28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
baldhead 16
தலைமுடி சிகிச்சை

வழுக்கைத் தலையில் முடி வளர்ச்சியைத் தூண்டணுமா? சூப்பரா பலன் தரும்!!

இன்று முடி உதிர்தல் பிரச்சனையால் ஏராளமான மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். சிலருக்கு முடி உதிர்வால் தலை வழுக்கையாகியும் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம், தூக்கமின்மை, முடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் போன்றவை ஆகும். முடி உதிர்வால் ஆண்களுக்கு மட்டும் தலை வழுக்கையாவதில்லை, பெண்களுக்கும் தான். ஆனால் இப்பிரச்சனை ஆண்களிடம் அதிகமாக காணப்படுவதால், பல ஆண்கள் இதனாலேயே அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

ஒருவரது அழகை மேம்படுத்திக் காட்டுவதில் தலைமுடி முக்கிய பங்காற்றுகிறது. ஆனால் இந்த முடி உதிர்ந்து வழுக்கையானால், அது ஒருவரது அழகை எப்படி பாதிக்கும் என்பதை சொல்லித் தான் தெரிய வேண்டும் என்பதில்லை. ஆகவே நாங்கள் தலைமுடி உதிர்வால் மனம் உடைந்து போனவர்களுக்காக ஒருசில அற்புதமான இயற்கை வைத்தியங்களைக் கொடுத்துள்ளோம். இந்த வழிகள் புதிய முடி வளர உதவி புரிந்து, வழுக்கை பிரச்சனையில் இருந்து விடுபட உதவும். சரி, வாருங்கள் அந்த வழிகளைக் காண்போம்.

வெங்காயம்

வெங்காயத்தில் உள்ள சல்பர், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தைத் தூண்டிவிடும். இதனால் வழுக்கைத் தலை பிரச்சனையைத் தடுக்கலாம். அதற்கு வெங்காயத்தை வெட்டி, அரைத்து சாறு எடுத்து, தேனுடன் கலந்து, ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இது முடியின் வேர்க்கால்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதோடு மட்டுமின்றி, பூஞ்சை மற்றும் பாக்டீரியா போன்றவற்றையும் அழிக்கும்.

விளக்கெண்ணெய்

வழுக்கை பிரச்சனையைப் போக்க விளக்கெண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது ஒரு மாய்ஸ்சுரைசிங் ஏஜெண்ட்டாக செயல்படுகிறது. மேலும் இது பல தலைமுடி மற்றும் சரும பிரச்சனைகளையும் போக்கக்கூடியது. வழுக்கைப் பிரச்சனையைப் போக்க, விளக்கெண்ணெயை விரலால் தொட்டு, ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இது உங்கள் தலைமுடியின் வேர்களுக்கு ஊட்டமளித்து, தலைமுடி வேகமாக வளர ஊக்குவிக்கும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஊட்டச்சத்துக்கள் அதிகம் கொண்ட ஓர் மூலிகை தாவரம். இது தலைமுடி மற்றும் சரும பிரச்சனைகளைப் போக்குவதில் மிகவும் பயனுள்ளது. முக்கியமாக கற்றாழை ஜெல் தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது. அதற்கு கற்றாஜை ஜெல்லை ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், தலைமுடியின் வளர்ச்சியில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம். ஏனெனில் இது முடியின் வேரில் அடைபட்டிருக்கும் துளைகளைத் திறக்கும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் நாம் தினமும் தலைக்கு பயன்படுத்தக்கூடியது. இந்த எண்ணெய் முடியின் வேர்களுக்கு ஊட்டமளிக்கிறது. இரவு தூங்கும் முன் தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவி பத்து நிமிடம் மசாஜ் செய்து, மறுநாள் காலையில் தலைமுடியை அலசி வந்தால், அது முடியின் வளர்ச்சிக்கு உதவும். விருப்பமுள்ளவர்கள் தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாற்றினையும் சேர்த்துக் கொள்ளலாம்.

வெந்தயம்

வெந்தயமும் வழுக்கையை நீக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதற்கு வெந்தயத்தை நீரில் ஊற வைத்து அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் முடி இல்லாத இடத்தில் தடவி ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் தலைமுடியை அலச வேண்டும்.

எலுமிச்சை

எலுமிச்சை பல தலைமுடி பிரச்சனைகளான முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை, முடி வறட்சி போன்றவற்றைப் போக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதில் வழுக்கையைப் போக்க எலுமிச்சை சாற்றினை எந்த எண்ணெயுடனும் சேர்த்து, தலையில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து தலைமுடியை அலசி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

பீட்ரூட் இலைகள்

வழுக்கையைப் போக்க பீட்ரூட் இலைகள் மிகச்சரியான மருந்து. அதற்கு பீட்ரூட் இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அத்துடன் மருதாணி இலைகளையும் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்ததும், அந்த இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும். இதனால் அதிக பலன் கிடைக்கும்.

தயிர்

தயிர் தலைமுடிக்கு ஒரு நல்ல கண்டிஷனராக செயல்படுகிறது. இது தவிர, தலைமுடி உதிர்வதைத் தடுத்து, வழுக்கையை நீக்குவதிலும் பெரிதம் உதவி புரிகிறது. அதற்கு தயிரை தலையில் தடவி ஊற வைத்து அலச வேண்டும். இதனால் ஒரு நல்ல பலனைப் பெறலாம்.

Related posts

பொடுகுப் பிரச்னைக்கான வீட்டு சிகிச்சைகள்

nathan

எண்ணெய்தன்மை கொண்ட கூந்தல் பராமரிப்பு

nathan

கூந்தலை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள!….

nathan

உங்களுக்கு தெரியுமா பொடுகை ஒழிப்பதற்கு வேகமாகவும் சிறப்பாகவும் செயல்படும் 7 எளிய வீட்டு சிகிச்சைகள்!!!

nathan

உங்களுக்கு தலை சொட்டையாகிவிடுமோ என்ற கவலையா? இதை முயன்று பாருங்கள்

nathan

இளநரை நீங்க இயற்கை மருத்துவ குறிப்புகள்

nathan

அதிக முடி உதிர்தலுக்கு இந்த வெந்தயத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்?

nathan

கூந்தலின் நுனியில் ஏற்படும் வெடிப்பு கூந்தலை மேலும் வளராது தடுக்கின்றது

nathan

முடி உதிர்வு மற்றும் நரைமுடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் இயற்கை கலரிங்!

nathan