25.5 C
Chennai
Tuesday, Jan 28, 2025
83a662db 7f4e 495d 8ffa f7a1c90b8917 S secvpf
ஃபேஷன்

நவீனத்திற்கு ஏற்ப மாறிவிடும் புத்தம் புதிய சேலைகள்

இந்திய பெண்கள் விரும்பி அணியும் சேலைகள் பல புதிய வடிவமைப்புக்கு உள்ளாகி வருகிறது. சேலை அணிவதற்கு சுலபமான ஆடை என்ற போதும் அதன் பொலிவை அழகை மேம்படுத்துகின்றன. அதுபோல இந்த சேலைகள் அவ்வப்போது நவநாகரீக முன்னேற்றத்திற்கு ஏற்ப தன்னையும் மாற்றிகொண்டே வருகிறது.

எங்கும் செல்வதற்கு ஏற்ப அதாவது திருமணம் இரவு விருந்து ஷாப்பிங் அலுவலகத்திற்கு செல்ல என அனைத்து நிலையிலும் அணிந்து செல்ல ஏற்றவாறு அதன் வடிவமைப்பும், பொலிவும் மாறுபடுகின்றன. ஆறு கஜம் சேலையின் மீது பெண்களுக்கு இருந்த ஆர்வம் தற்போதைய சேலைகளுக்கு ஏற்ப மாறுபடுகிறது. அதாவது சேலைகளின் பாரம்பரிய வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளன. அப்புது வடிவமைப்பு சேலைகளின் மீது இளைய மற்றும் நடுத்தர பெண்களின் பார்வை விழும் போதும், அதனை அவர்கள் அணியும் போது புதிய பொலிவை தோற்றத்தை பெறுகின்றன.

லெஹன்கா ஸ்டைல் சேலைகள் :

நவநாகரீக பாதைக்கு ஏற்ற புதிய லெஹன்கா ஸ்டைல் சேலைகள் மனதில் இடம் பிடித்துள்ளது. சேலை உடுத்தும் நேரத்தை மிச்சப்படுத்தும் லெஹன்கா சேலைகளில் கூடுதல் மடிப்புகள் மற்றும் கூடுதல் வேலைப்பாடுகள் உள்ளன. கீழ்ப்பகுதி தைக்ககப்பட்ட அமைப்பு என்பதால் அணிவது சுலபம். மிகப்பெரிய பரவலான பிலிட்ன்றே லெஹன்கா சேலையின் அழகு. லெஹன்கா சேலையில் நெட் வகை துணியிலான சேலை தற்போது மிகப்பிரபலமாக உள்ளது.

ஜாக்குவார்ட் சேலைகள் :

பசுமையும், இயற்கை சூழலும் விரும்புபவர்களுக்கு ஏற்றவாறு ஜாக்குவார்ட் சேலைகள் உள்ளன. பாரம்பரிய மற்றும் நவீன வடிவமைப்புடன் தறியில் நெய்யப்படும் டிசைனர் சேலைகள் வருகின்றன. ஜாக்குவார்ட் சேலைகள் இதர துணி வகைகளான ஷிப்பான் மற்றும் டிஸ்யூ இணைந்தவாறும் வருகின்றன. ஹாப் ஹாப் சேலை மாடல் அதிகப்படியான வேலைப்பாடு மற்றும் வடிவமைப்பு கொண்ட பிரமாண்டமான சேலையாக ஜாக்குவார்ட் சேலைகள் திகழ்கின்றன.

லேஸ் சேலைகள் :

பழமையும்,. புதுமையும் இணைந்த சேலை லேஸ் என்ற துணி உலகம் முழுவதும் பல்வேறு நாவாகரீக ஆடை உருவாக்கப்படுகிறது. லேஸ் சேலை என்பது மெல்லிய துணி அதன் மேல் அதே வண்ண துணியால் பூக்கள் வண்ணத்துப்பூச்சி கனமாக நெய்யப்பட்டிருக்கும். அழகிய பிரெஞ்ச் லேஸ் சேலைகள் அனைத்து விதமான பார்ட்டிகளுக்கு அணிய ஏற்ற வகையில் உள்ளது.

அழகிய கவுன் சேலைகள் :

சேலைகள் கவுன் மாதிரியாக மாற்றி அணிவதுதான். அதாவது ஆறு கஜ சேலை கவுன் மாதிரி உருமாற்றி அணிவிப்பது இந்த புதிய சில்ஹவுட் சேலைகள் பள்ளு உடன் வருகின்றன. இரவு விருந்தில் கலந்து கொள்ள செல்பவர்கள் அணிய ஏற்றதாக உள்ளது.

பூ டிசைன் சேலைகள் :

ஷிப்பான் மற்றும் கிரேல் சேலைகளில் அழகிய வண்ண பூக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட சேலைகள் எங்கும் அணிந்து செல்ல ஏற்றதாக உள்ளது. எண்ணற்ற வண்ணங்களில் இப்பூ டிசைன் சேலைகள் கிடைக்கின்றன.

நெட் சேலைகள் :

திருமணம் மற்றும் விழாக்களுக்கு ஏற்றவாறு நெட் துணி வகையில் பிரம்மாண்டமான சரிகை மற்றும் எம்ராய்டரி சேலைப்பாடு செய்யப்பட்ட சேலைகள் அணிபவரின் அழகையும் ஆளுமையும் மேம்படுத்தும் இந்த சேலைகள் கண்கவர் ஒவியமாக திகழ்கின்றன.

வித்தியசமான பிரிண்ட் சேலைகள் :

சாதராணமாக வெளியே செல்ல ஏற்ற விதமாக பெரிய அளவிலான வித்தியசமான வடிவமைப்பு பிரிண்ட் செய்யப்பட்ட சேலைகள் கிடைக்கின்றன. அவை பேக்மேன், மயில், பூனை, கதை சித்திரங்கள் என்றவாறு பிரிண்ட் செய்யப்பட்டு கிடைக்கின்றன. நவீன வடிவமைப்புக்கு ஏற்ப சேலைகள் நவீனமாய் மாறும்போது தற்போதைய மங்கையர் விரும்பி அணிகின்றனர். மேலும் சேலைக்கு என இருக்கும் மவுசு குறையாதவாறு சேலைகள் புதிய மெருகில் பளிச்சிடவே செய்கின்றன.

83a662db 7f4e 495d 8ffa f7a1c90b8917 S secvpf

Related posts

பெண்களே தங்க நகைகளை பராமரிப்பது எப்படி?

sangika

லக லக லெக்கிங்ஸ்!

nathan

பல விதமான வடிவமைப்பில் உலாவரும் ஹேண்ட்பேக்

nathan

ஆர்கானிக் ஆடைகள்

nathan

பெண்களுக்கு அழகு தரும் ஆடைகள்

nathan

‛புடவை எப்பவும் பெஸ்ட் சாய்ஸ்!’ – ராதிகாவின் ஸ்டைல் சீக்ரெட்

nathan

நவீன யுவதியர்களுக்கு புதிய டெனிம் பேண்ட்கள்

nathan

காதலர்களுடன் வெளியே செல்லும் போது இந்த நிற உடையை அணியுங்கள்!…

sangika

முதுமையை தள்ளிப்போட முடியுமா?

nathan