29.7 C
Chennai
Sunday, Dec 22, 2024
சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை போக்க வேண்டுமா?
சரும பராமரிப்பு

சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை போக்க வேண்டுமா?

வயதாகும் போது சருமத்தில் சுருக்கம் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. எனினும் பார்க்க இளமையாக தோற்றமளிக்க வேண்டும் என்றே பலரும் விரும்புவர். இதற்காக, அழகு சாதனப்பொருட்கள் போன்றவற்றிற்காக பணம் செலவு செய்யவும் தயங்க மாட்டார்கள். மென்மையான சருமம் மற்றும் இளமையாக தோற்றமளிப்பதற்காக, சில டிப்ஸ்கள் இதோ

மேக்-அப்போடும் முறை:

மேக்-அப்போடுவதற்கு முன், முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். அதன் பின் மேக்-அப் போட வேண்டும். மேக்-அப் போடும் போது முதலில் டோனர், பின் மாய்ச்சரைசர், அதன் பின் சன்ஸ்கிரீன் லோஷன் என்ற வரிசையில் உபயோகிக்க வேண்டும். மாய்ச்சரைசர் தடவி, மூன்று நிமிடங்கள் கழித்த பின்னரே, மேக்-அப் போட வேண்டும். கலையாமல், அப்படியே இருக்க உதவும்.

சோப்பின் பயன்பாடு:

சோப் அல்லது பாடி வாஷ் பயன்படுத்தும் போது, அவற்றை முகம், அக்குள், தொடை பகுதிகளில் மட்டும் நேரடியாக தேய்க்கலாம். சோப்பை தண்ணீரில் நனைத்து தேய்க்கும் போது வரும் நுரையை மற்ற பகுதிகளில் தேய்க்க வேண்டும். இதனால், சருமத்தில் இயற்கையாக காணப்படும் எண்ணெய்ப் பசை இழக்கப்படுவதை தவிர்க்க முடியும். முகத்தை சோர்வாக காட்டும் அழுக்குகள், பாக்டீரியா ஆகியவற்றை முழுமையாக நீக்க வேண்டியது அவசியம்.

மென்மையான சருமத்துக்கு உணவே முக்கியம்!

மிளிரும், மென்மையான, புத்துணர்ச்சியான மற்றும் மிருதுவான என, பல்வேறு வகையான சருமங்கள் இருக்கின்றன. இத்தகைய சருமங்களை பெறுவதற்காக, ஏராளமான அழகு சாதனப் பொருட்களும் விளம்பரப் படுத்தப்படுகின்றன. ஆனால், நாம் சாப்பிடும் உணவின் மூலமே, சருமத்தை அழகாகவும், ஒளிரும் தன்மை உடையதாகவும் வைத்துக் கொள்ள முடியும். பொதுவாகவே, சரும ஆரோக்கியத்துக்கு வைட்டமின் ஏ, பி, சி, இ, ஆன்டி ஆக்சிடன்ட்கள், சிங்க் மற்றும் செலேனியம் ஆகியவை மிகவும் அவசியம்.

அதிகளவு தண்ணீர் குடிப்பது மற்றும் தோலுக்கு ஈரப்பதத்தை வழங்கும் அத்தியாவசிய கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதும் முக்கியமானது. பருப்பு வகைகள், எண்ணெய் சத்துக்கள் நிறைந்த மீன்கள் மற்றும் ஆளிவ் விதை போன்றவற்றில் இந்த அத்தியாவசிய கொழுப்புக்களான, ஒமேகா-3 கொழுப்பு சத்துக்கள் காணப்படுகின்றன. மிளிரும் சருமம் பெற விரும்புபவர்கள், காபின் போன்ற பொருட்களை தவிர்ப்பது நல்லது. இதோ ஒருவரின் சரும வகைகளுக்கு ஏற்பட சில ஆரோக்கிய டிப்ஸ்கள்.

