31.6 C
Chennai
Monday, Jul 14, 2025
98a2392d e817 4410 b920 b791fcc48604 S secvpf
சைவம்

உருளைக்கிழங்கு சாதம்

உருளைக்கிழங்கு சாதம்

தேவையானப் பொருட்கள்:

வேக வைத்த சாதம் – 1 கப்
உருளைக்கிழங்கு – 1
காய்ந்தமிளகாய் – 2
தனியா விதை – 1 டேபிள்ஸ்பூன்
கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
நெய் – 1 டீஸ்பூன்
வெங்காயத்தாள் – சிறிதளவு

செய்முறை:

• வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலை உரித்து நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

• வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை வறுத்து எடுத்து, ஆறியவுடன், உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.

• அதே வாணலியில், மீதி எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின் உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு கிளறவும்.

• அடுத்து அதில் மஞ்சள் தூள், சிறிது உப்பு, வறுத்து அரைத்த பொடி சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.

• கடைசியில் சாதத்தைப் போட்டு, அத்துடன் ஒரு டீஸ்பூன் நெய்யையும் விட்டு, மீண்டும் கிளறி விட்டு வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.

• சுவையான உருளைக்கிழக்கு சாதம் ரெடி.

• குழந்தைகளுக்கு இந்த சாதம் மிகவும் பிடிக்கும்.

98a2392d e817 4410 b920 b791fcc48604 S secvpf

Related posts

சூப்பரான சாமை அரிசி பிரியாணி

nathan

பேச்சுலர்களுக்கான.. சுலபமான.. வெஜிடேபிள் பிரியாணி

nathan

சுவையான 30 வகை பிரியாணி

nathan

முளைக்கீரை தயிர்க்கூட்டு செய்வது எப்படி

nathan

ஐயங்கார் ஸ்டைல் காய்கறி கதம்ப சாதம்

nathan

தக்காளி சாதம்!!!

nathan

பாலக் பன்னீர் ரெசிபி

nathan

காலிப்ளவர் பட்டாணி பனீர் மசாலா

nathan

வாழைக்காய் வெல்லக்கூட்டு

nathan