28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
dfhmmvcz
அழகு குறிப்புகள்

சரும ஆரோக்கியமே அழகுக்கு அஸ்திவாரம். அதை எந்த வெளிப்பூச்சாலும் சிகிச்சையாலும் தர முடியாது..

நாள் 1
காலையில் வெறும் வயிற்றில் தேன் சேர்த்த எலுமிச்சைப்பழ ஜூஸ்.

காலை உணவுக்குப் பிறகு ஓர் ஆப்பிள், ஒரு பீட்ரூட், இரண்டு கேரட் சேர்த்து அரைத்த ஏபிசி ஜூஸ்.

மதிய உணவுடன் ஓர் ஆப்பிள்.

இரவு உணவுக்குப் பிறகு சர்க்கரை சேர்க்காத மாதுளை ஜூஸ் ஒரு கப்

தூங்குவதற்கு முன்…

அரை டீஸ்பூன் தேனுடன் அரை டீஸ்பூன் எலுமிச்சைப்பழச்சாறு கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவிவிட்டுத் தூங்கச் செல்லவும்.

நாள் 2

தேன் சேர்த்த கிரீன் டீ (வெறும் வயிற்றில்).

காலை உணவுக்குப் பிறகு ஒரு டம்ளர் தக்காளி ஜூஸ்.

மதிய உணவுடன் ஒரு கப் சோயா பீன்ஸ் (சுண்டலாகவோ, பொரியலாகவோ).

இரவு உணவுக்குப் பிறகு சர்க்கரை சேர்க்காத பால் ஒரு கப்.

தூங்குவதற்கு முன்…

அரை டீஸ்பூன் அரிசி மாவில் ஒரு டீஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவிவிட்டுத் தூங்கச் செல்லவும்.

நாள் 3

இரண்டு கப் தண்ணீரில் கைப்பிடி அளவு புதினா சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி, அதில் அரை மூடி எலுமிச்சைச்சாறும் சிறிது தேனும் சேர்த்து வெறும் வயிற்றில் குடிக்கவும்.

காலை உணவுக்குப் பிறகு ஒரு வாழைப்பழம்.

மதிய உணவுக்குப் பிறகு ஒரு கப் கிவி ஜூஸ்.

இரவு உணவுக்குப் பிறகு ஒரு செவ்வாழைப்பழம்.

தூங்குவதற்கு முன்…

அரை வாழைப்பழத்துடன், ஊறவைத்த பாதாமின் விழுது அரை டீஸ்பூன் சேர்த்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து மென்மையாக மசாஜ் செய்து கழுவிவிட்டுத் தூங்கச் செல்லவும்.
dfhmmvcz
நாள் 4

ஒரு கேரட், ஐந்து பாதாம், சிறிது தேங்காய் பால் சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் குடிக்கவும்.

காலை உணவுக்குப் பிறகு ஒரு டம்ளர் ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் (தேன் சேர்த்தது).

மதிய உணவுக்குப் பிறகு ஓர் ஆரஞ்சுப் பழம்.

இரவு உணவுக்குப் பிறகு நான்கு பாதாம், சிறிது குங்குமப்பூ, கொஞ்சம் ரோஜா இதழ்கள் சேர்த்து அரைத்துப் பாலில் கலந்து குடிக்கவும்.

தூங்குவதற்கு முன்…

ஒரு டீஸ்பூன் பாலில் சிறிது குங்குமப்பூவை ஊற வைத்துக் கரைக்கவும். அத்துடன் இரண்டு துளிகள் ஆலிவ் ஆயில் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்துக் கழுவவும்.

நாள் 5

ஒரு கப் தண்ணீரில் அரை டீஸ்பூன் சோம்பு, ஒரு டீஸ்பூன் கறுப்பு உலர் திராட்சை, ஆல்பகோடா எனப்படுகிற உலர்பழம் மூன்று… இவற்றை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அப்படியே குடிக்கவும்.
காலை உணவுடன் ஒரு தக்காளி யைப் பச்சையாகச் சாப்பிடவும்.

மதிய உணவுடன் டார்க் சாக்லேட் கொஞ்சம் சாப்பிடவும்.

இரவு உணவுக்குப் பின் ஒரு கப் பப்பாளி.

தூங்குவதற்கு முன்…

ஒரு டீஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன், கெமிக்கல் கலக்காத பன்னீர் (ரோஸ் வாட்டர்) ஒரு டீஸ்பூன் கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவிவிட்டுத் தூங்கச் செல்லவும்.

நாள் 6

இனிப்பு சேர்க்காத தக்காளி ஜூஸ் (வெறும் வயிற்றில்).

காலை உணவுடன் ஒரு கப் அன்னாசிப் பழம்.

மதிய உணவுக்கு அரிசி உணவு தவிர்த்து கேழ்வரகு அல்லது ஓட்ஸ்.

இரவு உணவுக்குப் பின் மாதுளம் பழம் ஒரு கப்.

தூங்குவதற்கு முன்…

அரை உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து மூன்று டீஸ்பூன் பால் சேர்த்துக் குழைத்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவிவிட்டுத் தூங்கச் செல்லவும்.

நாள் 7

குங்குமப்பூ, தேன் சேர்த்த பால் ஒரு டம்ளர் (வெறும் வயிற்றில்).

காலை உணவுக்குப் பிறகு ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸ்.

மதிய உணவுடன் சர்க்கரை வள்ளிக்கிழங்கு இருக்கட்டும். அதன் பிறகு ஒரு டம்ளர் அவகாடோ ஜூஸ்.

இரவு உணவுக்குப் பின் ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் ஒரு டம்ளர்.

தூங்குவதற்கு முன்…

ஒரு முட்டையின் வெள்ளைக் கருவுடன், ஒரு டீஸ்பூன் தேன், இரண்டு துளி எலுமிச்சைச்சாறு சேர்த்துக் குழைத்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்துக் கழுவிவிட்டுத் தூங்கச் செல்லவும்.

Related posts

விருந்திற்கு அழைத்த அண்ணன்!உயிரைவிட்ட சோகம்

nathan

வெளியிட்ட புதிய ப்ரோமோ! பிக் பாஸ் 4’

nathan

இளமையுடன் இருக்க… எலுமிச்சை!….

sangika

உங்கள் முகம் எவ்வ‍ளவு அழகாக இருந்தாலும் உதடுகள் வறண்டு இருந்தால் இத செய்யுங்கள்!….

sangika

இப்படி ஒரு டிரஸ்ஸ போட்டுகிட்டு என்ன போயிருக்குனு தெரியுமா? ஸ்ரீதேவி பொண்ணா

nathan

tips அழகு குறிப்புகள்.. பெண்களுக்கான சின்ன..சின்ன டிப்ஸ்….

nathan

கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ்

nathan

வெந்தயக் கீரை! அழகையும் குளிர்ச்சியையும் அது அள்ளித் தரும் என்பது தெரியுமா?

nathan

இதை நீங்களே பாருங்க.! இந்திய கிரிக்கெட் அணி வீரரின் மனைவி வெளியிட்ட புகைப்படம்!

nathan