டபுள் ஷேடு புடவைகள் பகல் வெளிச்சத்தில் ஒரு மாதிரியாகவும், இரவு வெளிச்சத்தில் வேறு மாதிரியும் தெரியும். ஆதலால், புடவையையும் நகையையும் பகல் நேரத்தில் பார்த்து வாங்கினால் சரியாக அமையும். முகூர்த்தத்துக்கு பெரும்பாலும் மெரூன், பச்சை அல்லது மாம்பழ கலர் புடவை அணிவார்கள்.
திருமணம் என்பது சென்டிமென்ட்டுகள் நிறைந்த ஒரு சடங்கு என்பதால், மணப்பெண்களுக்கு வாங்கும் புடவைகளில், அதிக அக்கறை காட்டுவார்கள். தாம் கட்டிய புடவை இதுவரை யாரும் கட்டிருக்க கூடாது என்று, எல்லோரும் நினைப்பது இயல்பு. பழமைக்கும், புதுமைக்கும் சம அளவு முக்கியத்துவம் கொடுக்கும் பெண்களுக்கு, இரண்டும் கலந்த புது டிசைன்களில் இன்று, நிறைய புடவைகள் வந்திருக்கின்றன என்பது மகிழ்ச்சியே!
ஆடம்பர வேலைப்பாடு செய்த புடவைகளுக்கு அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் இன்றைய பெண்கள். ஆனால், மணப்பெண்களுக்காக புடவை வாங்கும் போது, அவர்களது வசதிக்கேற்ப அதாவது, அவர்களது நிறம், உடல் வாகு, போன்றவற்றின் அடிப்படையில் வாங்கினால் சரியாக இருக்கும்.