24.9 C
Chennai
Tuesday, Jan 21, 2025
16dde22e 1a69 49b6 a7ab d643671ac338 S secvpf
முகப் பராமரிப்பு

பெண்களே தெரிஞ்சிக்கங்க…மஞ்சள் ஃபேஷ் பேக் போடும் போது தவிர்க்க வேண்டியவை

மஞ்சளில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. ஆனால் இன்றைய காலத்தில் மஞ்சள் தேய்த்துக் குளிப்போரின் எண்ணிக்கை குறைவு. மாறாக மஞ்சளைக் கொண்டு ஃபேஸ் பேக் தான் போடுகிறார்கள். பெண்கள் மஞ்சளை முகத்திற்குப் பயன்படுத்தும் போது ஒருசில தவறுகளை செய்கின்றனர். அது என்னவென்று பார்க்கலாம்.

மஞ்சளின் முழு பலனையும் பெற வேண்டுமானால், சரியான பொருட்களுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். அதுவும் ரோஸ் வாட்டர், பால் மற்றும் தண்ணீர் தான் மஞ்சளுடன் கலந்து பயன்படுத்துவதற்கான சிறந்த பொருட்கள். இப்பொருட்களில் ஏதேனும் ஒன்றுடன் மஞ்சளைக் கலந்து பயன்படுத்தினால், முழு பலனையும் பெறலாம்.

மஞ்சளைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டால், அதனை மணிக்கணக்கில் ஊற வைக்கக்கூடாது. எப்போதுமே மஞ்சள் ஃபேஸ் பேக் போட்டால், 20 நிமிடத்திற்கு மேல் வைக்காதீர்கள். இல்லாவிட்டால், அது மஞ்சள் நிற கறைகளை சருமத்தில் ஏற்படுத்தும். மஞ்சள் கொண்டு ஃபேஸ் பேக் போட்ட பின்னர், குளிர்ந்த நீரினால் முகத்தை நன்கு கழுவி, பின் துணியால் தேய்த்து துடைக்காமல் ஒற்றி எடுக்க வேண்டும்.

ஃபேஸ் பேக் போடும் போது பலரும் முகத்திற்கு மட்டும் தடவி, கழுத்தை மறந்துவிடுவோம். இதனால் கழுத்துப் பகுதி மட்டும் வித்தியாசமான நிறத்தில் இருக்கும். எனவே எப்போதும் மாஸ்க் போடும் போது, கழுத்துப் பகுதியிலும் மறக்காமல் பயன்படுத்துங்கள். இதனால் முகம் மற்றும் கழுத்து ஒரே நிறத்தில் இருக்கும். முதலில் முகத்திற்கு மஞ்சளைப் பயன்படுத்திய பின், சோப்பைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். சோப்பானது முகத்தில் போட்ட ஃபேஸ் பேக்கினால் கிடைக்கும் நன்மைகளைக் கெடுத்துவிடும்.

 

Related posts

மூக்கைச் சுற்றியிருக்கும் வெள்ளைப்புள்ளிகளை நீக்க சில டிப்ஸ்…!

nathan

பெண்களே தெரிஞ்சிக்கங்க…வசீகரிக்கும் வெள்ளை அழகு வேண்டுமா?

nathan

அழகு பல …….. பேஷியல் டிப்ஸ்

nathan

கரு வளையம், கரும் புள்ளிகளால் அவஸ்தையா?

nathan

தாடியை வளர வைக்க இந்த 9 உணவுகளில் ஒன்றை சாப்பிட்டாலே போதும்!

nathan

முகத்தில் உண்டாகும் பருத் தழும்புகளுக்கு இலவங்கப்பட்டை ஃபேஸ் மாஸ்க்.

nathan

ஸ்டிக்கர் பொட்டு அலர்ஜியால் வரும் கருமை மறைய டிப்ஸ்

nathan

உங்களுக்கு தெரியுமா சரும சுருக்கத்தை தடுக்கும் கேரட் பீட்ரூட் ஜூஸ்

nathan

உங்களுக்கான தீர்வுஎண்ணெய் வழியும் சருமத்திற்கு…

nathan