28.1 C
Chennai
Sunday, Dec 22, 2024
766e2d87 96f9 426e 91aa 6b4b73ead3da S secvpf
முகப் பராமரிப்பு

முகத்தையும், கூந்தலையும் பாதுகாக்கும் அரிசி கழுவிய தண்ணீர்

அரிசி கழுவிய தண்ணீர் அழகு பராமரிப்பிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அரிசி கழுவிய நீரானது கூந்தலின் எலாஸ்டிசிட்டியை(Elasticity) அதிகரித்து, அதனால் முடி பாதிக்கப்படுவது தடுக்கப்படுவதாக ஆய்வுகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

அரிசியை நன்றாக 2 முறை கழுவிக்கொள்ள வேண்டும், பின்னர் அரிசியை சுத்தமான நீரில் 1/2 மணி நேரம் ஊறவைத்து, அந்த நீரை வடிகட்டவேண்டும். பின்னர் அந்நீரால் முகத்தையும், கூந்தலையும் பராமரிக்கலாம். இவ்வாறு செய்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தும் நீங்குவதோடு, சருமத்துளைகளும் அடைக்கப்படும்.
[center]766e2d87 96f9 426e 91aa 6b4b73ead3da S secvpf[/center]
அரிசி கழுவிய நீரில் உள்ள சத்துக்கள் சருமத் துளைகளின் வழியே சரும செல்களுக்கு கிடைத்து, சருமம் ஆரோக்கியமாகவும் பொலிவோடும் இருக்கும். அதற்கு தினமும் ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும், அரிசி கழுவிய நீரினால் கழுவ வேண்டும். கூந்தல் அதிக வறட்சியுடன் மென்மையின்றி இருந்தால், அப்போது அரிசி கழுவிய நீரைக் கொண்டு கூந்தலை அலசி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் சுத்தமான குளிர்ந்த நீரில் கூந்தலை அலச வேண்டும்.

இதனால் கூந்தலின் மென்மைத்தன்மை அதிகரிக்கும். மேலும் முடியின் இயற்கை நிறமும் பாதுகாக்கப்படும். இந்நீரில் கார்போஹைட்ரேட்டுகளும், ஊட்டச்சத்துகளும் வளமாக நிறைந்துள்ளதால் இதனை குடிப்பதன் மூலம் உடலுக்கு ஆற்றல் கிடைக்கும்.

Related posts

முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை எப்படி போக்குவது?

nathan

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கும் வீட்டு வைத்தியம்

nathan

இயற்கை முறையில் கரும்புள்ளிகளை நீக்க சில வழி.

nathan

இதோ சூப்பர் டிப்ஸ்! முகப்பருவை நிரந்தரமான போக்கனுமா?

nathan

கரும்புள்ளியைப் போக்க இதை முயன்று பாருங்கள்!

nathan

சாக்லேட் எப்படி உங்களுக்கு சூப்பர் அழகை தரும் தெரியுமா?

nathan

வீட்டிலேயே கோல்டு ஃபேஷியல் செய்வதற்கான சுலபமான வழி இதோ…!

nathan

உதடுகளை பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்….

nathan

சருமத்தை தங்கம் போல் ஜொலிக்க கோல்டன் பேஷியல்….?சூப்பர் டிப்ஸ்…

nathan