28.4 C
Chennai
Wednesday, Nov 13, 2024
55
கார வகைகள்

உருளைக்கிழங்கு காராசேவு!

தேவையானவை: உருளைக்கிழங்கு – 2, கடலை மாவு – ஒரு டம்ளர், அரிசி மாவு – கால் டம்ளர், நெய் – ஒன்றரை டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, பெருங்காயம் – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, கட்டிகளில்லாமல் நன்கு மசித்துக்கொள்ளவும். காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு நைஸாக அரைத்துக்கொள்ளவும். அரிசி மாவில் நெய் சேர்த்து… கடலை மாவு, அரைத்த மிளகாய் விழுது, மசித்த உருளைக்கிழங்கு, ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசையவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்தவுடன் காராசேவு கரண்டியில் மாவைப் போட்டு நன்றாகத் தேய்த்து, பொரிந்தவுடன் எடுக்கவும்.
குறிப்பு: காய்ந்த மிளகாய்க்குப் பதில் மிளகாய்த்தூளும் பயன்படுத்தலாம்.
55

Related posts

சுவையான மிளகு வடை ரெடி….

sangika

New Year Special மினி சோள முறுக்கு : செய்முறைகளுடன்…!

nathan

தீபாவளி ஸ்பெஷல்: காரச்சேவு

nathan

சுவையான மொறு மொறு வெங்காய பக்கோடா எப்படி செய்வது?

nathan

இனிப்பு மைதா பிஸ்கட்

nathan

காரா சேவ்

nathan

பூண்டு முறுக்கு

nathan

பருத்தித்துறை வடை

nathan

ஸ்நாக்ஸ் ஓமம் மீன் பஜ்ஜி

nathan