30.3 C
Chennai
Wednesday, Jul 16, 2025
saffron for skin glow
சரும பராமரிப்பு

அழகை அள்ளித்தரும் குங்குமப்பூ!

சிகப்பழமைப் பெறத் துடிக்கும் பெண்மணிகள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன்றே போதும். இந்த குங்குமப்பூவை எப்படி பயன்படுத்துவது குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்கும பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தினமும் முகத்திலும்,உதடுகளிலும் பூசிவர, உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்.

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும். இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம் பெறும். நக சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும். முகத்திற்கு வசீகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.

மேனியை சிவப்பாக மாற்ற இதோ உங்களுக்காக: எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக் கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது. குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும. அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம். சில பெண்கள் நல்ல நிறமாக இருப்பார்கள். ஆனால் உதடுகள் மட்டும் கருமை படர்ந்து அசிங்கமாக இருக்கும். இப்படிப்பட்ட பெண்கள் குங்குமப்பூவை பயன்படுத்தினால் அழகு தேவதையாக மாறி விடுவார்கள்.
saffron for skin glow

Related posts

குளிப்பதற்கு சோப்பும் ஷாம்புவும் மட்டும்தான் உபயோகிக்க வேண்டுமா?

nathan

சமையலறையில் மறைந்துள்ள சில பாரம்பரிய அழகு பராமரிப்புப் பொருட்கள்!

nathan

டல் சருமத்தையும் டாலடிக்கச் செய்யலாம்! பாரம்பரியம் VS பார்லர் ! ஹெல்த் ஸ்பெஷல்!!

nathan

அழகுக்கு ஆரஞ்சு பழம்

nathan

சருமத் துளைகளை ஆழமாக சுத்தம் செய்வது எப்படி என்று தெரியுமா?

nathan

பெண்களின் கர்ப்பக்காலத்தில் வயிற்றின் ஏற்பட்ட  தழும்புகளை மறையச்செய்யலாம்.

nathan

சீனப் பெண்களின் அழகின் ரகசியங்கள் தெரிஞ்சுக்கனுமா? இத படிங்க!

nathan

பாதாமை எப்படி உபயோகித்தால் சருமத்தின் நிறம் அதிகரிக்கும் ?

nathan

உங்கள் சருமத்திற்கு ஏற்ற பழங்கள் எவை? உப்பிய கன்னம் பெற இந்த பழத்தை யூஸ் பண்ணுங்க!!

nathan