29.5 C
Chennai
Thursday, May 29, 2025
dandruf 002
தலைமுடி சிகிச்சை

பொடுகு என்றால் என்ன? பெண்களே தெரிஞ்சிக்கங்க…

இன்றைய இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் பொடுகுத்தொல்லையால் அவதிப்படுகிறார்கள்.
தோல் வறண்டு போவதால் அழற்சி ஏற்பட்டு வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் பொடுகு உருவாகி உதிரும். தலை, முகம், காது போன்ற பகுதிகளில் இது காணப்படும்.

குழந்தைகளுக்கு வந்தால் அதற்கு பெயர் cradle cap ஆகும்.
காரணம் என்ன?

ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, நோய் எதிர்ப்புத் தன்மையின் மாறுபாடு, அதீத மனஉளைச்சல், தட்பவெப்பநிலை மாறுபாடு, முகப்பரு, எண்ணெய்ப் பசை அதிகம் உள்ள தோல், தலையைச் சுத்தமில்லாமல் வைத்துக் கொள்ளுதல், அதிக உடல் பருமன் போன்றவை இதற்குக் காரணமாகின்றன.

“பிடி ரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்ணியிர் கிருமியினாலும் பொடுகு வரலாம்.
எக்ஸீமா(Eczema), சொரியாஸிஸ்(Psoriasis) போன்ற தோல் நோய்களாளும் பொடுகு வரலாம்.
எப்பொழுதும் எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது போன்ற காரணங்களாலும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

அறிகுறிகள்
இந்நோய் உள்ளவர்களுக்குத் தோலின் தன்மையில் மாற்றம் காணப்படும். தலை, கண் புருவம், மூக்கு, உதடு, காதின் பின்பகுதி, நெஞ்சு போன்ற பகுதிகளில் இது வரலாம். பின்னர் இது பொடுகு போல மாறும். அரிப்பு ஏற்படும், முடி உதிரும்.
பார்த்தவுடன் இதைக் கண்டறிந்துவிட முடியும். இது Psoriasis இல்லை என்பதை, பரிசோதனையின் மூலம் கண்டுபிடித்துவிடலாம்.

எவ்வாறு தவிர்க்கலாம்

1.தலையில் புண் அல்லது வெட்டுகாயம் இல்லாமல் இருந்தால் செலெனியம் சல்ஃபைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள சாம்பை பய்னபடுத்தி தலையை சுத்தம் செய்யலாம்.
இது பொடுகு பெருகுவதை தடுக்கும். புண் இருந்தால் இதை பயன்படுத்தக்கூடாது.
2. சாலிசிலிக் அமிலம் சல்பர் கலந்த சாம்புகளை பயன்படுத்தலாம்.”பிடிரோஸ்போரம் ஓவல்” என்ற நுண்னுயிர் கிருமியால் ஏற்படும் பொடுகு தொல்லைக்கு டாக்டரை பார்க்கவும்.
3. சாம்பார் வெங்காயம் (சின்ன வெங்காயம்) கொஞ்சம் எடுத்து அரைத்து தலையில் தேய்க்கனும். அப்புறம் 15 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும்.
4. பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து தலையில் தேய்க்கவும். 15 நிமிடம் கழித்து குளிக்கவும்.
5. தலையில் தயிர் தேய்த்து குளிக்கலாம்.
6. வாரம் ஒரு முறையாவது நல்லண்ணை தேய்த்து குளிக்க வேண்டும்.
7. பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிச்சால் பொடுகுக்கு ரொம்ப நல்லது.
8. வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லையும் தீரும் உஷ்ணமும் குறையும்.
9. அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன் சேர்த்து நல்லா காய்ச்சி அப்புறம் ஆறவைத்து தினசரி இதனை தலையில் தேய்த்தால் பொடுகு மறையும்.
10. வேப்பிலைசாறும் துளசி சாறும் கலந்து தலையில் தேய்க்கலாம்.dandruf 002

Related posts

கூந்தலின் நுனியில் ஏற்படும் வெடிப்பு கூந்தலை மேலும் வளராது தடுக்கின்றது

nathan

podugu poga tips in tamil – பொடுகு நீங்க சிறந்த வழிகள்

nathan

இரண்டே வாரங்களில் தலைமுடி அடர்த்தியாக வளர ஈஸி டிப்ஸ்…

nathan

2 நாட்களில் முடி உதிர்வதை தடுக்க, 15 இயற்கை வழி முறைகள், எப்படின்னு பாருங்க

nathan

உங்க தலை வழுக்கையா? ஸ்டெம் செல் சிகிச்சை செய்து முடி வளர்க்கலாம் தெரியுமா

nathan

வீட்டில் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தலாம்.

nathan

கூந்தல் 1 அடிக்கு மேல வளர மாட்டேங்குதா? இதை ட்ரை பண்ணுங்க !!

nathan

2 வாரத்தில் தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க இந்த ஹேர் மாஸ்க்கை போடுங்க…

nathan

நரைமுடியை தங்க நிறமாக மாற்றும் எலுமிச்சை சாறு-ஈஸி டிப்ஸ்

nathan