27.3 C
Chennai
Wednesday, Jan 28, 2026
11 1452490975 7 pedicures
சரும பராமரிப்பு

வறட்சியினால் பாதங்களில் உரியும் இறந்த தோல்களை நீக்குவதற்கான சில டிப்ஸ்…

குளிர்காலத்தில் சந்திக்கும் ஓர் பிரச்சனை வறட்சியான சருமம். குளிர்காலத்தில் நம் சருமம் ஈரப்பசையை முற்றிலும் இழந்துவிடும். இதனால் சருமத்தில் தோல் உரிய ஆரம்பித்து, சருமத்தின் அழகே பாழாகும். அதிலும் பாதங்களில் சிலருக்கு அதிகப்படியான வறட்சியினால் குதிகால் வெடிப்பு மற்றும் பாதங்களைச் சுற்றி தோல் உரிய ஆரம்பித்து, அசிங்கமான தோற்றத்தைத் தரும்.

இந்த நிலையைத் தடுப்பதற்கு பலர் கண்ட க்ரீம்களைப் பயன்படுத்துவார்கள். ஆனால் இயற்கை வழிகளின் மூலமே இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். அது என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு பாதங்களில் உரியும் இறந்த தோல்களை நீக்குவதற்கான சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால், குளிர்காலத்திலும் பாதங்களை மென்மையாக வைத்துக் கொள்ளலாம்.

கற்றாழை

இரவில் படுக்கும் போது, கற்றாழை ஜெல்லை பாதங்களில் தடவி நன்கு உலர வைத்து, பின் கால்களில் சாக்ஸ் அணிந்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கால்களைத் தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்வதன் மூலம் பாதங்களில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, பாதங்கள் மென்மையாக இருக்கும்.

தேன்

தேனில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால், இது பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் பாதங்களில் உள்ள வறட்சியைப் போக்க, இரவில் படுக்கும் முன் தேனை பாதங்களில் தடவி மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைதது, பின் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை 5-10 நிமிடம் ஊற வைத்து, பின் சாக்ஸ் அணிந்து படுக்க வேண்டும்

கிளிசரின்

கிளிசரின் மற்றும் எலுமிச்சை சாற்றினை சரிசம அளவில் எடுத்துக் கொண்டு ஒன்றாக கலந்து, அக்கலவையினுள் பாதங்களை வைத்து 20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி தினமும் அல்லது வாரம் 3 முறை செய்து வந்தால், பாதங்களில் உள்ள இறந்த செல்கள் மற்றும் வறட்சி தடுக்கப்பட்டு பாதங்கள் மென்மையாக இருக்கும்.

எப்சம் உப்பு

இந்த உப்பில் மக்னீசியம் அதிகம் உள்ளது. இது சருமத்திற்கு மிகவும் நல்லது. அத்தகைய உப்பை நீரில் கலந்து, வாரம் இரண்டு முறை அந்நீரில் பாதங்களை ஊற வைத்து கழுவி வர, பாதங்கள் சுத்தமாகி மென்மையடையும்.

தேங்காய் எண்ணெய்

தினமும் இரவில் படுக்கும் முன் தேங்காய் எண்ணெயை பாதங்களில் தடவி 15 நிமிடம் மசாஜ் செய்து, பின் கால்களுக்கு சாக்ஸ் அணிந்து வர, பாதங்களில் உள்ள வறட்சி தடுக்கப்பட்டு, பாதங்களும் மென்மையாக இருக்கும்.

ஆலிவ் ஆயில்

3 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, பாதங்களில் தடவி 10 நிமிடம் கழித்து, பாதங்களில் வேஸ்லின் தடவி, சாக்ஸ் அணிந்து கொள்ள வேண்டும். இப்படி தினமும் இரவில் செய்து வந்தால், பாதங்களில் ஈரப்பசை தக்க வைக்கப்பட்டு, பாதங்கள் பிரச்சனையின்றி இருக்கும்.

குளிர்கால பெடிக்யூர்

குளிர்காலத்தில் தினமும் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்த வெதுவெதுப்பான நீரில் கால்களை 10 நிமிடம் ஊற வைத்து, பின் பாதங்களை பிரஷ் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தாலேயே பாதங்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

11 1452490975 7 pedicures

Related posts

பளபள தோலுக்கு பாதாம்

nathan

எண்ணெய் பசை சருமம் உஷார்!

nathan

கண்களைச் சுற்றி இருக்கும் சுருக்கத்தை விரட்ட வேண்டுமா?அப்ப தினமும் செய்யுங்க…

nathan

இயற்கை முறையில் பெண்கள் சரும அழகை மேம்படுத்த சில குறிப்புகள்

nathan

கருப்பா இருக்கும் கழுத்தை வெள்ளையாக்குவது எப்படி?

nathan

சருமத்தில் தேவையற்ற முடி வளர்ச்சியை தடுக்கும் பவுடர்

nathan

பளபளப்பான சருமம் வேண்டுமா?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்ற ‘பேஷியல்’

nathan

கைக்கு வைக்கும் மருதாணியை தலைக்கு மாஸ்க் ஆக போட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan