27.5 C
Chennai
Tuesday, Jan 21, 2025
28 1509171058 1
ஹேர் கலரிங்

முடிக்கு டை அடிக்காம கலரிங் பண்ண முடியும் ?தெரிந்துகொள்வோமா?

பலருக்கும் தலையாயப் பிரச்சனையாக இருக்கும் தலைமுடிப்பிரச்சனைக்கு தீர்வு சொல்லதான் இது. தொடர்ந்து முடிகளில் மாசு படிவதினால் அதீதமான தலைமுடி உதிர்வுப் பிரச்சனையை சந்திக்க வேண்டியிருக்கிறது. அதோடு நாகரிகம் கருதி எண்ணெயும் வைப்பது குறைந்துவிட்டது. ஆதலால் முடி வழக்கதிற்கு மாறாக வறண்டு அதிகமாக உதிர்வது, செம்பட்டை தெரிவது, இளநரை வருவது, முடியின் நிறம் வேறுபடுவது என சில சிக்கல்களை சந்தித்திருப்போம்

ஆரோக்கியமாக முடியை பராமரிக்கவும் கெமிக்கல்கள் இல்லாமல் அதன் வண்ணங்களை மெருகேற்றவும் சில அடிப்படை யோசனைகள் இருக்கிறது

முடியின் வண்ணத்திற்கு என்ன காரணம் : பல வண்ணத்தில் தலை முடி இருந்தாலும் இரண்டே இரண்டு நிறமிகள் (Pigment) மட்டுமே இதற்குக் காரணம். இவற்றுள் யூமெலானின் (Eumelanin) என்கிற நிறமிதான் நம் தலைமுடி கறுப்பாக இருப்பதற்குக் காரணம். இதில் மற்றொரு வகையான யூமெலானின் பழுப்பு நிறத்தை தரும்.

பொமேலானின் (Pheomelanin) என்கிற நிறமி அதிகமாக இருந்தால், தலை முடி செம்பட்டையாக அல்லது ஆரஞ்சு நிறத்தில் அமையும். இந்தியர்களின் மரபணுவில் கருமை யூமெலானின் அதிகமாக இருப்பதால் நம் தலைமுடி கறுப்பாகவே இருக்கிறது. அதே சமயம் குறைவான அளவில் பழுப்பு யூமெலானின் சுரந்தால் அந்த தலைமுடி பொன்னிறமாக காட்சி தரும். வயது கூடக் கூட தலை முடி வளரும் வேர் முனையில் இந்த நிறமி சுரப்பு நின்று போகும் போதுதான் தலை முடி கருமை இழந்து வெள்ளை முடி தோன்றுகிறது.

வயது கூடக் கூட தலை முடி வளரும் வேர் முனையில் இந்த நிறமி சுரப்பு நின்று போகும் போதுதான் தலை முடி கருமை இழந்து வெள்ளை முடி தோன்றுகிறது.

நிறங்கள் : நமக்கு தலைமுடி என்றாலே கருப்பு நிறமாக இருக்கவேண்டும் என்று நினைப்போம். கருப்பு வண்ணம், லேசான பிரவுன் நிறம் போன்றவற்றிற்கு அன்றாடம் நாம் வீடுகளில் பயன்படுத்தும் பொருட்களை பயன்படுத்தினாலே போதுமானது. இவற்றில் எந்த கெமிக்கல் பாதிப்பும் இருக்காது என்பதல நீங்கள் தாரளமாக பயன்படுத்தலாம்.

