25 3 facemask
முகப் பராமரிப்பு

எண்ணெய் பசை சருமத்திற்கு ஏற்ற ‘பேஷியல்’ -தெரிந்துகொள்வோமா?

குளிர் காலத்தில் சரும பராமரிப்புக்கு கூடுதல் நேரமும், கவனமும் செலுத்த வேண்டியிருக்கும். எண்ணெய் சருமம் கொண்டவர்கள்தான் அதிக அவஸ்தைகளை அனுபவிக்க நேரிடும். ஏனெனில் முகத்தில் படியும் எண்ணெய் பசை சரும துளைகளை அடைத்துவிடும். இறுதியில் முகப்பரு பிரச்சினையை உண்டாக்கிவிடும். சருமத்திற்கு ஒவ்வாத ரசாயனம் அதிகம் கலந்த அழகு சாதன பொருட்களை உபயோகித்தால் பாதிப்பு அதிகமாகிவிடும். வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டே எண்ணெய் சருமத்திற்கு எளிமையான முறையில் தீர்வு கண்டுவிடலாம். அதற்கு செய்ய வேண்டிய பேஸ் பேக்குகள் உங்கள் பார்வைக்கு…

கடலை மாவு-மஞ்சள்:

தேவையான பொருட்கள்:

கடலை மாவு -1 கப்

பொடித்த மஞ்சள்: சிறிதளவு

பால்- சிறிதளவு

செய்முறை:

மஞ்சளை நன்கு தூளாக்கிக்கொள்ளவும். கடலை மாவு, மஞ்சளுடன் பால் சேர்த்து பசை போல் குழப்பிக்கொள்ளவும். இந்த கலவையை முகம், கழுத்து பகுதியில் பூசிவிட்டு 20 நிமிடங்கள் உலர விடவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் டவலை முக்கி முகத்தில் படிந்திருக்கும் பேஸ் பேக்கை துடைத்தெடுக்கவும். பின்பு முகம் மற்றும் கழுத்து பகுதியை நன்கு கழுவவும். பின்னர் ஜெல் அல்லது ஈரப்பதமான மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தவும். குளிர் காலத்தில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இவ்வாறு செய்து வரலாம். எண்ணெய் பசை நீங்கி சருமம் பொலிவுடன் காட்சி தரும்.

தேன் – ஓட்ஸ்-தயிர்-பாதாம்:

ஓட்ஸ் சருமத்தில் ஈரப்பதத்தை உண்டாக்கும். சரும துளைகள் அடைபடாமல் காக்கும். தயிர், சரும புள்ளிகள் மற்றும் தழும்புகளை குறைக்க உதவும். தேன் அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்டது. பாதாமில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. இது சருமத்தை மென்மையாக்கும்.

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் – தேவையான அளவு

தேன் – 2 டேபிள்ஸ்பூன்

பாதாம்- 5

தயிர்- 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

ஓட்ஸ், பாதம் இரண்டையும் நன்றாக பொடித்து தூளாக்கிக்கொள்ளவும். அதனுடன் தேன், தயிர் கலந்து பசை போல் குழப்பிக்கொள்ளவும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவிவிடலாம்.

இந்த பேஸ் பேக்குகளை வாரத்தில் ஓரிரு நாட்கள் பயன்படுத்தி வரலாம். எண்ணெய் பசை தன்மை கொண்ட சரும பிரச்சினையில் இருந்து விடுபட்டுவிடலாம்.

கேரட்-தேன்:

இந்த பேஸ் பேக் சருமத்தை ஈரப்பதமாக்க உதவும். இறந்த செல்களை நீக்க துணை புரியும். சோர்வை போக்கி சருமத்திற்கு பொலிவு சேர்க்கும்.

ஒரு கேரட்டை நன்றாக துருவி, விழுதாக அரைத்துக்கொள்ளவும். அதனுடன் 2:1 என்ற விகிதத்தில் தேன் சேர்த்துக்கொள்ளவும். அதாவது கேரட் இரு பங்கு, தேன் ஒரு பங்காக இருக்க வேண்

டும். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் உலர விடவும். பின்பு கை விரல்களை தண்ணீரில் முக்கி வட்ட வடிவத்தில் முகத்தில் தேய்த்து கலவையை அப்புறப்படுத்தவும். பின்பு முகத்தை கழுவி விடலாம்.

Related posts

இந்த இரண்டு பொருள் மட்டும் இருந்தாலே மற்றவர் பொறாமைப்படும் அழகினை பெறலாம் தெரியுமா?

nathan

சோப்பிற்கு பதிலாக இதை பயன்படுத்தினால் நல்ல பயன் கிடைக்கும்…தெரிஞ்சிக்கங்க…

nathan

சருமம் பார்க்க மிக சொரசொரப்பாக இருந்தால் எளிமையாக சரி செய்ய சில வழி முறைகள்!…

sangika

வாரம் முழுவதும் சரியா தூங்காம கருவளையம் வந்துடுச்சா? அதைப் போக்க சில டிப்ஸ்…

nathan

உங்களுக்கு மூக்கு சுற்றி தோல் உரியுதா? இதோ சில டிப்ஸ்.

nathan

உங்க உதட்டில் உள்ள கருமையைப் போக்கி, பிங்க் நிறத்தில் மாற்ற வேண்டுமா? அப்ப இத படிங்க!

nathan

சிவப்பு சந்தனத்தை எதனுடன் சேர்த்து பேக் போட்டால் என்ன சரும பிரச்சனைகள் தீரும் என்று பார்க்கலாம்.

nathan

முகத்தை நீண்ட காலம் இளமையாக வைக்க கொய்யாப்பழத்தை இப்படி பயன்படுத்துங்க..!

nathan

உங்களின் சோர்ந்த முகத்தை பளிச்சென்று மாற்றும் இந்த 3 ஸ்க்ரப் உபயோகித்திருக்கிறீர்களா?

nathan