face3
முகப் பராமரிப்பு

முகம் மொழுமொழுவென்று இருக்கும் அழகோ.. அழகு…

· முளைகட்டிய பச்சை பயறு 1 கப் அளவு எடுத்து அதனுடன் சின்னவெங்காயம் சேர்த்து காலையில் சாப்பிட்டுவரவேண்டும். அரை மணி நேரத்திற்குப் பிறகே காலை உணவு உண்ண வேண்டும். இப்படி செய்து வந்தால் கன்னக் குழிகள் மாறி முகம் மொழுமொழுவென்று இருக்கும்.

· பாதாம் பருப்பை அரைத்து பொடிசெய்து வைத்துக்கொண்டு தினமும் இரவு படுக்கைக்குச் செல்லும் முன் ஒரு டம்ளர் பாலில் 1 ஸ்பூன் அளவு பாதாம் பொடியும், 1ஸ்பூன் அளவு தேனும் கலந்து தினமும் குடித்து வந்தால் உடல் பலப்படும். அழகும் கூடும். · தினமும் அத்திப்பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தச் சோகை குணமாகும். இரத்தசோகை குணமானால் உடல் ஆரோக்கியம் பெறும்.

· புதினாவுடன் தேங்காய் கலந்து சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உண்ட உணவும் எளிதில் சீரணமாகும். நன்கு பசி தூண்டும். முகப் பொலிவும் உண்டாகும்.

· உலர்ந்த திராட்சைப் பழமோ அல்லது பேரீச்சம் பழமோ பாலில் ஊறவைத்து, அதனுடன் 1 ஸ்பூன் தேன் கலந்து இரவு உணவுக்குப்பின் படுக்கைக்குச் செல்லும் முன் அருந்தி வந்தால் உடல் நலம் பெறும். முகம் வசீகரமாக இருக்கும்.

· பப்பாளிபழம், ஆப்பிள், ஆரஞ்சு, சப்போட்டா பழங்கள் சாப்பிட்டு வந்தால் கன்னக்குழிகள் உண்டாகாது.

· தினமும் ஏதாவது ஒரு கீரை, பசுநெய் சேர்த்துக்கொள்வது நல்லது. உடலுக்குத் தேவையான ஓய்வு தேவை. அதிக ஓய்வும் உடலைக் கெடுக்கும். மேலும் மனதை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக்கொண்டால் முகம் எப்போதும் பொலிவாக இருக்கும். ஆனந்தம் அழகைக் கூட்டும்.face3

Related posts

பொலிவான பளபளக்கும் முகம் வேண்டுமா?

nathan

முகத்தில் உள்ள கருமை போகணுமா?அப்போ இதை செய்யுங்கோ..!!

nathan

நீராவி பயன்படுத்தி முக அழகை மேம்படுத்துவதற்கான முறை

nathan

இரவு படுக்கைக்குச் செல்லும்முன் இருபது நிமிடங்கள் இதற்கு ஒதுக்கினாலே போதுமானது!…தெரிந்துகொள்வோமா?

nathan

ஜொலி ஜொலிக்க சூப்பர் டிப்ஸ்! பாட்டிகளின் இயற்கை அழகுக்கு என்ன காரணம் தெரியுமா?

nathan

உங்களுக்கு தெரியுமா இயற்கை முறையில் வீட்டிலேயே முக அழகை பராமரிக்கும் வழிகள்

nathan

முக அழகை பேண புது வித குறிப்பு!…

sangika

ஜொலிக்கும் அழகு தரும் பலாப்பழ ஃபேஸ் பேக்

nathan

ஆபத்தாகலாம்!! மஞ்சளை பெண்கள் அதிகளவில் எடுத்துக்கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா?

nathan