வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.
* கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
* வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.
* கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
* ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு தேய்த்து வந்தால் முடி கருப்பாகும்.
* காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.
* நவச்சாரத்தை தேனில் கலந்து தடவினால் திட்டாக முடிகொட்டுதலும் புழுவெட்டும் மறையும்.
நல்ல உணவுப் பழக்கத்திற்கும் சருமத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆரோக்கியமான சருமத்தை பெற சில எளிய பழக்கவழக்கங்களை பின்பற்றலாம்.. தினமும் நிறைய தண்ணீர் அருந்த வேண்டும்.
* பச்சைக்காய்கறிகள் அதிக அளவில் உண்ண வேண்டும். வெள்ளரிக்காய், கேரட், தக்காளி, வெண்டைக்காய், பீன்ஸ் போன்ற காய்கறிகளை சாலட் செய்து சிறிது எலுமிச்சை சாறு கலந்து உண்பது மிகவும் நல்லது. இது போல் மோர் குடிப்பதும் சிறந்தது.
* பழங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், மினரல்களை தரும். மாதுளம் பழச்சாறுடன் தேன் சேர்த்து அருந்தினால் இரத்த சோகை ஓடியே போகும். வாழை பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. இது மூளை செயல்பாட்டுக்கு சிறந்தது. ஆரஞ்சு, அன்னாசி பழச்சாறுகளையும் அடிக்கடி அருந்தலாம்.. தியானம், ஆழ்ந்து மூச்சு விடும் பயிற்சி, உடற்பயிற்சி போன்றவற்றை தினமும் செய்ய வேண்டும்.