28.6 C
Chennai
Sunday, Feb 23, 2025
625.500.560.350.160.300.053.800.90 9
Other News

கோவத்தில் பார்வையாளே எரிக்கும் சிம்மத்தின் அற்புத குணங்கள்!

சிம்ம ராசி வாழ்க்கையை விட பெரியவர்கள். அவர்களுடைய தோற்றம், ஆளுமை இயல்பு, அவர்களுடைய தன்னம்பிக்கை என எதிலும் குறை கூற முடியாது.

சிம்ம ராசிக்காரர்கள் எங்கு சென்றாலும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கத் தவற மாட்டார்கள்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் ரசித்து மகிழ்வார்கள். அவர்களுக்கு சங்கடமான தருணங்களை தாங்கிக் கொள்ளும் ஆற்றல் கிடையாது.

தோல்வி என்கிற வார்த்தை அவர்களுக்கு அந்நியமானது. அவர்களால் முடியும் என்கிற நம்பிக்கையில் எதை வேண்டுமானாலும் செய்வார்கள், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி சட்டை செய்ய மாட்டார்கள்.

​சிம்ம ராசியின் தாராள மனப்பான்மை
சிம்ம ராசியின் தாராள மனப்பான்மை அவர்களை சிறந்த காதலர்களாக்குகிறது. இவர்கள் குறிப்பாக படுக்கையறையில் மிகவும் சாமர்த்தியமானவர்கள்.

எல்லா நேரங்களிலும் தங்களை கம்பீரமாகக் காட்டிக் கொண்டாலும் சிம்ம ராசிக்காரர்கள் பகட்டானவர்கள் அல்ல.

அவர்கள் மீது ஆர்வம் கொண்ட எல்லோருடைய துணையையும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

இருந்தாலும் சிம்ம ராசிக்காரர்களை ஒருமுறை ஏமாற்றிவிட்டால், அவர்களுடைய நம்பிக்கையை திரும்பப் பெறுவதற்கு கடினமாக உழைக்க வேண்டும்.

சிம்ம ராசிக்காரர்களை உண்மையாக விரும்ப வேண்டுமென்கிற நல்ல நோக்கம் கொண்டவர்களுக்கு, நீங்கள் ஏன் சிம்ம ராசியை காதலிக்க வேண்டும் என்பதற்கான 7 காரணங்களை இங்கே காணலாம்.

​சிம்ம ராசிக்காரர்கள் வேடிக்கையானவர்கள் ஊர்சுற்ற விரும்புபவர்கள்
சிம்ம ராசிக்காரர்கள் கூட்டத்தை பார்த்தோ புதிய நபர்களைப் பார்த்தோ கூச்சப்பட மாட்டார்கள். அவர்களுடைய ஒவ்வொரு மயிர்க்கால்களிலிருந்தும் ஆளுமை வழியும், மற்றவர்களை அடக்கும் விதத்தில் இருப்பார்கள்.

ஒரு கூட்டத்தில் இருக்கும் போது தாங்கள் ஆற்றல் வாய்ந்தவர்களாக இருப்பது சிம்ம ராசிக்காரர்களுக்கு நன்றாக தெரியும்.

அவர்கள் சங்கடங்களுக்கு ஆளாவோம் என்று பயப்படுவதில்லை அதே போல முற்றிலும் தெரியாத நபர்களிடம் பேசும் போது கூட கூச்சப்படுவதில்லை.

மிகவும் கண்டிப்பான மனிதர்களுடன் கூட உரையாடுவார்கள், ஒரு பெரிய கூட்டத்தில் கூட ஒற்றை மனிதராக நின்று மிக எளிதாக நேர்ததியாக தாக்குவார்கள். சிம்ம ராசிக்காரர்களின் தைரியத்தை யாராலும் பாராட்டாமல் இருக்க முடியாது.

