ஆண், பெண் உறவு மகிழ்ச்சியானது மற்றும் சிக்கலானது. தம்பதிகள் இருவரும் உறவில் ஒருவரையொருவர் எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை பொறுத்து, அவர்களின் வாழ்க்கை இருக்கும். பொதுவாக, ஒரு உறவில் தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கதான் விரும்புவார்கள். ஆனால், இருவேறு மனம், விருப்பங்கள், ஆசைகள் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும். உறவில் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். எதிர்பார்ப்புகள் அதிகமாய் இருக்கும் இடங்களில் ஏமாற்றம்தான் ஏற்படும். அதற்காக எதிர்பார்ப்புகளே இருக்க வேண்டாம் என்று அர்த்தமில்லை. எல்லா நேரங்களிலும் எல்லா விஷயங்களை எதிர்பார்க்கக்கூடாது. ஏனெனில், இவை அதிகமாகும்போது எந்தவொரு உறவையும் அழிக்கக்கூடும்.
things-you-shouldn-t-expect-from-your-husband-in-tamil
உங்கள் கணவன், நீங்கள் விரும்பும் அனைத்தையும் செய்வார் என்று எதிர்பார்ப்பது அவர்களுக்கு மிகவும் சுமையாக இருக்கும். உங்களது பங்குதாரர் அவர்களின் திறன்களுக்குள் சாத்தியமில்லாத அல்லது செய்யாத ஒன்றைச் செய்யும்படி கேட்கும் ஒவ்வொரு முறையும் அழுத்தத்தை உணர முடியும். வெற்றிகரமான திருமணத்தைத் தக்கவைக்க, உங்கள் கணவரிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கக் கூடாத சில விஷயங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மனதில் உள்ளதை தெரிந்துகொள்வது
மனதில் உள்ளதை தெரிந்துகொள்வது
உங்கள் கணவர் உங்கள் மனதைப் படிப்பவராக இல்லாவிட்டால், அவர் படிப்பார் அல்லது உங்கள் மனதில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வார் என்று எதிர்பார்க்க முடியாது. யாருடைய மனதையும் யாராலும் சரியாக புரிந்துகொள்ள முடியாது. உங்கள் கணவரிடம் உங்கள் எண்ணங்களைத் தெரிவிக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் அவரிடம் சொல்லாவிட்டால், அவருக்குத் தெரியாது. செயல்களை ஓரளவு மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
மதிப்புகளை மாற்றவும்
உங்கள் கணவர் குழந்தைப் பருவத்திலிருந்தே தனக்குள்ள மதிப்புகளை முற்றாகக் கைவிட்டு, உங்களின் மதிப்புக்கு ஏற்ப மாறுவார் என்று எதிர்பார்க்க முடியாது. வெற்றிகரமான திருமணம் என்பது நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மதிப்புகள் மற்றும் கருத்துக்களுடன் இணைந்து வாழக் கற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றாகும். ஒருவரையொருவர் புரிந்து நடந்துகொள்ள வேண்டும்.
உங்கள் நேரத்தில் விஷயங்களைச் செய்யுங்கள்
ஒவ்வொரு நபரும் தங்கள் சொந்த வேகத்தில் விஷயங்களைச் செய்வதற்கான சொந்த வழியைக் கொண்டுள்ளனர் என்பதை அறிந்து கொள்ளுங்கள். உங்கள் கணவர் நீங்கள் நினைக்கும் காரியங்களை விரைவாக செய்வார் என்று எதிர்பார்க்க முடியாது. காரியங்களை விரைவாகச் செய்தாலும், அது அவனால் சமாளிக்க முடியாத எதிர்மறை அழுத்தத்தை உருவாக்கலாம்.
பாராட்டுங்கள்
உங்களுடைய ஒவ்வொரு சிறிய பழக்கத்தையும் உங்கள் கணவர் பாராட்டாமல் இருக்கலாம், அது பரவாயில்லை. ஒவ்வொரு நபருக்கும் அவர்களுக்குள் குறைபாடுகள் உள்ளன. உங்கள் பங்குதாரர் அதைப் பற்றி வேறுபட்ட கருத்தைக் கொண்டிருக்கலாம். அவர் உங்களை மதிக்கவில்லை என்று அர்த்தமல்ல. எனவே, அதில் பெரிய பிரச்சினையை உருவாக்க வேண்டிய அவசியமில்லை. அவற்றை கடந்து செல்லுங்கள்.
மகிழ்ச்சி
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். உங்களின் எல்லா மகிழ்ச்சிக்கும் உங்கள் கணவர் பொறுப்பல்ல. அதில் பெரும் பகுதியை மட்டுமே அவர் பங்களிக்க முடியும். மகிழ்ச்சி என்பது தன்னை முதலில் அடைய வேண்டும் என்ற உணர்வு. அன்பு, ஆதரவு மற்றும் கவனிப்புக்காக நீங்கள் எப்போதும் உங்கள் கணவர் மீது சாய்ந்து கொள்ளலாம்.