23.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
அழகு குறிப்புகள்முகப் பராமரிப்பு

அழகு பல …….. பேஷியல் டிப்ஸ் (beauty tips in Tamil)

How-To-Make-A-Perfect-Homemade-Mud-Facial-Mask-For-Clear-And-Glowing-Skinவீட்டிலேயே செய்யப்படும் ஃபேஷியல் டிப்ஸ் இவை.நிறைய டிப்ஸ்கொடுக்கப்பட்டுள்ளது. இவைகளில் எது உங்கள் சருமத்திற்கு ஒத்து வரும் என்று பார்த்து ஏதாவது ஒன்றை முயற்சி செய்யுங்கள்.

1. பாதாம் எண்ணெய்

உலர்ந்த சருமத்திற்கு பாதாம் எண்ணெய் தேய்த்து வந்தால் நல்லது.பருக்கள் குழி அடையாளங்களையும் பாதாம் ஆயில் நாளடைவில் நீக்கிவிடும்.ஆயில் கிடைக்காவிடில் பாதாமின் தோல் 3 – 5 எடுத்து தண்ணீர் சேர்த்து அரைத்து தினமும் முகத்தில் தேய்க்கலாம்.

2.பச்சை நிற ஆப்பிள்

பச்சை நிற ஆப்பிளின் சாறு தோல் சுருக்கம்,அரிப்பு,வெடிப்பு அனைத்திற்கும் மிக நல்லது.

3.கடலை மாவு

கடலை மாவில் தயிர் சேர்த்து பிசைந்து பேஸ்ட் செய்து தேய்த்தால் பருக்கள் காணாமல் போய்விடும்.பயித்தம் பயிறு மாவில் தண்ணீர் ஊற்றி குழைத்து தேய்த்து வந்தால் நிறம் கூடும்.

4.தேன்

தேனில் பால்,தயிர்,அரைத்த எள்ளு எல்லாம் சரிசமமாக கலந்து தேய்த்து வந்தால் முகம் பளபளப்பாகவும்,மிருதுவாகவும் ஆகும்.

5.கடலை எண்ணெய்

1 தேக்கரண்டி கடலெண்ணெயில் 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து வந்தால் பரு,கரும்புள்ளிகள் வரவே வராது.

6.பால்

பரு,கரும்புள்ளி அல்லது வெடிப்பு உள்ள முகத்திற்கு காய்ச்சிய 1 கப் பால் குளிர்ந்த பிறகு 1/2 எலுமிச்சையை பிழிந்து,கலந்து கழுவினால் நல்லது.

7.தயிர்

கோதுமை மாவில் தயிர் சேர்த்து க்ளென்ஸராக பயன்படுத்தலாம்.

8.மஞ்சள்

கண்களுக்கு கீழே கருவட்டத்தை நீக்க மஞ்சளில் அன்னாசி சாறு சேர்த்து தேய்த்து வரவும்

பழ பேஷியல்

முகத்தை முதலில் காய்ச்சாத பாலால் துடைக்கவும். சிறிதளவு வெள்ளரிச்சாறு அல்லது ஸ்ட்ராபெர்ரி சாறு எடுத்து சில நிமிடங்கள் ப்ரீசரில் வைத்து அதில் பஞ்சை நனைத்து முகத்தில் ஒற்றியெடுக்கவும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்துக்கு மென்மையான மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கிறபோது கைகளை ஆரஞ்சு சாற்றில் நனைத்துக் கொள்ளவும். கொஞ்சம் பப்பாளிக் கூழ், இரண்டு துளிகள் தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்கு பேக் போடவும்.

Related posts

மாம்பழ கடலை மாவு பேஸ் பேக் இயற்கை முக அழகு குறிப்புக்கள்.!!

nathan

வார இறுதியில் முகத்​ததை​ பிரகாசமனதாக மாற்ற வேண்டுமா? இங்கே சில வழிகள் உள்ளன!

nathan

டிக் டாக் ரவுடி பேபி சூர்யா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது…

nathan

தேன் மற்றும் சர்க்கரை சேர்த்து ஸ்கரப் செய்ய 2 எளிய வழிகள்

nathan

உங்களுக்கு தெரியுமா சரும பிரச்சனைகளைப் போக்கும் மஞ்சள்!

nathan

பெண்கள் சரும சுருக்கம், சரும வறட்சி போன்ற பிரச்சினைகளுக்கு!…

sangika

முகத்திற்கு உடனடி பளபளப்பு தரும் பழம் இதுதான்!!

nathan

இளவரசர் ஹரியின் உண்மையான தந்தை யார்?தோழி கூறும் தகவல்

nathan

முகத்தில் தேவையற்ற முடிகளை நீக்குவதற்கு,tamil beauty tips for face in tamil language,tamil beauty tips for face

nathan