​இலட்சியம் நிறைந்தவர்கள்
சிம்ம ராசிக்காரர்களுக்கு அவர்களுக்கு வேண்டியதை எல்லாம் எப்படி பெற வேண்டுமென்று தெரியும். அவர்களுக்கு தேவையானதைக் கேட்டுப் பெறுவதற்கு தயங்க மாட்டார்கள். வானத்தை அடைய நினைத்தாலும் தங்கள் இலட்சியத்தை அடைந்தே தீருவார்கள். உயர்ந்த விஷயங்களுக்கு ஆசைப்படுவார்கள்.

தோல்வி என்பது அவர்களுடைய அகராதியில் இல்லாத விஷயமாக இருக்கும். அவர்களிடம் இருப்பது ஏராளமான தன்னம்பிக்கை, அந்த தன்னம்பிக்கையே தடைகளை தகர்த்து முன்னேற அவர்களுக்கு உதவியாக இருக்கும். தோல்விகள் அவர்களை துவளச் செய்ய விட மாட்டார்கள். தன்னைத் தானே அடிக்கடி வருத்திக் கொண்டாலும் அவர்களுடைய துணிச்சல் அவர்களை கனவுகளை அடைய தொடர்ந்து முயற்சி செய்ய அனுமதிக்கிறது.

சிம்ம ராசிக்காரர்கள் எதிர்காலத்தை நோக்கி முன்னோக்கி பயணிக்க விரும்புவார்கள்.

கடந்த காலத்தில் இவர்கள் தேங்கி நிற்பதில்லை. இவர்கள் பொதுவாக கடந்த கால விஷயங்களை விவாதிக்க விரும்புவதில்லை, ஏனென்றால் எதிர்காலத்தை நோக்கி பயணிக்கவே விரும்புவர்.

சிம்ம ராசிக்காரர்களுடன் வாழ்வது உங்களை ஆக்கப்பூர்வமானவராக மாற்றும். மகிழ்ச்சியான நிறைவான வாழ்க்கையாக இருக்கும்.

தலைமைப் பண்பு
சிம்ம ராசிக்காரர்களின் இயற்கையான தலைமைப் பண்பு அவர்களுக்கு ஒரு அதிகார வட்டத்தை உருவாக்கும்.

எனவே அவர்களுக்கு அருகில் இருக்கும் போது நீங்கள் வேடிக்கை பார்ப்பதை தவிர வேறு எந்த விதத்திலும் அவர்களை கட்டுப்படுத்த முடியாது.

அவர்கள் இருக்கும் இடத்தில் மற்றவர்களின் பங்கு இரண்டாம் பட்சம் தான்.

சிம்ம ராசிக்காரர்களை நீங்கள் கட்டுப்படுத்தினால் தான் விரும்ப மாட்டார்களே தவிர, உங்கள் கருத்துக்களை கவனமாக கேட்பார்கள், உங்களை சந்தோஷப்படுத்தும் விஷயங்களை செய்வார்கள்.

Related posts

சுருதிஹாசனுடன் சேர்ந்து ஐ.பி.எல். மேட்ச் பார்த்த லோகேஷ்

nathan

கணவனை இழந்த நடிகையின் கண்ணீர் பேட்டி!!

nathan

நாசாவின் திடீர் எச்சரிக்கை -பெருங்கடலால் அழியப்போகும் நாடுகள் எவை?

nathan

மகனோடு வந்து காதலரை கரம்பிடித்த Amy Jackson!

nathan

கண்கலங்கிய டிடி! உயிர் பிரியும்போது அப்பாவிற்கு செய்து கொடுத்த சத்தியம்!

nathan

‘சேகுவேரா கெட்டப்பில் சிலம்பரசன்’ .. புகைப்படங்கள்

nathan

கண் கலங்கிய செந்தில் ராஜலக்ஷ்மி…

nathan

அமலா பால்… திருமணம் முடிந்து 8 மாதத்தில் எப்படி குழந்தை பிறந்தது.?

nathan

அண்ணன் வெறிச்செயல்! மயிலாப்பூரில் தகாத உறவில் ஈடுபட்ட தம்பி படுகொலை!

nathan