29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
milk bath
சரும பராமரிப்பு

உள்ளே…வெளியே.. பால்! அழகு குறிப்புகள்!!

தினமும் பால் குடிப்பதால்…

கால்சியம் சத்து நிறைந்த பால், எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் உதவும்.
பாலில் உள்ள புரதச் சத்து, தசைகளின் கட்டுமானத்துக்கு உதவும்.
பொலிவான சருமம் கிடைக்க, பாலில் உள்ள லாக்டிக் அமிலம் உதவும்.
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கும்.
வைட்டமின்கள், தாது உப்புக்கள் அதிக அளவில் இருப்பதால், முழுமையான ஆரோக்கியத்தை அளிக்கும்.

பாலை சருமத்தில் தடவிவந்தால்…

சருமத்தின் பொலிவை மேம்படுத்தும்.
இயற்கையான மாய்ஸ்ச்சரைசராக செயல்படும்.
வெடிப்புகள் மற்றும் குழிவுகளைப் போக்கும்.
கருவளையம் மறையும்.
முடியின் வறட்சி நீங்கும்.

பால் டிப்ஸ்… பளிச் டிப்ஸ்…

தலா ஒரு டேபிள்ஸ்பூன் தேன், எலுமிச்சைச் சாறுடன் இரண்டு டேபிள்ஸ்பூன் பால் சேர்த்துக் கலந்து முகத்தில் பூசலாம். இந்த பேக், சருமத்துக்கு மென்மையான பிளீச்சிங்காக செயல்பட்டு, பொலிவைக் கூட்டும்.
பஞ்சை பாலில் நனைத்து முகத்தில் துடைத்த பின் ஐந்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவினால், முகத்தில் உள்ள அழுக்கு மற்றும் இறந்த செல்களை அகற்றிவிடலாம். தினமும் இதைச் செய்தால் முகம் பளிச்சென இருக்கும்.
milk bath

Related posts

இதை முயன்று பாருங்கள்..வாழைப்பழத்தை வைத்து சருமத்தை அழகாக்குவது எப்படி…?

nathan

சரும அலர்ஜிகளை விரைவில் மறையச் செய்யும் அற்புதக் குறிப்புகள்!!

nathan

தலைமுதல் கால் வரை… ‘தகதக’ வென மின்ன வேண்டுமா..?

nathan

கொசுக்கடியினால் ஏற்படும் சரும அலர்ஜியை தடுக்க இதை முயன்று பாருங்கள்!

nathan

கண்களைச் சுற்றி இருக்கும் சுருக்கத்தை விரட்ட வேண்டுமா?அப்ப தினமும் செய்யுங்க…

nathan

பணமே செலவழிக்காமல் அழகாக ஜொலிக்க கற்றாழை ஃபேஸ் பேக் போடுங்க

nathan

வீட்டில் இருந்தபடியே பப்பாளி(papaya) ஃபேசியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க… ப்யூட்டி பார்லருக்கே போகாமல் அழகை எப்படி அதிகரிக்கலாம் ?

nathan

வாழைப்பழத்தை இப்படியும் பயன்படுத்தலாமா? இதை முயன்று பாருங்கள்!…

sangika