29.5 C
Chennai
Thursday, May 29, 2025
ggghhj
அழகு குறிப்புகள்

எண்ணெய்ப் பசை உள்ள சருமத்தினருக்கு தவிர்க்க வழிகள்!

அழகாய் இருக்க வேண்டும் என விரும்பாதவர் யார்? ஆனால், எண்ணெய்ப் பசை உள்ள சருமம் தன்னம்பிக்கையையே குலைப்பது. இது, வளவளப்பான சருமத்தையும் சோர்வான தோற்றத்தைத் தருவதோடு முகப்பருவையும் ஏற்படுத்துகிறது.

முகத்தில் உள்ள சீபம் அதிகமாகச் சுரப்பதுதான் எண்ணெய்ப் பசை உள்ள சருமத்துக்கு காரணம். பாரம்பரியம் உள்ளிட்ட சில முக்கியக் காரணங்கள் இருந்தாலும் சில பழக்கங்களை மாற்றிக்கொள்வதன் மூலம் எண்ணெய்ப் பசை உள்ள சருமத்தை அழகாகப் பராமரிக்கலாம்.
ggghhj
1.சோப்பு மற்றும் கிளென்ஸர்கள்

சிலவகை சோப்புகள் மற்றும் கிளென்சர்கள் காரத்தன்மை அதிகம் உள்ளவையாக, கடினமானவையாக இருக்கும். இவற்றைப் பயன்படுத்துவதால், சருமம் மிகவும் உலர்வாகி மீண்டும் சீபம் அதிகமாகச் சுரக்கும். எனவே, எண்ணெய்ப் பசை சருமத்துக்கான பிரத்யேகமான சோப்புகள் மற்றும் கிளென்ஸர்கள் எதுவென அறிந்து அவற்றைப் பயன்படுத்துங்கள்.

2. ஃபேஷியல் மாஸ்க்

தேன், எலுமிச்சை, ஆலிவ் ஆயில், முட்டையின் வெள்ளைக்கரு, ஆப்பிள் போன்ற இயற்கையான பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஃபேஷியல் மாஸ்க்கை மாதம் இரண்டு முறை பயன்படுத்தலாம். இது, சருமத்தில் உள்ள நுண்ணிய துவாரங்களை சுத்தமாக்கி முகப்பரு ஏற்படுத்தும் கிருமிகளை அழிக்கிறது.

3.இரண்டு முறைக்கு மேல் முகத்தைக் கழுவாதீர்

பொதுவாக, எண்ணெய்ப் பசை உள்ளவர்கள் அடிக்கடி முகத்தைக் கழுவுவதை பழக்கமாக வைத்திருப்பார்கள். இது மிகவும் தவறு. இப்படி செய்வதால், சரும செல்கள் பாதிக்கப்படும். ஒரு நாளுக்கு இரண்டு முறைக்கு மேல் முகத்தைக் கழுவாமல் இருப்பதே நல்லது. வேண்டுமானால், ஒரு சுத்தமான டிஸ்யூ பேப்பரைக் கொண்டு முகத்தைத் துடைத்துக்கொள்ளலாம்.

4. மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள்

எண்ணெய்ப் பசை சருமம் என்று மாய்ஸ்சரைசர் கிரீம்களை பயன்படுத்துவதைத் தவிர்ப்பவர்கள் அதிகம். முகத்தில் வழியும் சீபத்துக்கும் மாய்ஸ்சரைசர் கிரீம்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எண்ணெய்பசை சருமத்துக்கான பிரத்யேக மாய்ஸ்சரைசர் கிரீம்களை பயன்படுத்தலாம்.

5. அடிக்கடி முகத்தைத் தொடாதீர்கள்

எண்ணெய்ப் பசை உள்ள சருமத்தினருக்கு முகப்பருவால் பாக்டீரியா இருக்கும். நம் கைகள் மோசமான பாக்டீரிய கடத்திகள். இதைக்கொண்டு அடிக்கடி முகத்தை தொடும்போது ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு தொற்று பரவிக்கொண்யிருக்கும். எனவே, அடிக்கடி முகத்தைத் தொடாதீர்கள். ஒருமுறை முகத்தைத் தொட்டதும் கை கழுவுங்கள்.

Related posts

மறைந்த சில்க் ஸ்மிதா இப்படிப்பட்டவராம்! நடிகை வெளியிட்ட பதிவு!

nathan

நீங்களே பாருங்க.! மீண்டும் காணொளியை வெளியிட்ட நித்யா

nathan

ஒரு குறைபாடற்ற தோலுக்கு மஞ்சளினால் ஏற்படும் 7 நன்மைகள்

nathan

கண்ணைச் சுற்றிக் கருவளையம்

nathan

சருமத்தினைப் பராமரிக்க நலங்கு மாவு..அழகு தரும் நலங்கு மாவு..

nathan

கருவளையம் நீங்க இத செய்யுங்கள்!…

sangika

வீட்டில் இருந்தபடியே அழகான தோலைப் பெற 10 சிறந்த நைட் கிரீம்கள்

nathan

எண்ணெய் பசை சருமத்திற்கான‌ 10 பயனுள்ள ஆயுர்வேத தீர்வுகள்

nathan

பளிங்கு முகத்தில் பருக்கள் வர காரணம் என்ன?

nathan