28.5 C
Chennai
Sunday, Nov 24, 2024
egg curd hair
தலைமுடி சிகிச்சை

உங்க முடி ரொம்ப வறண்டு இருக்குதா? இதோ அற்புதமான எளிய தீர்வு

குளிர்காலத்தில் பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் ஓர் பிரச்சனை தலை முடி வறண்டு பொலிவிழந்து இருப்பது தான். பொதுவாக தலைமுடி அழகாக பொலிவோடும் மென்மையாகவும் இருந்தால், அதுவே ஒருவரது அழகை மேம்படுத்திக் காட்டும். முன்பெல்லாம் தலைமுடியை இயற்கை பொருட்களைக் கொண்டு நம் முன்னோர்கள் பராமரித்து வந்தார்கள். ஆனால் தற்போது பியூட்டி பார்லருக்கு சென்று தங்கள் முடிக்கு கெமிக்கல் கலந்த பொருட்களால் பராமரிப்பை மக்கள் கொடுத்து வருகிறார்கள். இதனால் பலர் தலைமுடி உதிர்வை சந்திக்கிறார்கள்.

நீங்கள் உங்கள் தலைமுடி அதிகம் வறண்டு இருப்பது போல் உணர்ந்தால், அதற்காக கவலைப்பட வேண்டாம். நம் வீட்டு சமையலறையில் உள்ள 2 பொருளை வைத்தே தலைமுடியின் வறட்சியைப் போக்கலாம். அது வேறொன்றும் இல்லை முட்டை மற்றும் தயிர் தான். இவை இரண்டுமே தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்களைக் கொண்டவையாகும். இப்போது இந்த பொருட்களை வைத்து தலைமுடிக்கு எப்படியெல்லாம் ஹேர் மாஸ்க் போடலாம் என்பதைக் காண்போம். குறிப்பாக இந்த ஹேர் மாஸ்க்குகள் சுருட்டை முடி உள்ளவர்களுக்கு நல்ல பலனைத் தரும்.

முட்டை, ஆலிவ் ஆயில் மற்றும் தயிர்

ஒரு பௌலில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 3 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை தலைமுடியின் வேர்களில் இருந்து முடியின் முனை வரை தடவி 1-2 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இதனால் தலைமுடியின் வறட்சி நீங்கி, முடி நன்கு மென்மையாக இருக்கும்.

தயிர், தேன் மற்றும் எலுமிச்சை சாறு

ஒரு பௌலில் 4 டேபிள் ஸ்பூன் தயிர், 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை தலையில் தடவி, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இதனால் இதில் உள்ள தயிர் மற்றும் தேன் முடியின் வறட்சியைப் போக்கும், எலுமிச்சை பிசுபிசுப்புத்தன்மையைக் குறைக்கும்.

முட்டை மற்றும் விளக்கெண்ணெய்

ஒரு பௌலில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 3 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதை தலைமுடியில் நன்கு தடவி 1-2 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு கொண்டு அலச வேண்டும். இதனால் விளக்கெண்ணெய் தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும், முட்டையில் உள்ள புரோட்டின், தலைமுடியை வலிமையாக்கும்.

வாழைப்பழம், பால் மற்றும் முட்டை

ஒரு பௌலில் நன்கு கனிந்த ஒரு வாழைப்பழத்தை மசித்து, அத்துடன் 4 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான பால் மற்றும் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை தலைமுடியில் தடவி 45 நிமிடம் முதல் 1 மணிநேரம் வரை ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இதனால் தலைமுடியின் வறட்சி நீங்கி, முடி நன்கு மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

தயிர் மற்றும் கற்றாழை

ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 3 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அதை தலைமுடியில் வேர் முதல் முடியின் நுனி வரை நன்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரால் அலச வேண்டும். இதனால் முடி நன்கு மென்மையாகவும், பொலிவோடும் இருக்கும்.

Related posts

மிளகின் மருத்துவ குணங்கள்…

sangika

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் 6 எளிய வழிகள்!

nathan

தெரிஞ்சிக்கங்க…இயற்கை முறையில் இளநரையை நிரந்தரமாக நீக்கலாம்..!

nathan

கூந்தலுக்கு எண்ணெய் எந்த முறையில் பயன்படுத்த வேண்டும் ..

nathan

உறுதியான தலைமுடிக்கு… 5 வழிகள்

nathan

முடியில் ஸ்பிலிட் எண்ட்ஸ் (பிளவு முனைகள்) இதற்கான காரணங்களும் தீர்வுகளும் இதோ…

nathan

பொடுகை அடியோடு விரட்ட வேண்டுமா?

nathan

சூப்பர் டிப்ஸ்! வெறும் 2 ரூபாய் செலவில் உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கலாம். எப்படினு பாருங்க.

nathan

உங்களுக்கு தலைமுடி அதிகமா கொட்டுதா??? இத பண்ணுங்க முதல்ல

nathan