27.3 C
Chennai
Sunday, May 19, 2024
08 1428492915
இனிப்பு வகைகள்

சுவையான இனிப்பு போளி

இதுவரை எத்தனையோ ஸ்டைலில் போளி செய்து சுவைத்திருப்பீர்கள். அதில் பெரும்பாலானோருக்கு தெரிந்தது தேங்காய் போளி தான்.

இந்த போளியானது சுரைக்காய் கொண்டு செய்யப்படுவது. மேலும் வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு இருக்கும். சரி, இப்போது அந்த சுரைக்காய் இனிப்பு போளியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

மைதா – 1 கப்
உப்பு – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு
தண்ணீர் – தேவையான அளவு

பூர்ணம் செய்வதற்கு…

துருவிய சுரைக்காய் – 1 கப்
சர்க்கரை – 3/4 கப்
ஏலக்காய் தூள் – 1/4 டீஸ்பூன்
பால் – 1/2 கப்
கேசரி பவுடர் – 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, சப்பாதி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சுரைக்காயை சேர்த்து நன்கு வதக்கி, பின் பால் சேர்த்து நன்கு மென்மையாக வேகும் வரை கொதிக்க விட வேண்டும்.

பிறகு அதில் கேசரி பவுடர், சர்க்கரை சேர்த்து கிளறி விட வேண்டும். கலவையானது கெட்டியாக வர ஆரம்பிக்கும் போது, அதில் சிறிது நெய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

இறுதியில் மைதா மாவை சிறு உருண்டைகளாக பிரித்து, சப்பாத்தி போன்று தேய்த்து, நடுவே ஒரு ஸ்பூன் சுரைக்காய் கலவையை வைத்து, நான்கு புறகும் மடித்து, மீண்டும் ஒருமுறை லேசாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.

பின் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், அதில் தேய்த்து வைத்துள்ள போளியை போட்டு, நெய் ஊற்றி முன்னும் பின்னும் நன்கு வேக வைத்து இறக்கினால், சுரைக்காய் இனிப்பு போளி ரெடி!!!

Related posts

நவராத்திரி துர்கா பூஜா ஸ்பெஷல் : அன்னாசிப்பழ அல்வா!

nathan

அதிரசம், முறுக்கு.. தேங்காய் பூ லட்டும், பளபள பாயசமும்.. ரெசிப்பி கார்னர்

nathan

பூந்தி லட்டு

nathan

சுவையான கேரட் அல்வா

nathan

சுலபமான முறையில் ஜாங்கிரி செய்ய இதோ இதை படியுங்கள்….

nathan

சூப்பரான கீர் செய்யலாம் வாங்க…

nathan

கேரட் ஹல்வா

nathan

சுவையான ரவா கேசரி

nathan

குல்கந்து ரவை அல்வா

nathan