2 5
சரும பராமரிப்பு

கரும்புள்ளிகளை நீக்கி சருமத்தை பளபளப்பாக்கும் குளியல் பவுடர்

இன்று பல வாசனை சோப்புகளாலும், பவுடர்களாலும் உடலில் ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு சருமம் பாதிக்கப்படுகிறது. இதனால் 30 வயதிலேயே முகச் சுருக்கம், தோல் சுருக்கம் ஏற்படுகிறது. மேலும் அன்றாடம் உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லாததாலும், சரியாக நீர் அருந்தாததாலும், சருமம் வறட்சியடைகின்றது.

சரும பாதிப்புக்களுக்கு இயற்கை மூலிகைகளைக் கொண்ட குளியல் பொடிகளை உபயோகப்படுத்தினால் சருமம் பளபளப்பதுடன் பாதுகாப்பும் கிடைக்கிறது.

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்

சோம்பு – 100 கிராம்

கஸ்தூரி மஞ்சள் – 100 கிராம்

வெட்டி வேர் – 200 கிராம்

அகில் கட்டை – 200 கிராம்

சந்தனத் தூள் – 300 கிராம்

கார்போக அரிசி – 200 கிராம்

தும்மராஷ்டம் – 200 கிராம்

விலாமிச்சை – 200 கிராம்

கோரைக்கிழங்கு – 200 கிராம்

கோஷ்டம் – 200 கிராம்

ஏலரிசி – 200 கிராம்

பாசிப்பயறு – 500 கிராம்

இவைகளை காயவைத்து தனித்தனியாக அரைத்து பின் ஒன்றாகக் கலந்து வைத்துக்கொண்டு, தினமும் குளிக்கும் போது, தேவையான அளவு எடுத்து நீரில் குலைத்து உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால் நறுமணம் வீசுவதுடன் உடல் பொலிவுடன் இருக்கும் .

இவ்வாறு தொடர்ந்து குளித்து வர சொறி, சிரங்கு, தேமல், படர்தாமரை, கரும்புள்ளி, வேர்க்குரு, கண்களில் கருவளையம், முகப்பரு, கருந்திட்டு முதலியவை மாறும். மேலும் உடலில் உண்டாகும் நாற்றமும் நீங்கும். மேனி அழகுபெறும்.

இது பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பயன்படுத்த உகந்த வாசனை குளியல் பொடியாகும்.

Related posts

பதினைந்தே நாட்களில் பொலிவான மற்றும் இளமையான தோற்றத்தைப் பெற

nathan

10 நாட்களில் தேமல் முற்றாக மறைந்துவிட இத செய்யுங்கள்!…

sangika

உங்களுக்கு தெரியுமா உப்பு தண்ணீரில் குளிப்பதால் கிடைக்கும் அருமையான நன்மைகள்!!

nathan

சருமத்தை தூய்மையாக்கும் கிளிசரின்,beauty tips on tamil

nathan

அக்குள் கருமையை போக்கும் அரிசி ஸ்கரப்

nathan

மென்மையான சருமம் வேண்டுமா?

nathan

ரசாயனக் கலப்பற்ற கற்றாழை ஜெல்……

sangika

சரும பிரச்சனைகள் அனைத்திற்கும் விரைவில் பலன் தரும் இந்த தைலம் பற்றி தெரியுமா?அப்ப இத படிங்க!

nathan

குளிர் சருமம் குளி!

nathan