ஹேர் பேக் : மருதாணி இலைகள், காபி டிகாஷன்,செம்பருத்தி பூ, கறிவேப்பிலை,மாதுளம் பழம்,பீட்ரூட் போன்றவற்றை உங்கள் கூந்தலுக்கு நிறமேற்ற பயன்படுத்தலாம். உங்களுக்கு வேண்டுமான நிறத்தைப் பொருத்து பொருட்களை அரைத்து தலையில் ஹேர் பேக்காக போடலாம். கூந்தலின் நிறத்தை ஹேர் பேக்கினை விடவும் நீங்கள் சாப்பிடும் உணவுகளிலேயே மாற்றத்தை காண முடியும். உங்கள் உடலில் சில சத்துக்கள் குறைந்தாலும் அதன் அறிகுறிகளாகவும் உங்கள் முடியின் நிறம் மாறக்கூடும் என்பதால் உணவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

உணவுப்பழக்கம் : தலைமுடி ஆரோக்கியமானதாக மாற்றுவதற்கு மிகவும் அடிப்படையான் ஒன்று முடிக்கு தேவையான போசாக்குகளை கொடுக்க வேண்டும். அப்போது தான் முடியின் வளர்ச்சியில் நாம் ஏதேனும் மாற்றத்தினை எதிர்ப்பார்த்திட முடியும். சரி, தற்போது முடியின் வளர்ச்சிக்கு என்னென்ன சத்துக்கள் தேவை, அவற்றை எந்த மாதிரியான உணவுகளில் இருந்து பெறலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

கார்போஹைட்ரேட்: உங்கள் உணவுகளில் அறுவது சதவீத இடத்தை கார்போஹைட்ரேட் தான் ஆக்கிரமித்து இருக்கிறது. உடலுக்கு தேவையான எனர்ஜியை வழங்குவதில் கார்போஹைட்ரேட் முக்கியப்பங்கு வகிக்கிறது. திசுக்களின் வளர்ச்சிக்கு இது அவசியம் தேவை. காய்கறி, பழங்கள், முழு தானியங்கள்,அரிசி,போன்றவற்றில் கார்போஹைட்ரேட் நிறைந்து காணப்படுகிறது. கார்போஹைட்ரேட் எடுப்பதால் அவை பி காம்ப்ளெக்ஸ் விட்டமின்ஸ் நமக்கு கிடைக்கிறது. இவை தலைமுடியின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வகிக்கிறது.

ப்ரோட்டீன் : நீளமான கூந்தலுக்கு ப்ரோட்டீன் தேவை. இவை உங்கள் உணவுகளில் இருந்து இருபது சதவீதம் பெற்றுக்கொள்ளலாம். ப்ரோட்டீன் அதிகமாக எடுத்துக் கொண்டால் முடி உடைவதை குறைக்கும். உடலில் ப்ரோட்டீன் பற்றாகுறை ஏற்படும் போது அதிகமான முடி உதிர்வு ஏற்படும். அதோடு இவை முடியின் நிறத்திலும் மாற்றத்தை காண்பிக்கிறது. சோயா,பால்,பீன்ஸ்,பருப்புகள்,நட்ஸ் போன்றவற்றில் எல்லாம் ப்ரோட்டின் நிறைந்து காணப்படுகிறது.

ஃபேட்டி ஆசிட் : முடிக்கு ஃபேட்டி அமிலம் அவசியம். ஃபேட்டி அமிலம் இருந்தால் தான் முடியின் வறட்சியை முடியின் தடையை குறைத்திடும். காய்கறி,லெகியூம்,ஃபிளாக்ஸ் சீட்ஸ்,தானியங்கள்,பூசணி விதைகள் போன்றவற்றில் அதிக ஃபேட்டி அமிலம் இருக்கிறது. ஒரு நாளில் பதினைந்து சதவீதம் ஃபேட்டி அமிலம் எடுத்துக் கொள்ளலாம்.

விட்டமின் : தலைக்கு முடியின் வேர்கால்களுக்கு விட்டமின் ஏ மிகவும் அவசியம். பச்சை மற்றும் மஞ்சள் நிறக் காய்கறிகளில் விட்டமின் ஏ அதிகமிருக்கிறது. ஸ்வீட் பொட்டேட்டோ,ப்ரோக்கோலி ஆகியவற்றில் விட்டமின் ஏ நிறைய இருக்கிறது. விட்டமின் இ தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இவை தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு வளர்ச்சிக்கும் உதவுகிறது. நிறமிகளுக்கு, முடி உதிர்வைத் தடுக்க, தலை முடி நீளமாக வளர விட்டமின் பி, விட்டமின் சி மிகவும் தேவை.

