26.4 C
Chennai
Sunday, Dec 22, 2024
cover1 29 1514532776
முகப் பராமரிப்பு

உங்க உதடு கன்னங்களில் உண்டாகும் கருமையை போக்குவது எப்படி தெரியுமா?

உதடு மற்றும் கன்னத்தை சுற்றி இருக்கும் கருமை சருமம் உங்கள் முக சரும நிறத்தை சமமாக காட்டாது.இது உங்கள் முகழகையே கெடுத்து விடும். இந்த பிரச்சினை உலகம் முழுவதும் உள்ள ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இருக்கின்றன.

இந்த பிரச்சினை ஏற்படக் காரணம், அதிகமான நிறமிகள் (ஹைபர் பிக்மன்டேஷன்), அழுக்குகள், நச்சுப் பொருட்கள், த்ரட்டனிங், வேக்சிங் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது.

எனவே இந்த பிரச்சினையால் நிறைய பேர் தங்களது முக சருமத்தால் கவலைப்படுகின்றனர். இதை மறைக்க கண்சீலர் போன்ற மேக்கப் பொருட்களை அவர்கள் நாடுகின்றனர்.

ஆனால் இந்த அழகு பொருட்கள் தற்காலிகமாக கருமையை மறைக்க மட்டுமே பயன்படுகின்றன.நிரந்தர ஒரு பயனை பெற வேண்டும் என்றால் அதற்கு நாம் இயற்கை பொருட்கள் மூலம் தீர்வு காண்பதே சிறப்பு. அதைப் பற்றி தான் தமிழ் போல்டு ஸ்கை இங்கே பேச உள்ளது. உங்கள் உதடு மற்றும் கன்னத்தை சுற்றி இருக்கும் கருமை சருமத்தை போக்க எந்த முறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை இக்கட்டுரையில் காணலாம்.

உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கு ஒரு இயற்கையான ப்ளீச்சிங் ஏஜென்ட்டாக செயல்படுகிறது. எனவே இந்த உருளைக்கிழங்கு நமது உதடு மற்றும் கன்னத்தை சுற்றி இருக்கும் கருமை சருமத்தை எளிதாக நீக்கி விடுகிறது.

பயன்படுத்தும் முறை வேக வைக்காத உருளைக்கிழங்கை எடுத்து அதை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். இப்பொழுது பாதிக்கப்பட்ட சரும பகுதியில் இந்த துண்டுகளை கொண்டு தேய்க்கவும். 15- 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு பிறகு குளிர்ந்த மற்றும் சூடான நீர் கலந்த கலவையில் கழுவ வேண்டும். தினமும் இதை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

எலும்பிச்சை சாறு உங்கள் உதடு மற்றும் கன்னத்தை சுற்றி இருக்கும் கருமை சருமத்தை நீக்க லெமன் ஜூஸ் பயன்படுகிறது. ஏனெனில் இதில் ஏராளமான சிட்ரிக் அமிலம் உள்ளது. பயன்படுத்தும் முறை 2 டீ ஸ்பூன் லெமன் ஜூஸ் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும். இப்பொழுது இந்த கலவையை ஒரு பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். பிறகு 10-15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த மற்றும் சூடான நீரில் கழுவவும்.வாரத்திற்கு 4-5 முறை என்று பயன்படுத்தி வந்தால் கருமை நீங்கும்.

கற்றாழை ஜெல் கற்றாழை ஜெல் ஒரு சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுக்கும் பொருளாகும். பயன்படுத்தும் முறை கற்றாழை ஜெல்லை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த மற்றும் சூடான நீரில் கழுவவும். இந்த முறையை ஒரு நாளைக்கு பல முறை என்ற முறையில் பயன்படுத்தி வந்தால் சரும கருமை நீங்குவதோடு சருமம் மிருதுவாகவும் மாறும்.

சந்தனப் பொடி சந்தன பொடி சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்க கூடியது. எனவே உங்கள் உதடு மற்றும் கன்னத்தை சுற்றி இருக்கும் கருமை சருமத்தை இது எளிதாக போக்கிடும். பயன்படுத்தும் முறை 1 டீ ஸ்பூன் சந்தனப் பொடி மற்றும் 2 டீ ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து இந்த பேஸ்ட்டை கருமை உள்ள இடத்தில் தடவ வேண்டும். பிறகு 20 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். வாரத்திற்கு 3-4 முறை என்ற விதத்தில் செய்து வந்தால் விரைவான மாற்றத்தை காணலாம்.

