26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
22 6295afe78a002
தலைமுடி சிகிச்சை

பொடுகு தொல்லையால் அதிகமாக அவதிப்படுகிறீர்களா?உங்களுக்குதான் இந்த விஷயம்

கோடைக்காலமாக இருந்தாலும் குளிர்காலமாக இருந்தாலும் கூந்தலில் ஈரப்பதம் இல்லாவிட்டால் அது பொடுகுக்கு வழிவகுக்கும்.

பெண்களை போன்று ஆண்கள் கூட பொடுகு பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றார்கள். இதனை ஆரம்ப கட்டத்தில் கவனிக்காவிட்டால் அது அதிகமாகிவிடும்.

இதற்கு கடைகளில் என்னத்தான் ஷாம்பு போட்டு குளித்தாலும் இதனை நிரந்தரமாக நீக்க முடியாது. பொடுகு நீங்கியது என்று நினைக்கும் போதே மீண்டும் பொடுகு பிரச்சனை தலைதூக்கும்.

இதற்கு கடைகளில் கிடைக்கும் கண்ட கண்ட பொருட்களை வாங்கி உபயோகிப்பதை தவிர்த்துவிட்டு ஒரு சில இயற்கை முறைகளை கையாண்டால் போதும்.

ஒட்ஸ் கூந்தலுக்கு ஆரோக்கியமானது, கூடுதலாக இது கூந்தலின் வளர்ச்சியை கொடுக்கவும் கூந்தலை ஈரப்பதமாகவும் வைக்க செய்கிறது, முடி உதிர்தல் பிரச்சனையை இல்லாமல் செய்ய கூடியது, பொடுகை விரட்ட கூடியது.

பொடுகு தொல்லையால் அதிகமாக அவதிப்படுகிறீர்களா? நிரந்தரமான தீர்வு இதோ

தேவையானவை
ஓட்ஸ்- 1 கப்
வெந்நீர் -2 கப்
மஸ்லின் துணி

செய்முறை
வெந்நீர் அதிக சூட்டில் இருக்க வேண்டியதில்லை. வெந்நீரில் ஓட்ஸ் சேர்த்து 3 நிமிடங்கள் வைக்கவும். அவ்வபோது கலக்கி விடுங்கள். கலவை நன்றாக கலந்ததும் வெதுவெதுப்பாக ஆன பிறகு மிக்ஸியில் சேர்த்து குழைய மசித்துவிடுங்கள்.

இதை சிறிது சிறிதாக மஸ்லின் துணியில் சேர்த்து வடிகட்டுங்கள். நீர் வடிய சில நேரம் எடுக்கும். மொத்தமாக துணியில் போடாமல் சிறிது சிறிதாக சேர்த்து வடிகட்டி வையுங்கள்.

பொடுகு தொல்லையால் அதிகமாக அவதிப்படுகிறீர்களா? நிரந்தரமான தீர்வு இதோ

தலைக்கு ஷாம்பு போட்டு தேய்த்து முடித்தவுடன் இலேசாக ஈரப்பதம் இருக்கும் போது இந்த ஓட்ஸ் பாலை உச்சந்தலை முதல் கூந்தலின் நுனி வரை ஊற்றி நன்றாக தடவி விரல்களை கோதிவிடவும்.

ஓட்ஸ் பால் கூந்தலின் வேர்க்கால்கள் முதல் நுனி வரை தடவி விடவும். 15 நிமிடங்கள் கழித்து கூந்தலை நன்றாக நீரில் அலசி எடுக்கவும்.

கூந்தல் அரிப்புகளை போக்கி பொடுகை மொத்தமாக வெளியேற்றுகிறது. உச்சந்தலையில் இறந்த சருமத்தை நீக்கி சரும் ஆரோக்கியத்தை காக்க செய்கிறது.

Related posts

பெண்களின் கூந்தல் வறண்டு உடைந்து, நுனி பிறந்து காணப்பட்டால் இதை செய்யுங்கள்!..

nathan

எண்ணெய் கொண்டு தலை மசாஜ் செய்யும் போது.

nathan

பட்டுப்போன்ற கூந்தலுக்கு…

nathan

கரிசலாங்கன்னியை பயன்படுத்தி முடியின் வளர்ச்சியை தூண்டுவாதற்கு !

nathan

தெரிந்து கொள்ளுங்கள்.. கருப்பு முடி விரைவாக கருப்பு நிறமாக இருக்க இதை செய்ய வேண்டும்…

nathan

தலைமுடி உதிர்வதைத் தடுக்க வீட்டிலேயே நேச்சுரல் ஹேர் ஆயில் தயாரிப்பது எப்படி?

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…அடர்த்தியாக பறக்கும் இந்த கூந்தலின் ரகசியம் தெரியுமா!

nathan

உங்களுக்கு தெரியுமா வெள்ளை முடியை கொஞ்சம் கொஞ்சமாக கருமையாக்கும் ப்ளாக் டீ!

nathan

பொடுகுத் தொல்லை அதிகமா இருக்கா? அப்ப இத யூஸ் பண்ணுங்க…

nathan