தங்கத்துக்கு பொருப்பானவர் குரு பகவான். குரு பகவானால் உருவான தங்கத்தை வைத்துக் கொள்வதும் அவசியம்.
இப்படிப்பட்ட தங்கத்தை அணிய பலரும் ஆசைப்படுவார்கள்.
ஆனால் சில ராசிகளுக்கு தங்க நகை அணிவது ஆபத்தை ஏற்படுத்தும். அவர்கள் கட்டாயம் அதை தவிர்க்க வேண்டும். அது மட்டும் இல்லை குறிப்பிட்ட ராசியினருக்கு என்று ஆளுமை கொடுக்க கூடிய கிழமையில் தங்கம் வாங்கினால் அது நன்மை கொடுக்கும்.
தங்கம் வாங்க சிறந்த நாள்
மேஷ ராசி – ஞாயிறு, வெள்ளி
ரிஷபம் ராசி – புதன், வெள்ளி
மிதுன ராசி – திங்கள், வியாழன்
கடக ராசி – ஞாயிறு, திங்கள், புதன்
சிம்ம ராசி – புதன், வெள்ளி
கன்னி ராசி – சனி
துலாம் ராசி – திங்கள், வெள்ளி
விருச்சிக ராசி – சனி
தனுசு ராசி – வியாழன்
மகர ராசி – புதன், வெள்ளி
கும்ப ராசி – புதன், வெள்ளி, ஞாயிறு
மீன ராசி – வியாழன், திங்கள்
யாரெல்லாம் தங்கத்தை அணியக்கூடாது
ரிஷபம், மிதுனம், விருச்சிகம் மற்றும் கும்ப ராசியை சேர்ந்த நபர்கள் தங்க நகைகளை அணிவது நல்லதல்ல.
மறுபுறம், துலாம் மற்றும் மகர ராசியினர் குறைந்தபட்சம் தங்கத்தை அணிய வேண்டும்.
இரும்பு மற்றும் நிலக்கரி தொடர்பான பணியை செய்பவர்கள் தங்க நகை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் இவை இரண்டும் சனியுடனான வணிக உறவு கொண்டது. எனவே தங்க உலோகத்தை அணிவது உங்கள் வணிகத்திற்குத் தீங்கு விளைவிக்கும்.
முக்கிய குறிப்பு
எப்போதும் வலது கை விரல்களில் தங்க மோதிரத்தை அணிய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இடது கையில் ஒருபோதும் தங்க மோதிரம் அணிய வேண்டாம். மேலும், இடுப்பு முதல் கால் வரை எந்தப் பகுதியிலும் தங்கத்தை அணியக் கூடாது, அவ்வாறு அணிந்தால் பல நோய்களுக்கு வழிவகுக்கும்.