தேன் தேனில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை வெள்ளையாக்க பயன்படுகிறது. இதை தினமும் பயன்படுத்தி வந்தால் நல்ல விதமாக கருமையை போக்கி விடலாம். பயன்படுத்தும் முறை தேனை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15-20 நிமிடங்கள் அப்படியே வைத்து இருக்க வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். ஒரு நாளைக்கு ஒரு முறை என்று செய்து வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.

மஞ்சள் பொடி நமது பாரம்பரிய இயற்கை பொருளான மஞ்சள் தூளில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை நமது சருமத்தில் உள்ள கருமையை போக்குகிறது. எனவே உங்கள்உதடு மற்றும் கன்னத்தை சுற்றி இருக்கும் கருமை சருமத்தை போக்குகிறது. பயன்படுத்தும் முறை கொஞ்சம் மஞ்சள் தூளுடன் 1 டீ ஸ்பூன் யோகார்ட் சேர்த்து கலந்து கொள்ளவும். இப்பொழுது அந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 10-15 நிமிடங்கள் விடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த பேஸ்ட்டை வாரத்திற்கு ஒரு முறை என பயன்படுத்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

ஓட்ஸ் ஓட்ஸ் ஒரு சருமத்தை புதுப்பொலிவாக்கும் ஏஜெண்ட்டாகும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் நச்சுக்களை நீக்கி சருமத்திற்கு புத்துணர்வு கொடுக்கிறது. மேலும் சரும நிறத்தை மேம்படுத்துகிறது.

பயன்படுத்தும் முறை 1 டீ ஸ்பூன் ஓட்ஸ் மற்றும் 1/2 டீ ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும். பிறகு இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இந்த முறையை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வந்தால் கருமை நீங்கி புதுப்பொலிவு பெறுவீர்கள்.

ஆலிவ் ஆயில் ஆலிவ் ஆயில் நமது எல்லா சரும பிரச்சினைகளையும் போக்கும் மிகச் சிறந்த பொருளாகும். இது ஒரு சிறந்த வொயிட்டனிங் பொருளாகும். எனவே நமது உதடு மற்றும் கன்னத்தை சுற்றி இருக்கும் கருமை சருமத்தை போக்கி சரும நிறத்தை மேம்படுத்துகிறது.

பயன்படுத்தும் முறை கொஞ்சம் ஆலிவ் ஆயிலை இரவு படுக்க போகும் முன் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ வேண்டும். அப்படியே இரவு முழுவதும் விட்டு விட வேண்டும். பிறகு காலையில் எழுந்ததும் குளிர்ந்த மற்றும் சூடான நீரில் கழுவவும். இதை தினமும் பயன்படுத்தி வந்தால் கருமை சரும பிரச்சினையிலிருந்து விடுபடலாம்.

 

Related posts

சூப்பர் டிப்ஸ்! முகம், சருமப் பொலிவை பளபளக்கச் செய்யும் விட்டமின் -சி ஜூஸ்கள் ரெசிபிக்கள்

nathan

படிக்கத் தவறாதீர்கள்! தினமும் லிப்ஸ்டிக் போடுவது நல்லதா?

nathan

உங்களுக்கு தெரியுமா சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் உருளைக்கிழங்கு!

nathan

உங்களுக்கு தெரியுமா ஐஸ்கட்டியை முகத்தில் தேய்ப்பது சரியா?

nathan

வாரம் 3 முறை இத செஞ்சா, சரும சுருக்கமின்றி எப்போதும் இளமையுடன் இருக்கலாம் தெரியுமா?

nathan

முகத்தில் உள்ள கருமை போகணுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

பேஷியல் என்பது என்ன?

nathan

உங்களுக்கு தெரியுமா முகத்தை பட்டு போல மாற்றும் முன்னோர்களின் மூலிகை குறிப்புகள்…!

nathan

பெண்களே தூங்கி எழும்போது அழகியாக மாற வேண்டுமா?

nathan