26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
05 1451974179 7 moisturiser
சரும பராமரிப்பு

அன்றாடம் நம் சருமத்திற்கு பயன்படுத்தும் க்ரீம்கள் குறித்த உண்மைகள்!

நாம் தினமும் மாசடைந்த சுற்றுச்சூழலால் நம் சருமத்தில் பிரச்சனை ஏதும் வராமல் இருக்க மாய்ஸ்சுரைசர், சன் ஸ்க்ரீன் லோசன், ஆன்டி-ஏஜிங் க்ரீம், கோல்ட் க்ரீம் என பல க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவோம். அதிலும் மிகவும் விலை அதிகமான க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்தினால் சருமத்தில் எந்த பிரச்சனையும் வராது என்று நினைத்து வாங்கி பயன்படுத்துவோம். ஆனால் அந்த க்ரீம்களால் மட்டும் நமக்கு நன்மை விளைகிறது என்று நமக்கு உறுதியாக தெரியுமா?

பொதுவாக க்ரீம்களின் பணி சருமத்தில் ஈரப்பசையை தக்க வைப்பது மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் சருமத்திற்கு பாதுகாப்பு அளிப்பது தான். சில க்ரீம்களில் ரெட்டினால் மற்றும் பெப்டைடுகள் போன்றவை இருக்கும். இவை சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும் மற்றும் புதிய சரும செல்களை உருவாக்கும். ஆனால் இந்த க்ரீம்கள் குறித்த உண்மைகள் பற்றி தெரியுமா?

இங்கு தமிழ் போல்ட்ஸ்கை நாம் தினமும் பயன்படுத்தும் க்ரீம்கள் குறித்த சில உண்மைகளை உங்களுக்கு தெளிவாக கொடுத்துள்ளது. அதைக் கொஞ்சம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அனைத்து க்ரீம்களும் சுருக்கங்களை நீக்கும்

க்ரீம்கள் குறித்த உண்மைகளில் முதன்மையானதும் சுவாரஸ்யமானதும் இது. பொதுவாக சருமத்தில் சுருக்கங்களானது வறட்சியால் தான் ஏற்படுகிறது. ஆகவே சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களைப் போக்க ஆன்டி-ஏஜிங் க்ரீம்களைத் தான் பயன்படுத்த வேண்டுமென்ற அவசியமில்லை. அனைத்து க்ரீம்களும் சரும சுருக்கங்களை நீக்கும். ஆனால் ஆன்டி-ஏஜிங் க்ரீம்களில் சில உட்பொருட்கள் அதிகம் இருக்கும், அவ்வளவு தான்.

க்ரீம்கள் இரவில் நன்கு வேலை செய்யும்

க்ரீம்களை பகல் நேரத்தை விட, இரவில் படுக்கும் போது சருமத்திற்கு தடவினால் நன்கு வேலை செய்யும். இதற்கு இரவில் க்ரீம்களில் உள்ள பொருட்கள் சருமத்தால் உறிஞ்ச நீண்ட நேரம் கிடைப்பது தான். எனவே இரவில் படுக்கும் முன் முகம், கை, கால்களை நன்கு நீரில் கழுவி, பின் க்ரீம்களைத் தடவுங்கள். இதனால் இன்னும் எளிமையாக க்ரீம்களில் உள்ள உட்பொருட்கள் சருமத்தால் உறிஞ்சப்படும்.

க்ரீம்களைத் தடவும் முன் ஸ்க்ரப் செய்வது

அவசியம் ஸ்க்ரப் செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசை முழுமையாக வெளியேற்றப்படும். எனவே ஸ்க்ரப் செய்த பின் க்ரீம்களை சருமத்திற்கு தடவினால், க்ரீம்களில் உள்ள அனைத்து பொருட்களும் ஈஸியாக உறிஞ்சப்படும். இதனால் சருமத்தின் பொலிவும், இளமைத்தன்மையும்,

பெப்டைடு நிறைந்த க்ரீம்கள்

நீங்கள் க்ரீம்கள் வாங்கும் போது, அந்த க்ரீம்களின் லேபிளில் பெப்டைடு இருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? சரும சுருக்கங்களைப் போக்க உதவும் ஆன்டி-ஏஜிங் க்ரீம்களில் இது தான் முக்கிய தனிமமாக இருக்கும். ஏனெனில் இது புதிய செல்களின் உருவாக்கத்திற்கு மற்றும் சரும வறட்சியை நீக்க உதவும்.

