்த டிரிட்மென்ட் செய்த நாள், முகத்தில் சோப் ஏதும் போடாமல் இருப்பது நல்லது.
skin care tips

Related posts

இதனால் முகம் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாறும்!…

sangika

சிவப்பு நிறம் பெறனுமா? இந்த ஒரு குறிப்பை தினமும் உபயோகிங்க !!

nathan

கரும்புள்ளிகள் முக அழகை கெடுக்கின்றனவா? இதோ ஸ்ட்ராபெரி பேஷியல்! –

nathan

அழகுக்கு அழகு சேர்க்க அழகு குறிப்புகள் .

nathan

மஞ்சள் பூசிக்கொள்வதால் பயன் உண்டா?

nathan

தினமும் ஒரு துண்டு தக்காளியை முகத்தில் தேய்ப்பதால் பெறும் நன்மைகள்!

nathan

நெற்றியில் விழும் சுருக்கங்கள் மறைய எளிய வழி

nathan

பளீச் அழகு பெற

nathan

பழங்களை பயன்படுத்தி ஃபேஷியல் செய்வது எவ்வாறு….?தெரிந்துகொள்வோமா?

nathan