26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
sl3751
சூப் வகைகள்

தாய்லாந்து கோகனட் சூப்

என்னென்ன தேவை?

தேங்காய்ப்பால் 3 கப்,
கலேங்கல் எனப்படும் தாய்லாந்து இஞ்சி அல்லது இஞ்சி 2 நீளத்துண்டு,
பொடியாக நறுக்கிய பூண்டு 1 டீஸ்பூன்,
ஹலபினோ எனப்படும் தாய்லாந்து மிளகாய் அல்லது பச்சை மிளகாய் 2,
எலுமிச்சைச்சாறு 2 டேபிள்ஸ்பூன்,
ஆலிவ் எண்ணெய் 1 டீஸ்பூன்,
உப்பு 1/2 டீஸ்பூன்,
செலரி தண்டு 2,
நறுக்கிய கொத்தமல்லித் தண்டு 2,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை 2 டீஸ்பூன்,
வெங்காயத்தாள் 2,
லெமன் கிராஸ் 2 (அ) எலுமிச்சை இலை 4,
துருவிய சிவப்புக் குடை மிளகாய் சிறிது.
எப்படிச் செய்வது?

இஞ்சியை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், செலரி தண்டு, கொத்தமல்லித்தண்டு, வெங்காயத் தாளின் வெள்ளைப்பகுதி, எலுமிச்சை இலை, பூண்டு, உப்பு, இஞ்சி ஆகியவற்றை நறுக்கி அதில் போட்டு, பச்சை மிளகாயைக் கீறிப் போட்டு, மூடி வைத்து, சின்னத் தீயில் 15 நிமிடம் கொதிக்க விடவும். தேங்காய்ப்பால் சேர்த்து சின்னத் தீயில் 2 நிமிடம் வைக்கவும்.

கொதிக்க விடவேண்டாம். பிறகு அடுப்பிலிருந்து இறக்கி, மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை, வெங்காயத் தாளின் பச்சைப் பகுதி, துருவிய சிவப்பு குடை மிளகாய், எலுமிச்சைச் சாறு, ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி சூப் கிண்ணங்களில் சூடாகப் பரிமாறவும்.

sl3751

Related posts

சத்து நிறைந்த ராகி நூடுல்ஸ் வெஜிடபிள் சூப்

nathan

தக்காளி பேசில் சூப்

nathan

பத்து நிமிட காய்கறி சூப்

nathan

தேங்காய் – வேர்க்கடலை சூப்

nathan

தக்காளி சூப்

nathan

சத்தான முளைகட்டிய நவதானிய சூப்

nathan

ராஜ்மா சூப்

nathan

பார்லி லெண்டில்ஸ் சூப்

nathan

மனத்தக்காளி கீரை தேங்காய்பால் சூப்

nathan