24.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
அறுசுவைசைவம்

பனீர் வெஜ் மின்ட் கறி

veg Paneer-jpg-1183எல்லா சத்தும் நிறைந்த இந்த கறி, குழந்தைகள், கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்ற அருமையான சத்தான உணவு. சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கும் பனீர் ரொம்ப பிடிக்கும் என்பதால் இதை ஒரு கை பார்க்காமல் விடமாட்டார்கள் பாருங்கள்!

தேவையான பொருட்கள்:

பட்டாணி – 100 கிராம்
கேரட் – 100 கிராம்
பீன்ஸ் – 100 கிராம்
பனீர் – 100 கிராம்

வதக்கி அரைக்க

புதினா – ஒரு கட்டு
கொத்து மல்லி – அரை கட்டு
கருவேப்பிலை – கால் கட்டு
பச்ச மிளகாய் – நான்கு
இஞ்சி – ஒரு லெமென் சைஸ்
பூண்டு – 5 பல்
வெங்காயம் – முன்று
தக்காளி – நன்கு
எண்ணை – ஒரு டேபிள் ஸ்பூன்

தாளிக்க:

எண்ணை – தேவையான அளவு
சீரகம் – சிறிதளவு

செய்முறை:

* முதலில் எண்ணையை காயவைத்து வெங்காயம், இஞ்சி, பூண்டு, தக்காளி, பச்ச மிளகாயை வதக்கவும்.

* கடைசியாக கொத்துமல்லி, புதினா, கருவேப்பிலையை மண்ணில்லாமல் ஆய்ந்து கழுவி அதையும் சேர்த்து வதக்கவும்.

* வதக்கியதை ஆறவைத்து மிக்ஸியில் அரைக்கவும்.

* எண்ணையை காய வைத்து சீரகம் தாளித்து அரைத்தவற்றை சேர்த்து கொதிக்க விடவேண்டும், அதோடு பனீரையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

* காய்களை பொடியாக அரிந்து மைக்ரோ வேவில் வேகவைத்து எடுத்து கொள்ளவும்.

* இப்போது வெந்த காயை சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.

* சுவையான ஆரோக்கியமான மின்ட் கறி ரெடி.

Related posts

கடலை புளிக்குழம்பு

nathan

வித்தியாசமான சோயா மீட் கட்லட் செய்முறை!

nathan

வாழைப்பழ முட்டை தோசை

nathan

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் எளிதாக எப்படி செய்வது

nathan

சுவையான சேப்பங்கிழங்கு கிரேவி

nathan

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்வீட் அண்ட் சால்ட் பிஸ்கட்!…

sangika

மீன் வறுவலில் பெரும்பாலானோர் செய்யும் தவறு என்ன தெரியுமா?….

sangika

ராகி பூரி

nathan

பிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா செய்ய…!

nathan