ரெட்டினால் நிறைந்த க்ரீம்கள்

ரெட்டினால் ஒரு வகையான வைட்டமின் ஏ. இது சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கும் மற்றும் சரும சுருக்கத்தைக் குறைக்கும். இருப்பினும் ரெட்டினால் நிறைந்த க்ரீம்கள் அனைவருக்குமே நல்லதல்ல. முக்கியமாக கர்ப்பிணிகள் ரெட்டினால் க்ரீம்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஏனெனில் ரெட்டினால் சருமத்தின் வழியே இரத்தத்தில் கலந்து தீங்கு விளைவிக்கும். அதனால் தான் கர்ப்ப காலத்தில் பெண்களை க்ரீம்கள் எதையும் பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அனைத்து க்ரீம்களும் சருமத்தால் உறிஞ்சப்படுவதில்லை

நாம் அனைவரும் சருமத்திற்கு பயன்படுத்தும் க்ரீம்கள் அனைத்தும் சருமத்தால் உறிஞ்சப்படுகிறது என்று நினைக்கிறோம். ஆராய்ச்சியாளர்களும் அப்படிப்பட்ட க்ரீம்களைத் தயாரிக்க முயற்சிக்கின்றனர். மேலும் 50 சதவீத க்ரீம்கள் சருமத்தால் உறிஞ்சப்படுவதில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது, க்ரீம்களை விட, எண்ணெய்களே சிறந்தது. எனவே க்ரீம்கள் வாங்க பணம் செலவழிப்பதற்கு பதிலாக, எண்ணெய்களை வாங்கி சருமத்திற்கு அன்றாடம் பயன்படுத்துங்கள்.

வைட்டமின்கள் நிறைந்த க்ரீம்கள்

க்ரீம் பாட்டில்களின் பின்புறம் ஒருசில வைட்டமின்களான ஏ, சி மற்றும் ஈ போன்றவை குறிப்பிட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இந்த வைட்டமின்கள் அனைத்து ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்று செயல்பட்டு, முதுமைத் தோற்றத்தைத் தடுக்கும். இப்படி வெறுமனே க்ரீம்கள் மூலம் சருமத்திற்கு பாதுகாப்பு வழங்கினால் போதாது, உணவுகளிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்ததை சேர்ந்து உட்கொண்டு வர வேண்டும்.

05 1451974179 7 moisturiser

Related posts

கைவசம் இந்த மூலிகை எப்போதும் இருந்தா போதும்!! எல்லா உடல் பாதிப்புகளையும் போக்கிடலாம் தெரியுமா?

nathan

வெள்ளையாவதற்கு சந்தனத்தை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் ?பெண்களே தெரிஞ்சிக்கங்க…

nathan

முகத்தை மட்டுமல்ல முதுகையும் பராமரிங்க

nathan

குளித்த அல்லது சுத்தமாக்கிய பின்

nathan

இப்படித்தான் பயன்படுத்தணும்! மீசை முடி வளர்ச்சியை குறைக்க..

nathan

கலாக்காய் பயன்படுத்துவதால் சருமம் மற்றும் கூந்தலுக்கு கிடைக்கும் நன்மைகள்!….

sangika

உங்க பிட்டம் அசிங்கமா சுருக்கத்தோட இருக்கா? அப்ப இத ட்ரை பண்ணுங்க…

nathan

அழகை அதிகரிக்க ஐஸ் கட்டி ஃபேஷியல் பண்ணுங்க

nathan

உபயோக அழகு‌க் கு‌றி‌ப்புக‌ள்

nathan