சென்சிடிவ் சருமத்தினர்:

உணவு முறைகளை திட்ட மிட்டுக் கொள்வதோடு, ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுப் பொருட்களை தவிர்க்கவேண்டும்.பதப்படுத்தப்பட்ட, அதிக சர்க்கரை நிறைந்த மற்றும் பொரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும். சென்சிடிவ் சருமத்தினருக்கு தோலில் எரிச்சல் மற்றும் வைட்டமின் பி பற்றாக்குறையால், வறட்சி, செதில்கள் உதிர்தல் ஆகியவை ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே, அவர்கள் வைட்டமின் பி சத்து அதிகம் நிறைந்த பருப்பு வகைகள், தானியங்கள் ஆகியவற்றை சாப்பிட வேண்டும்.

எண்ணெய் பசை சருமத்தினர்:

எண்ணெய் பசை சருமத்திற்கு ஹார்மோன்களே காரணம். எனவே, இத்தகைய சருமத்தினர், ஹார்மோன் சமநிலையை ஏற்படுத்துவது முக்கியம். பழங்கள், காய்கறிகள் மற்றும் போதுமான அளவு நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடவேண்டும். எண்ணெய் பசை சருமத்திற்கும் வைட்டமின் பி 2 மற்றும் பி 5 பற்றாக்குறைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. எனவே, இந்த வைட்டமின்கள் அதிகளவு நிறைந்த பீன்ஸ் மற்றும் பருப்புகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

புரோக்கோளி, முட்டைகோஸ் மற்றும் காலிபிளவர் ஆகிய காய்கறிகள், அதிகளவு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பதை கட்டுப்படுத்துகிறது. இவை ஹார்மோன் சமநிலை ஏற்பட உதவுகிறது. மாசுமருவற்ற சருமம் பெற, அதிகளவு”சிங்க்’நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். காளானில் அதிகளவு”சிங்க்’சத்துக்கள் நிறைந்துள்ளன.

பிளாஸ்டிக் கண்டெய்னர்களில் உணவுப்பொருட்களை வைத்து மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்துவதை தவிர்க்கவேண்டும். இவற்றால், செனஸ்ட்ரோஜென் எனும் ரசாயனம் உருவாகி, அவை ஹார்மோன் மாற்றங்கள் நிகழ வழி வகுத்துவிடும். உணவுப் பட்டியலில் இருந்து, உடலுக்கு தீங்கு விளைவிக்கும், கெட்ட கொழுப்பு நிறைந்த உணவை நீக்கிவிடுங்கள்.
Aging Process Skin Care Aging Skin Fight Aging Care For Aging Anti Aging Advice Anti Aging Slow Down Aging Aging Process Naturally Aging Face

Related posts

சவர்காரத்திற்கு பதிலாக கடலை மாவு பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள்

nathan

கோடையில் சரும பாதுகாப்பு

nathan

பிரசவத்திற்கு பின் கரீனா கபூர் சிக்கென்று மாறியதன் ரகசியம் தெரியுமா?

nathan

முகத்தில் ஏற்பட கூடிய எல்லா வித பிரச்சினைகளுக்கும் சரியான தீர்வை தர!….

sangika

பெண்களே அடிக்கடி நகம் உடைகிறதா? உங்களுக்குதான் இந்த விஷயம்

nathan

ரோஸ் வாட்டரைக் கொண்டு அழகை அதிகரிக்க சில வழிகள்!!!

nathan

கால்களில் இருக்கும் முடியை அகற்றுவதற்கு இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள்!…

sangika

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் C மற்றும் ஆண்டிஆக்ஸைட் அதிகளவு உள்ளதால் இவற்றின் தோலை முக அழகிற்கு பயன்படுத்தும் போது சருமம் பொலிவுடனும், வெண்மையாகவும் காணப்படும்.

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…கால்களை ஷேவிங் செய்யும் போது செய்யும் தவறுகள்!!!

nathan