13 1471075430 4 oliveoil
சரும பராமரிப்பு

இரவில் ஆலிவ் எண்ணெய்யில் மசாஜ் செய்யுங்கள்! சருமம் ஜொலிக்கும்

ஆலிவ் எண்ணெய்யை இரவு தூங்கப்போவதற்கு முன்னர் முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்து மறுநாள் காலையில் முகத்தை கழுவினால் ஏராளமான நன்மைகளை பெறலாம்.

ஆலிவ் எண்ணெயில் தான் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் இயற்கையான ஃபேட்டி ஆசிட்டுகள்(fatty acids) அடங்கியுள்ளன. இந்த எண்ணெய் அனைத்து வகையான சருமத்தினருக்கும் ஏற்ற ஒன்று.

இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்(Antioxidant) பொருள் ஏராளமாக இருப்பதால் தான், இது சரும பராமரிப்பிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆலிவ் எண்ணெய்யில் சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான விட்டமின் ஈ மற்றும் ஏ ஏராளமாக நிறைந்துள்ளது.

எனவே தினமும் இரவில் ஆலிவ் எண்ணெய்யை கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், பாதிக்கப்பட்ட சரும செல்கள் புதுப்பிக்கப்பட்டு, முகம் புத்துணர்ச்சியுடன் அழகாக காணப்படும்.

தழும்புகள் மறையும் முகத்தில் ஏதேனும் தழும்புகள் இருந்து, அதனைப் போக்க வேண்டுமானால், தினமும் இரவில் ஆலிவ் ஆயிலைக் கொண்டு மசாஜ் செய்து வாருங்கள்.

தினமும் ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வதன் மூலம், அதில் உள்ள விட்டமின் ஈ, சரும செல்கள் சீரழிவடைவதைத் தடுத்து, சருமம் விரைவில் முதுமைத் தோற்றம் அடைவதைத் தடுக்கும்.

மேலும் ஆலிவ் எண்ணெய்யில் உள்ள ஸ்குவாலின் அமிலம்(Squalane acid), சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரித்து, சருமம் தளர்வதைத் தடுத்து, இளமையுடன் வைத்துக் கொள்ள உதவும்.

உங்களுக்கு மிகுந்த வறட்சியான சருமம் என்றால், ஆலிவ் எண்ணெய்யை கொண்டு தினமும் இரவில் சருமத்தை மசாஜ் செய்து வாருங்கள். இப்படி தினமும் செய்வதன் மூலம், சரும வறட்சி ஏற்படுவதைத் தடுக்கலாம்.

பொதுவாக மசாஜ் செய்தால் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதிலும் தினமும் இரவில் ஆலிவ் எண்ணெண் கொண்டு முகத்தை மசாஜ் செய்து வந்தால், முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து, பொலிவான முகத்தைப் பெறலாம்.04 1475565297 4 oliveoil

Related posts

உடலில் உள்ள முடிகளை அகற்றி வழுவழுப்பாக மாற்றி சருமத்தை அழகாக்கிக் கொள்ள!…

nathan

இந்த 5 பழங்களும் உங்கள் அழகை அதிகப்படுத்தும்!! எவையென்று தெரிஞ்சுக்கனுமா?

nathan

சன் ஸ்கிரீன்

nathan

உப்பு தண்ணீரில் குளிப்பதால் கிடைக்கும் 10 நன்மைகள்!!!

nathan

ஹேர் ஃபிரீ சில்கி ஸ்கின்

nathan

சரும சுருக்கங்களுக்கு குட் பை சொல்ல இந்த டிப்ஸ்களை பயன்படுத்துங்க

nathan

பெண்களே தெருந்துகொள்ளுங்கள்! அழகைப் பராமரிக்கும் போது தேனை சேர்ப்பதற்கான 15 வழிகள்!!!

nathan

சுருக்கமில்லா இளமையான அழகு கிடைக்க தினம் ஒரு ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க !!

nathan

கை மூட்டு, கால் மூட்டு அழகாகவும் மென்மையாகவும் இருக்க‍ சில எளிய குறிப்புக்கள்

nathan