30.7 C
Chennai
Sunday, Jun 23, 2024
IMG 7495
அசைவ வகைகள்

டேஸ்டி சிக்கன் வறுவல்

தேவையானவை:

சிக்கன்…….1 /2 கிலோ
வெங்காயம்…..150 கிராம்
இஞ்சி………சின்ன துண்டு
பூண்டு………10
பட்டை………சிறிது

கிராம்பு…….4
முந்திரி.. தேவையானல் ,..5
தயிர்………..2 தேக்கரண்டி
மிளகாய் பொடி ……. 1 தேக்கரண்டி.
எலுமிச்சை ……… 1
மல்லி தழை……..கொஞ்சம்
எண்ணெய்………..4 தேக்கரண்டி.
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

சிக்கனை நன்கு கழுவி வைக்கவும். வெங்காயத்தை உரித்து, நறுக்கி வைக்கவும். இஞ்சி, பூண்டு, முந்திரி, பட்டை + கிராம்பை நன்கு அரைத்து வைக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும், அதில் நறுக்கிய வெங்காயம் + உப்புத்தூள் சிறிது போட்டு நன்கு வதக்கவும். உப்பு போடுவதால் வெங்காயம் சீக்கிரம் வதங்கும் , சுவையாகவும் இருக்கும். பின் கழுவிய சிக்கன்,தயிர், அரைத்த விழுது + உப்பு போட்டு சுமார் 10 -15 நிமிடம் நன்கு வதக்கவும். பிறகு இதில் மிளகாய் பொடி போட்டு வதக்கி, எலுமிச்சை சாறு விட்டு தீயைக் குறைத்து சிம்மில் வைக்கவும்.

இதற்குள் சிக்கன் வெந்து பிரட் போல மெதுவாகி இருக்கும். சிறிது நேரம் சிம்மில் வைத்து நன்கு நிறம் வந்ததும் இறக்கி, மல்லி தழை தூவி பரிமாறவும்.

இந்த சிக்கன் வறுவல் செய்வதும் எளிது. சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம், தக்காளி சாதம், வெஜிடபுள் பிரியாணி, எதற்கு வேண்டுமானாலும் இதனை தொட்டு சாப்பிடலாம். தூள் கலக்கும் சுவை.
IMG 7495

Related posts

சிக்கன் தோசை செய்வது எப்படி?

nathan

முட்டை குழம்பு

nathan

காரசாரமான காரைக்குடி நண்டு மசாலா

nathan

மொறு மொறுவென்ற கோழி நக்கட்ஸ்

nathan

சுவையான கல்மி கபாப்

nathan

சைனீஸ் சிக்கன் பக்கோடா….

nathan

மதுரை நாட்டுக்கோழி வறுவல்

nathan

காரசாரமான இறால் மசாலா

nathan

அனைவருக்கும் பிடித்த சுவையான சிக்கன் பிரியாணி

nathan