30 வயதை எட்டியதுமே பலருக்கும் இந்த பிரச்சனை எட்டிப் பார்க்கிறது, முறையற்ற உணவுப் பழக்கம், சுற்றுச்சூழல் மாசு, தூக்கமின்மை, ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம், ஹார்மோன்கள் ஏற்றத்தாழ்வு, செயற்கை கெமிக்கல்கள் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவது என பல காரணங்களில் முடி உதிர்கிறது.
இதற்காக பலரும் பிரத்யேக சிகிச்சைகளை எடுத்துக் கொள்கின்றனர், ஆனால் ஒரு சிலருக்கு அது நிரந்தர தீர்வை தராது.
எனவே நாம் வீட்டிலேயே மிக எளிமையான முறைகளை பின்பற்றுவதன் மூலம் முடி உதிர்தலை கட்டுப்படுத்தலாம்.
தாறுமாறாக எடையைக் குறைத்த பிரபல நடிகை! எடுத்துக்கொண்ட டயட் என்ன
கவனத்தில் கொள்ள வேண்டியவை
முடி நன்றாக வளர வாரத்தில் ஒருமுறையாவது கண்டிப்பாக எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும், தலை வறண்டு போனாலே பொடுகு தொல்லை, நுனி முடி வெடிப்பு என பல பிரச்சனைகள் தலைதூக்கிவிடும், எனவே வாரத்தில் ஒருமுறையாவது மயிர்க்கால்களில் நன்றாக மசாஜ் செய்து ஒருமணிநேரம் அப்படியே விட்டுவிட்டு தலையை அலசவும்.
மிக முக்கியமாக தலைக்கு குளிக்கும் போது குளிர்ந்த நீர் அல்லது நார்மல் வெப்பநிலையில் உள்ள நீரை பயன்படுத்தவும், சூடான நீரால் தலைமுடியின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
அத்துடன் ஈரமான முடியை சீப்பால் சீவ வேண்டாம், ஏனெனில் ஈரமான முடி வலுவிழந்து இருப்பதால் வேர்க்காலுடன் உடைந்துவிடும், ஆறு மாதத்திற்கு ஒருமுறையாவது நுனி முடியை வெட்டுவது அவசியம், ஏனெனில் இறந்த செல்கள் நுனி முடியில் சேர்ந்து முடியின் வளர்ச்சியை தடுத்துவிடும்.
தினமும் 10 நிமிட ஓட்டம் அல்லது அரைமணிநேர நடைபயிற்சியும் உடலின் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதால் முடி வளர்ச்சியும் சீராக இருக்கும்.
இவை அனைத்தையும் நாம் சரியாக பின்பற்றினாலும் நம் முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கை ஹேர் பேக்குகள் முடியின் வளர்ச்சியை அதிகப்படுத்தும்.
மிக எளிதாக கிடைக்கக்கூடிய அதே சமயம் முடியை வேகமாக வளரவைக்கும், வேப்பிலை, கருவேப்பிலை, வெந்தயம், சின்ன வெங்காயம் மற்றும் கற்றாழையை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு சளி தொந்தரவு, சைனஸ் தொந்தரவு அதிகம் இருந்தால் அதற்கேற்ற படி கீழ்க்கண்ட ஹேர்பேக்குகளை பயன்படுத்தவும்.
சோளம் ஏன் கண்டிப்பாக சாப்பிட வேண்டும்? இதிலுள்ள நன்மைகள் என்னென்ன?
வேப்பிலை
* வாரம் ஒருமுறை வேப்பிலை எண்ணெயைக் கொண்டு தலைமுடியை மசாஜ் செய்து வந்தால், பொடுகை அடியோடு விரட்டலாம், இதனால் வழுக்கையான பகுதியிலும் முடிவ வளரும்.
* வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் தலையை அலச வேண்டும்.
* ஒரு கைப்பிடி வேப்பிலையை குளிக்கும் தண்ணீரில் போட்டுவிடவும், அரை மணிநேரம் கழித்து இந்த நீரை கொண்டு முடியை அலசிவந்தால் தலையில் அரிப்பு சரியாகும், முடியும் பொலிவுடன் பட்டுப்போன்று இருக்கும்.
ஒரே நேரத்தில் அதிக மாம்பழங்களை சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
கறிவேப்பிலை
* ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை ஒரு கப் தேங்காய் எண்ணெய்யில் நன்கு கொதிக்க வையுங்கள், எண்ணெய் நன்கு கருப்பாக மாறியதும் அடுப்பை அணைத்துவிடவும், இதனை கொண்டு வாரம் இருமுறை தலைக்கு மசாஜ் செய்து குளித்து வந்தால் நல்ல பலனை பெறலாம்.
* ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை நன்கு அரைத்துக்கொண்டு, அதனுடன் ஒரு கப் தயிரில் கலந்து முடியில் தடவுங்கள், இதை அப்படியே ஒரு மணி நேரம் ஊற வைத்து அலசிவிடுவதால் தலைமுடி வளரும்.
* ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, ஒரு நெல்லிக்காய், ஒரு ஸ்பூன் வெந்தயம் மூன்றையும் மிக்ஸியில் மைய அரைத்து அதை முடியில் தடவி ஊற வையுங்கள். பின் 1 மணி நேரம் கழித்து தலையை அலசிவிடுங்கள்.
மீன் தலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
வெந்தயம்
* வெந்தயத்தை இரவு முழுவதும் நீர்விட்டு ஊறவைத்து காலையில் மைய அரைத்து வைத்துக் கொண்டு அதனோடு சிறிது தயிர் சேர்த்து நன்கு கலந்து தலை முடிக்கும், தலையின் மேற்புறத்தும் தடவி நன்றாக மசாஜ் செய்து வைத்திருந்து 20 நிமிடங்களுக்கு பிறகு தலைக்கு குளித்தால் பொடுகுகள் போகும்.
* ஒரு கைப்பிடி அளவு வெந்தயத்தை 300மி.லி. தேக்காங் எண்ணெய்யில் இட்டு கொதிக்க வைத்து எடுத்து வடிகட்டி இளஞ்சூட்டோடு தலைக்குத் தேய்த்து நன்கு மசாஜ் செய்துவர இளநரையைத் தடுத்து நிறுத்தும், எண்ணெய் இரவு முழுவதும் தலையில் ஊறும்படி வைத்திருந்து காலை குளிக்க வேண்டும்.
* வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைத்து அரைத்து எடுத்துக் கொண்டு தலையில் தேய்த்து குளித்துவர முடி கொட்டுவது நின்று முடி நன்கு வளர தொடங்கும்.
நீரிழிவு பிரச்சினைக்கு கொத்தமல்லி நீர்! 6 முதல் 8 வாரம் இதை எடுத்துகோங்க போதும்
கற்றாழை
* ஒரு பௌலில் கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெயை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து, 3 நாட்கள் ஊற வைக்க வேண்டும். பின்பு ஊற வைத்துள்ள கற்றாழை ஜெல் கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, குறைவான தீயில் 10-15 நிமிடம் நன்கு கிளறி விட்டு சூடேற்றி, ஒரு பதத்திற்கு வந்ததும் இறக்கி குளிர வைத்து, வடிகட்டினால், கற்றாழை எண்ணெய் தயார்.
* கற்றாழையின் ஜெல்லுடன் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தலையில் ஊற வைத்து குளித்தால் தலைமுடி பளபளப்பாவதுடன் உடலுக்கு குளிர்ச்சியும் கிடைக்கும்.
* எலுமிச்சை சாறு 2 டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு அதனுடன் கற்றாழையின் ஜெல்லை சேர்த்து மிக்ஸியில் அரைத்து தலையில் சேர்த்து ஊற வைத்து குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஏலக்காயை இப்படி பயன்படுத்தி பாருங்க… பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளி தருமாம்!
சின்ன வெங்காயம்
* வெங்காயத்தை நன்கு அரைத்து, வடிகட்டவும். அந்தச் சாற்றுடன் தேனைக் கலந்துகொள்ளவும். வெங்காயச் சாற்றை பஞ்சால் நனைத்து, உச்சந்தலையில் நன்கு தடவவும். அரை மணி நேரத்துக்குப் பிறகு, ஆர்கானிக் ஷாம்பு அல்லது சிகைகாயால் தலை முடியை அலசவும். இதை வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்கள் என, குறைந்தது ஐந்து மாதங்களாவது தொடர்ந்து செய்ய வேண்டும்.
* வெங்காயச் சாறு ஒரு டீஸ்பூனுடன், தேங்காய் எண்ணெய் இரண்டு டீஸ்பூன் கலந்து தலையில் உச்சந்தலை முதல் நுனி வரை நன்றாக மசாஜ் செய்ய வேண்டும், வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்தாலே நல்ல பலன் கிடைக்கும்.
* ஆலிவ் எண்ணெயை 15 நிமிடம் தலையில் தேய்த்து பின்னர் வெங்காயச் சாற்றினைக் கொண்டு மசாஜ் செய்து 10 நிமிடத்துக்குப் பின் ஷாம்பு போட்டு மிதமான சுடுநீரில் தலையை அலசினால் தலைமுடி நன்கு வளரும்.