இரும்புச்சத்து : இரும்புச்சத்து இல்லையென்றால் அவற்றிற்கு தேவையான நிறமிகள் பெருகுவதில் சிக்கல்கள் உண்டாகும். இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அசைவ உணவுகள்,சோளம்,கேழ்வரகு, கம்பு, கொள்ளு,எள்ளு,பாகற்காய்,பப்பாளி,மாதுளம்பழம்,தர்பூசணி,அன்னாசிப்பழம்,கீரை, பேரீட்சை போன்றவற்றில் அதிக இரும்புச்சத்து கிடைக்கிறது.

பொட்டாசியம் : ஒரு நாளைக்கு மனிதனுக்கு சுமார் 4700 மி.கி. பொட்டாசியம் சத்து தேவைப்படுகிறது. காய்கறிகள், பழங்களுடன் ஒப்பிடும் போது உருளைக்கிழங்கில் இந்த சத்து அதிக அளவு உள்ளது . வாழைப்பழம், பெர்ரி, பீட்ரூட், ப்ரோக்கோலி, பூண்டு போன்றவற்றில் பொட்டாசியம் நிறைந்து காணப்படுகிறது. தலையில் உள்ள செல்களை துரிதப்படுத்துவதில் பொட்டாசியம் முக்கிய இடம் வகிக்கிறது.

மக்னீசயம் : முடிகளின் வளர்சிக்கு மக்னீசியம் தேவை. வாழை, அவகோடோ உள்ளிட்ட பழங்கள், காய்கறிகள், பாதாம், முந்திரி, பயறு வகைகள், விதைகள், முழுத் தானியங்கள், பால், சூரியகாந்தி விதை போன்றவற்றில் அதிகப்படியான மக்னீசியம் கிடைக்கிறது.

ஜிங்க் : கூந்தலின் வளர்ச்சிக்கும் அதன் நிறங்களுக்கு ஆதரமாய் இருக்கிறது இந்த ஜிங்க். இதன் அளவில் வேறுபாடு ஏற்ப்பட்டால் முதல் பாதிப்பு ஏற்படுவது தலைமுடிக்குத் தான். வேர்க்கடலை, இறைச்சி, காளாண், காராமணி, பசலைக்கீரை, டார்க் சாக்லெட், பூசணி விதைகள் ஆகியவற்றில் ஜிங்க் நிறைய இருக்கிறது.

அயோடின் : கடல் உணவுகளில் அதிகப்படியான ஐயோடின் சத்து நிறைந்திருக்கும். இதன் அளவு குறைந்தால் மெலனின் உற்பத்தியில் மாற்றம் ஏற்படும். இதனால் தலைமுடியின் நிறம் மாறும், முடி கொட்டும்.28 1509171058 1

Related posts

‘ஹேர் கலரிங்’கில் எத்தனை வகை?

nathan

உங்களுக்கு தெரியுமா முடிக்கு டை அடிக்காம கலரிங் பண்ண முடியும் ?

nathan

செம்பட்டை முடியினை கருமையாக்க எளிய வழிகள்

nathan

ஹேர் டை உபயோகிப்பது ஆபத்தானதா?

nathan

கலரிங் செய்த முடியை ஆரோக்கியமாக வைக்கும் ஹேர் மாஸ்க்

nathan

‘ஹேர் கலரிங்’கில் எத்தனை வகை?

nathan

பூண்டை பயன்படுத்தி செய்யப்படும் இயற்கையான மற்றும் ஆயுர்வேத ஹேர் டை!!!

nathan

இயற்கை முறையில் நரையை மறைக்கலாம்!

nathan

உங்க ஹேர் கலரை நீக்க வேண்டுமா?அப்ப இத படிங்க!

nathan