24.2 C
Chennai
Wednesday, Jan 22, 2025
prawn fry
அசைவ வகைகள்

சுவையான ஆந்திரா ஸ்டைல் இறால் ப்ரை

கடல் உணவுகள் அனைத்திலுமே ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் இருக்கிறது. எனவே சிக்கன், மட்டனை விட, கடல் உணவுகள் மிகவும் ஆரோக்கியமானவை. அதிலும் இறால் உடலுக்கு வலிமையைத் தரக்கூடியது. அத்தகைய இறாலை பலரும் மசாலா செய்து தான் சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அதனைக் கொண்டு ஆந்திரா ஸ்டைலில் இறால் ப்ரை செய்து சாப்பிடலாம்.

இந்த ஆந்திரா ஸ்டைல் இறால் ப்ரை அட்டகாசமான சுவையில் இருக்கும். சரி, இப்போது அந்த ஆந்திரா ஸ்டைல் இறால் ப்ரையை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Andhra Style Prawn Fry Recipe
தேவையான பொருட்கள்:

இறால் – 500 கிராம்
வெங்காயம் – 2 (நறுக்கியது)
பூண்டு – 3 பற்கள்
இஞ்சி – 1 இன்ச்
பச்சை மிளகாய் – 3
மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
மல்லித் தூள் – 1 டீஸ்பூன்
சோம்பு தூள் – 1/2 டீஸ்பூன்
தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் இறாலை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்து ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின் மிக்ஸியில் இஞ்சி மற்றும் மிளகாய் சேர்த்து அரைத்து, அதனை இறாலுடன் சேர்த்து, அத்துடன், 3/4 டீஸ்பூன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சிறிது தூவி, நன்கு பிரட்டி, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு இறாலில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து, கொதிக்க விட்டு, பின் மிதமான தீயில் 6-8 நிமிடம் வேக வைத்து இறக்கி, அதில் உள்ள அதிகப்படியான நீரை வடிகட்டி விட வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து வதக்கி, பின் அதில் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கி விட வேண்டும்.

பின்னர் அதில் வேக வைத்துள்ள இறாலை சேர்த்து, அத்துடன் 1/4 டீஸ்பூன் மிளகாய் தூள், மல்லித் தூள், சோம்பு தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து 3 நிமிடம் பிரட்டி, பின் அதில் துருவிய தேங்காய் சேர்த்து மீண்டும் 3 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

இறுதியில் உப்பு சுவை பார்த்து, தேவைப்பட்டால் உப்பு சேர்த்து பிரட்டி இறக்கினால், ஆந்திரா ஸ்டைல் இறால் ப்ரை ரெடி!!!

Related posts

உருளைக்கிழங்கு சாதம் செய்வது எப்படி

nathan

சுவையான கூர்க் ஸ்டைல் ப்ரைடு சிக்கன்

nathan

சைனீஸ் இறால் ப்ரைட் ரைஸ்,tamil samayal kurippu,tamil samayal tips

nathan

ஆட்டுக்கால் பாயா

nathan

கொத்தமல்லி சிக்கன் வறுவல்

nathan

இறால் பஜ்ஜி

nathan

புதுமையான புதினா இறால் குழம்பு செய்ய தெரிந்து கொள்வோம்…

nathan

ஜிஞ்சர் கார்லிக் சிக்கன்

nathan

இஞ்சி பெப்பர் சிக்கன்

nathan