26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
11 1567591016
Other News

உங்களுக்கு செய்வினைக் கோளாறு இருக்குன்னு உங்க மனசுக்கு படுதா? உங்களுக்குதான் இந்த விஷயம்

சில சமயங்களில் நமக்கு நடப்பது யாவும் கெட்டவையாகவே இருக்கும் பொழுது, நமக்கே யாரோ செய்வினை வைத்து விட்டது போல ஒரு உணர்வு தோன்ற ஆரம்பிக்கும். நன்றாக இருந்த நாம் திடீரென உடல் நலக்கோளாறு ஏற்பட்டு நோய்வாய் படுவது அல்லது பித்து பிடித்தது போல திரிவது அல்லது ஏதோ ஒரு தொடர் பிரச்சனைகள் நம் வீட்டில் நிகழ்வது போன்றவை செய்வினை கோளாறாக இருக்கக் கூடுமோ? என்கிற பயமும், பதட்டமும் நமக்குள் எழும். இப்படியானவர்கள் ரொம்பவே சுலபமாக வீட்டிலேயே எப்படி செய்வினை கோளாறு இருப்பதை அறிந்து கொள்ளலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம்.

செய்வினை கோளாறு என்பது திருஷ்டியின் ஒரு வகை ஆகும். நீங்கள் திரைப்படங்களில் காண்பது போல நினைத்துக் கொள்ளக் கூடாது. பில்லி, சூனியம், ஏவல் போன்றவை அனைத்தும் எதிர்மறை ஆற்றல் நம்மிடம் திருப்பி விடும் ஒரு கெட்ட செயலே அன்றி அது ஒரு அமானுஷ்ய விஷயம் அல்ல. உதாரணத்திற்கு எலுமிச்சை கனியை எடுத்துக் கொள்வோம். எலுமிச்சை கனி நல்லதும், கெட்டதும் செய்யும். அதை வைத்து நல்ல விஷயங்களுக்கும், கெட்ட விஷயங்களுக்கும் பயன்படுத்துவது வழக்கம்.

 

அது போல ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை கொண்டு நம் பக்கம் எதிர்மறை அதிர்வலைகளை திருப்பி விடக் கூடிய ஒரு செயல் தான் செய்வினை ஆகும். இதனை நீங்கள் நினைப்பது போல பொம்மைகள் வைத்து செய்வது, மரத்தில் ஆணி அடிப்பது போன்றவையெல்லாம் எந்த அளவிற்கு உண்மை என்று நமக்கு தெரியாது. அதை ஆராய்ச்சி செய்யவும் நமக்கு அவசியமில்லை! நம் வீட்டில் தொடர் பிரச்சினைகளும், யாரோ நமக்கு ஏதோ செய்து விட்டது போல ஒரு உணர்வும் ஏற்பட்டால் அது உண்மையா? பொய்யா? என்று கண்டு பிடிப்பதற்கு எளிய தாந்திரீக வழிமுறை உண்டு.

இதை அம்மாவாசையில் தான் செய்ய வேண்டும். அமாவாசை அன்று பிரபஞ்சத்தின் சக்தி அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் செய்வினை கோளாறுகளை எளிதாக நாம் தெரிந்து கொள்ள உங்கள் கையில் கொஞ்சம் முருங்கை இலை இருந்தால் போதும். முருங்கை இலைகளை நீர் எதுவும் சேர்க்காமல் அப்படியே பச்சையாக கசக்கினால் கிடைக்கக் கூடிய சாறு நமக்கு தேவை.

இந்த முருங்கை இலை சாற்றை உள்ளங்கையில் வைத்துக் கொண்டு அமாவாசை அன்று காலையில் வெறும் வயிற்றில் தெற்கு நோக்கி நிற்க வேண்டும். நீங்கள் எந்த இடத்தில் நின்றாலும் பரவாயில்லை. அரை மணி நேரம் இப்படி கையில் வைத்துக் கொண்டு அமைதியாக நிற்க வேண்டும். கையில் வைத்திருக்கும் பொழுது எதுவும் பேசக் கூடாது. அது போல் வெறும் வயிற்றில் இருக்க வேண்டியதும் அவசியமாகும். மௌனம் அனுஷ்டித்து அரை மணி நேரம் இப்படி வைத்திருந்தால் உங்களுக்கு செய்வினை ஏதாவது இருந்தால் கையில் வைத்திருக்கும் முருங்கை இலைச்சாறு கண்டிப்பாக திரிந்து போய்விடும்.

 

அப்படி எதுவும் ஆகாமல் இருந்தால் உங்களுக்கு செய்வினை எதுவும் யாரும் செய்து வைக்கவில்லை என்பதை நீங்களே தெரிந்து கொள்ளலாம். நம்மிடம் இருக்கும் எதிர்வினையை தெரிந்து கொள்வதற்கு உதவக்கூடிய இந்த முருங்கை இலை பரிகாரம் நீங்களும் தேவை என்றால் செய்து பார்த்து பயனடையலாமே!

Related posts

உள்ளாடையால் பொலிஸில் சிக்கிய 16 வயது சிறுமி!

nathan

ரகசியம் உடைத்த மாரிமுத்து மகன்..! அப்பா ஹாஸ்பிடல்-க்கு தனியாக போக இது தான் காரணம்..! –

nathan

விருச்சிக ராசி பெண்கள் – இப்படி தான் இருப்பாங்க…

nathan

2024 இல் இந்த ராசியினர் காதல் வாழ்க்கை சூப்பரா இருக்குமாம்…

nathan

ஜோதிடத்தை பழித்ததால் மாரிமுத்து இறந்தாரா?..

nathan

அந்த இயக்குனரால் தான் என் கேரியரே நாசமா போச்சு

nathan

இளசுகளின் இதய துடிப்பை எகிறவைத்த ஜெயிலர் மருமகள் மிர்னா மேனன்!!

nathan

நம்ப முடியலையே…உடல் எடை குறைக்க ப டாத பாடு ப டும் சொப்பன சுந்தரி நடிகை.!

nathan

கவர்ச்சி உடையில் தொகுப்பாளினி டிடி

nathan