இன்றைய நவீன உலகில் பர்ஸில் பணம் வைத்திருப்பவர்கள் குறைவு தான். ஆனால், அப்படி வைத்திருப்பவர்களில், தங்கள் பர்ஸ் அல்லது வீட்டில் வைத்திருக்கும் பணப்பெட்டியில் எப்போதும் பணம் நிறைந்திருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாகவே இருக்கும்.
ஆனால், சிலரது வீட்டில், பணம் வந்ததுதும் தெரியாமல் போனதும் தெரியாமால் இருக்கும். இன்னும் பலருக்கு மாத இறுதிக்குள் நிதி நிலைமை மோசமடைகிறது. மேலும், சில சமயங்களில் கடன் வாங்கி குடும்பத்தை நடத்த வேண்டிய சூழல் இருக்கும். வாஸ்து சாஸ்திரப்படி பணம் வைக்கும் பரஸில் பணத்தினை எவ்வாறு வைக்க வேண்டும் என்பதை காணலாம்.
செல்வத்தை ஒழுங்கு முறையில் வைத்தல்:
பணத்தை மதிக்க வேண்டும் பணத்தை மதித்தால் தான் நம் பணம் எப்போதும் நம்மிடமே இருக்கும்…நாம் பயன்படுத்தும் பணப்பை அதாங்க,பர்ஸ் இல் அதிக மதிப்பு கொண்ட பணம் முதல் குறைந்த மதிப்பு கொண்ட பணம் வரை அழகாக அடுக்கி பர்சில் வைப்பது நல்லது.
நாம் பயன்படுத்தும் பர்ஸ்- இல் பணத்தை எப்படி வைக்க வேண்டும் என ஒரு ஒழுங்கு முறை உள்ளது..
அது என ஒழுங்கு வரிசை முறை தெறியுமா ?
அதாவது ரூ.2000,ரூ.500,ரூ.200,ரூ.100,ரூ.50,ரூ.20,ரூ.10,ரூ.5, பின்னர் சில்லறை காசுகள்…. வைக்க வேண்டும்..
பணத்தை ஒரு பக்கம் சுருட்டியும், இன்னொரு ரூபாயை மடக்கி வைத்தல் இது போன்று செய்தல் கூடாது .பணத்தை மதிக்க வேண்டும் பணத்தை மதித்தால் தான் நம் பணம் எப்போதும் நம்மிடமே இருக்கும்…நாம் பயன்படுத்தும் பணப்பை அதாங்க,பர்ஸ் இல் அதிக மதிப்பு கொண்ட பணம் முதல் குறைந்த மதிப்பு கொண்ட பணம் வரை அழகாக அடுக்கி பர்சில் வைப்பது நல்லது.
இது தான் பண ஒழுங்கு முறை என்பது..அதே போன்று,வீட்டிலிருந்து வெளியில் செல்லும் போது எவ்வளவு பணமா நம் கையில் வைத்திருந்தோம் என்பதை நன்றாக ஒரு முறை எண்ணிவிட்டு பின்னர் வீட்டிற்கு வந்தவுடன்,அந்த பணத்தை எண்ணி பார்க்க வேண்டும் .
அதாவது கணக்கு தெரியவேண்டும்,குறிப்பிட்ட அன்றைய தினதில் எவ்வளவு செலவு ஆனது என்பது பற்றி உங்களுக்கு தெரிய வேண்டும்.
கணக்கு வழக்கு பார்த்து பணத்தை கையாண்டால் லக்ஷ்மிக்கு மிகவும் பிடிக்குமாம்.இவ்வாறு சில நாட்கள் செய்யும் போது ஒரு பெரிய மாறுதலை உணரலாம் என பணவளக்கலை கூறுகிறது.