25.9 C
Chennai
Tuesday, Dec 24, 2024
c41e9485 418c 4f2b 8b01 36ff1e497109 S secvpf1
மணப்பெண் அலங்காரம்

தங்கமாய் மின்னும் மணப்பெண் சேலைகள்

திருமண வைபவத்தின் அனைத்து நிகழ்வுகளும், அழகியல் நோக்கோடு உற்று நோக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. அதிலும் குறிப்பாக மணப்பெண் ஆடை அலங்காரம் அதிமுக்கியமானது. திருமணத்திற்கு என மணப்பெண் தேர்ந்தெடுக்கும் முகூர்த்தப்பட்டு மிகுந்த கலைநயம் மற்றும் பார்பவர் வியக்கும் வகையில் இருந்தல் வேண்டும்.

முகூர்த்த சேலைகள் என்பது தற்போது பட்டு எம்ப்ராய்டரி, டிசைனர் என்றவாறு பலவாறு உலாவந்தாலும் பெரும்பாலான பெண்களின் விருப்பம் பட்டு சேலை மட்டும். புதிய வடிவமைப்பு மற்றும் நேர்த்தியுடன் முகூர்த்த சேலைகள் விற்பனைக்கு வருகின்றன. பட்டு புடவைகள் முன்பு மாதிரியான ஒரே நிறம், ஒரே டிசைன் என்பது மாற்றமடைந்து பல நிறம் மாறுபட்ட வடிவமைப்பு கூடுதல் அழகியல் நேர்த்தி என்றவாறு தனித்தன்மையுடன் நெய்யப்படுகிறது.

இவை நவநாகரீக பெண்கள் விருப்பத்திற்கு ஏற்ப கணிணி உதவியுடன் வடிவமைக்கப்படுவதால் ஒவ்வொரு முகூர்த்த சேலையும் தனிப்பட்ட சிறப்புகளை கொண்டவாறு உள்ளன. பட்டுப்புடவைகளின் தயாரிப்பு முதல் டிசைன் வரை அனைத்திலும் கணிணி தொழில்நுட்பம் புகுந்துள்ளதால் நமது எண்ணங்களை வண்ணமயாமாக்கும் அற்புதமான வடிவமைப்பில் திருமண முகூர்த்த சேலைகள் உருவாக்கப்படுகின்றன, பாரம்பரிய பட்டுசேலைகளில் ஜர்தோஸி எம்பிராய்டரி, வேலைப்பாடு, கற்கள் பதிப்பது, கருத்துறு ஓவியங்கள், மணமக்கள் உருவங்கள் பதித்த பட்டு சேலை என்றவாறு பல புதுமை வடிவமைப்புகள் புகுத்தப்பட்டுள்ளன.

இவைகளுக்கு விற்பனை நிலையங்கள் விவாகா, சாமூபுர்ரிகா, வஸ்தரகலா, பரம்பரா மற்றும் பிரைடல் கலெக்ஷன் என்றவாறு தனித்துவ பெயரும், அதற்கேற்ற தனி நேர்த்தியும் வடிவமைப்பும் கொண்ட பட்டு சேலைகள் தயார் செய்து விற்பனை செய்கின்றன. முற்றிலும் தகதகக்கும் தங்க நிறத்தில் அடர்த்தியான குங்கும நிற பின்னணியில் ஜொலிக்கும் முகூர்த்த சேலை அழகிய வேலைப்பாட்டின் அற்புதமாய் திகழ்கிறது. தனியாக சரிகை பார்டர் இல்லாமல் புடவை முழுமையும் சரிகையால் பூக்கள், மரக்கிளை, இலை என முகூர்த்த சேலைகள் தங்க நிறத்தில் பிரமாதமாய் ஜொலிக்கின்றன.

இதில் இணைப்பாக பிளவுஸ் வருகிறது. புதிய வரவான முகூர்த்த சேலைகள் சிகப்பு நிற பின்னணியில் தங்க சரிகை புடவை முழுவதும் புகுந்தோடியுள்ளது. இதில் முந்தி மிகசாதாரண அமைப்பாகவும், புடவை பகுதியில் அழகிய தங்க இலைகள் வரிசையாக உள்ளவாறு நெய்யப்பட்டுள்ளது. மேலும் பார்டர் சிறிய அளவில் ஜரிகை பிளைனாகவும், கீழ்புற பார்டர் மிக அகலமாக அதில் மரம், கிளை, பழ கொத்து, பழங்கள் அழகாய் சரிகையில் நெய்யப்பட்டுள்ளது. சிகப்பு நிற பின்னணில் அணியும் போது பழத்தோட்டமே தங்கமயமாய் மின்னுகிறது.

தற்போது மணமக்களின் அழகிய மார்பளவு உருவம் தங்கசரிகைகளால் முந்தியில் நெய்யப்பட்டு பிரத்யேக முகூர்த்த சேலைகள் உருவாக்கப்பட்டு தரப்படுகின்றன. இவை ஆர்டர் செய்து பெற வேண்டியது. மேலும புடவைகள் மற்ற வடிவமைப்புகளை நாம் முன்கூட்டியே பார்த்து கூறி நெய்வதால் இது பட்டு சேலை நமக்காக தயாரிக்கப்படும் தனித்துவம் மிகுந்த முகூர்த்த பட்டு சேலையாக திகழ்கிறது.

c41e9485 418c 4f2b 8b01 36ff1e497109 S secvpf

Related posts

invitations for weddings :ஒவ்வொரு வகை திருமண அழைப்பிதழ்

nathan

மணப்பெண் அழகுடன் திகழ சில நடைமுறைகள்

nathan

Home Wedding Decorations | வீட்டு திருமண அலங்காரங்கள்: எளிமையான மற்றும் பிரமிக்க வைக்கும் யோசனைகள்

nathan

brides mother dresses | மணமகளின் தாய் ஆடைகள்: சரியான பொருத்தத்தைக் கண்டறிவதற்கான வழிகாட்டி

nathan

ஃபிரண்ட் கல்யாணத்துக்கு போறீங்களா? உங்களுக்கான சூப்பர் மெகந்தி டிசைன்கள் !இதை முயன்று பாருங்கள்

nathan

மணப்பெண்ணுக்கு எப்படி அலங்காரம் செய்ய வேண்டும்?

nathan

Bridesmaids Sarees : Simple Sarees

nathan

பட்டுச்சேலைகளை துவைக்கும் முறை

nathan

அழகு குறிப்புகள்:மணப்பெண் அலங்காரம்!

nathan