நல்லெண்ணெய், கடுகெண்ணெய், ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் – இந்த ஐந்தையும் சம அளவு எடுத்து லேசாக சூடாக்கி, தலைக்கு நன்கு மசாஜ் கொடுத்துக் குளிக்கவும். வாரம் 3 முறை இப்படிச் செய்து வந்தால் கூந்தல் உதிர்வு நிற்கும்.
இளநரைக்கு…
அவகடோ ஆயில் 200 மி.லி., அஷ்வகந்தா ஆயில் 100 துளிகள், சுகந்த கோகிலா 100 துளிகள், கறிவேப்பிலை 100, கிராம்பு ஆயில் 50 துளிகள் ஆகியவற்றை கலந்து, முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் இந்தக் கலவையைத் தலையில் தடவி, சிறிது நேரம் ஊறிக் குளிக்கவும். வாரம் 3 முறை இப்படிச் செய்யவும்.
பிசுபிசுப்புக்கு…
கடுகெண்ணெய் 100 மி.லி., ஆலிவ் ஆயில் 100 மி.லி., இவற்றுடன் டீ ட்ரீ ஆயில் 50 துளிகள், ரோஸ்மெர்ரி ஆயில் 50 துளிகள், பேலீஃப் (Bay leaf) ஆயில் 50 துளிகள் ஆகியவற்றையும் கலந்து ஒருநாள் விட்டு ஒருநாள் இரவே தலையில் தடவி ஊற வைத்து மறுநாள் குளிக்கவும்.
தலை நாற்றம் நீங்க…
200 மி.லி. தேங்காய் எண்ணெயில் லெமன் கிராஸ் ஆயில் 100 துளிகள், நெரோலி ஆயில் 100 துளிகள், தைம் ஆயில் 50 துளிகள், ரோஸ் ஆயில் 100 துளிகள் கலந்து தினமும் தலையில் மண்டைப் பகுதியில் படும்படி தேய்த்து ஊற வைத்துக் குளிக்கவும்.
ஹென்னா போடுவதால் ஏற்படும் வறட்சிக்கு…
1 டீஸ்பூன் விளக்கெண்ணெயில் 50 துளிகள் Fenugreek ஆயில், 50 துளிகள் ஜெரேனியம் ஆயில் ஆகியவற்றை ஹென்னா கலவையுடன் சேர்த்து ஊற வைத்து பிறகு உபயோகித்தால் கூந்தல் வறண்டு போவதைத் தவிர்க்கலாம்.
கூந்தல் நுனிப் பிளவுக்கு…
அவகடோ ஆயில் 100 மி.லி.யும் விளக்கெண்ணெய் 100 மி.லி.யும் எடுத்து அதில் 50 மி.லி. தேன், 50 மி.லி. கிளிசரின், Fenugreek ஆயில் 100 துளிகள், ஹைபிஸ்கஸ் ஆயில் 100 துளிகள் எல்லாம் கலந்து வாரத்துக்கு 3 நாட்கள் முடியில் தடவி ஊற வைத்துக் குளிக்கவும்.
வறட்சி நீங்க…
பாதாம் ஆயில் 100 துளிகள், விளக்கெண்ணெய் 100 துளிகள் எடுத்து அவற்றுடன் சாண்டல்வுட் ஆயில் 50 துளிகள், Petitgrain ஆயில் 50 துளிகள், Clarisage ஆயில் 50 துளிகள், லாவண்டர் ஆயில் 50 துளிகள் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் ஊறி அலசவும்.